சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் மகிழவைக்கும் ஒரு நிகழ்ச்சி Air Show. பொதுவாக அந்தந்த நாட்டின் வான் படையினரால் நடாத்தப்படும் Air Show சுதந்திர தினம் போன்ற நாட்களின் முக்கிய அம்சமாக இருக்கும். விமான பயன்பாட்டின் அதீதங்களை உள்ளடக்கும் இந்நிகழ்வுகள் ஆபத்துக்களையும் கொண்டன. கடந்த ஒரு கிழமையில் மட்டும் 3 Air Show விபத்துக்களில் மொத்தம் 9 உயிர்கள் பலியாகியுள்ளன. . கடந்த 15 ஆம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) நகரில் நடைபெற்ற Air […]
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்கொக்கில் (Bangkok) உள்ள இந்து ஆலயம் ஒன்றின் அருகில் குண்டு ஒன்று இன்று திங்கள் வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்புக்கு 19 உயிர்கள் பலியாகி உள்ளதுடன் சுமார் 120 பெயர்கள் வரை காயமடைந்து உள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை. . இறந்தவர்களில் 10 பெயர்கள் தாய்லாந்து நாட்டினர் எனவும், இருவர் சீனர் எனவும், ஒருவர் பிலிப்பீன் நாட்டவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனைய உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. . […]
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்குக்கு அண்மையில் உள்ள ரியன்ஜின் (Tianjin) என்ற கைத்தொழில் நிறுவனங்கள் நிறைந்த துறைமுக நகரில் புதன் இரவு நடைபெற்ற விபத்தில் 50 உயிர்கள் வரை பலியாகி உள்ளன. அத்துடன் 700 இக்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர். பலியானவர்களுள் 12 தீயணைப்பு படையினரும் அடங்குவர். . இந்த விபத்து உள்ளூர் நேரப்படி புதன் இரவு 11:30 இக்கு இடம்பெற்றுள்ளது. ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு வெடிப்புகள் இடம்பெற்று உள்ளன. இரண்டாவது வெடிப்பு மிகவும் பெரியது எனவும், […]
Coca-Colaவின் கைக்கூலிகளாக செயல்படும் சில கலாநிதிகள் பற்றிய கட்டுரை ஒன்றை New York Times பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது. . அதிகமாக சுவையூட்டிய, அதிகூடிய calories கொண்ட Coca-Cola போன்ற பாணங்கள் உடல் பருமனை அதிகரிக்கின்றன என்ற கருத்தை மூடி மறைத்து பதிலாக போதிய உடல் பயிட்சிகள் இல்லாமையே உடல் பருமனை அதிகரிக்கின்றன என்ற கருத்தை மக்கள் மத்தியில் ‘விஞ்ஞான’ கருத்தாக பரப்ப சில கலாநிதிகளை பணம் கொடுத்து அமர்த்தியுள்ளது.. . Steven N. Blair என்ற […]
இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதியில், மடகாஸ்கருக்கு (Madagascar) கிழக்காக உள்ள Reunion என்ற தீவில் கரை ஒதிங்கியுள்ள விமான பாகம் ஒன்று கடந்த வருடம் காணாமல் போயிருந்த மலேசிய விமானம் MH370 இன் பாகமா என்பதை ஆராய அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளார்கள். இங்கு ஒதிங்கியுள்ள பாகம் சுமார் 2 மீட்டர் நீளமானதாகும். . ஒதிங்கியுள்ள பாகம் Boeing 777 வகை விமானத்தின் இறகுகளில் உள்ள flaperon என்ற பாகாமாக தெரிகிறது என்று ஓர் அதிகாரி கூறியுள்ளார். 2014 ஆம் […]
நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த Windows 10 என்ற OS (Operating System) ஐ இன்று புதன் (2015/07/29) வெளியிடுகிறது Microsoft நிறுவனம். வழமைக்கு மாறாக இந்த OS பலருக்கு இலவசமாகவும் கிடைக்கவுள்ளது. தற்போது சட்டப்படியான Windows 7 Home, Premium மற்றும் Windows 8 OS கள் மூலம் இயங்கும் கணனிகள் மற்றும் smart phone கள் இந்த Windows 10 ஐ இலவசமாக இறக்கம் செய்யலாம். . 1995 ஆம் ஆண்டில் Windows 95 […]
சூரிய மண்டலத்தின் எல்லையில் இருக்கும் புளுட்டோவை (Pluto) படம் பிடிக்க 2006 ஆம் ஆண்டில் NASAவினால் New Horizon என்ற விண்கலம் ஏவப்பட்டு இருந்தது. சுமார் 9.5 வருடங்களில் 4.8 பில்லியன் km தூரம் பயணித்த அக்கலம் இன்று புளுட்டோவுக்கு அண்மையாக, 12,500 km தூரத்தில் செல்கிறது. அப்போது அதன் வேகம் 45,000 km/h. . மேலும் சில நாட்களில் இந்த கலம் புளுட்டோவை படம் பிடித்து NASAவுக்கு அனுப்பும். . புளுடோவுக்கு Charon, Styx, Nix, […]
இன்று ஞாயிற்றுக்கிழமை SpaceX (Space Exploration Technologies) நிறுவனத்தினால் Cape Canaveral தளத்தில் காலை 10:21 மணிக்கு ஏவப்பட்ட Falcon 9 என்ற கலம் ஏவப்பட்டு 2 நிமிடம் 19 செக்கன்களில் வெடித்து அத்திலாத்திக் சமுத்திரத்தில் வீழ்ந்துள்ளது. மனிதர்கள் அற்ற இந்த கலத்தில் International Space Stationக்கு (IIS) பொருட்கள் எடுத்து சென்றிருந்தது. . இது 208 அடி நீளமானது. வெடிக்கும் போது அக்கலம் 32 km உயரத்தில் 1 km/second வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. இதில் 4,000 […]
ஐரோப்பிய ஒன்றியத்தின் 19 நிதி அமைச்சர்கள் இன்று சனிக்கிழமை மீண்டும் ஒருமுறை அவசரமாக கூட உள்ளார்கள். இந்த கூட்டத்தின் நோக்கம் bankruptcy ஆகவுள்ள கிரேக்கத்தை (Greece) பாதுகாக்க வழி செய்வதே. இது விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது. . நீண்ட காலமாக தமது வரவுகளுக்கு அப்பால் செலவுகளை செய்துவந்த கிரேக்கம் பெருமளவு கடனை IMF அமைப்பிடம் பெற்று வந்திருந்தது. அக்கடன்களின் ஒரு பகுதியான 1.6 பில்லியன் யூரோக்களை வரும் செவ்வாய்க்கிழமை கிரேக்கம் IMF […]
சிம்பாப்வே (Zimbabwe) நாட்டின் மத்திய வங்கி அந்நாட்டு நாணயமான Zimbabwe Dollar ஐ பாவனையில் இருந்து நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அத்துடன் சிம்பாப்வே நாணயம் வைத்திருப்போர் அவற்றை அமெரிக்க டொலருக்கு மாற்றம் செய்தல் வேண்டும். இந்த நாட்டின் மீது மற்றைய நாடுகள், குறிப்பாக மேற்கு நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையே அவர்களின் நாணய வீழ்ச்சிக்கு காரணம். . இதன்படி 175 quadrillion (ஆயிரம் மில்லியன் மில்லியன் அல்லது 1,000,000,000,000,000) சிம்பாப்வே டொலர் வைத்திருப்போருக்கு U$ 5.00 வழங்கப்படும். அதற்கு […]