சுமார் 9 வருடங்களின் பின் அமெரிக்காவின் Federal Reserve தனது மத்திய அரச வட்டியை 0.25% ஆல் அதிகரித்துள்ளது. நீண்ட காலமாக இந்த வட்டி ஏறக்குறை பூச்சியமாகவே இருந்து வந்தது. அமெரிக்காவின் பொருளாதாரம் ஓரளவு வளர்ந்து உள்ளதால் அந்நாட்டின் மத்திய திறைசேரி தனது வட்டியை .25% ஆல் அதிகரித்துள்ளது. . இந்த வட்டி வீத அதிகரிப்பு அமெரிக்கர் வீடு, கார் போன்ற பெரும் செலவுகளுக்கு கடன் பெறுவதை சற்று கடினப்படுத்தும். ஆனால் அதேவேளை அமெரிக்க டொலாரின் மதிப்பு […]
முன்னொரு காலத்தில் சீனர் வறியவர் ஆக இருந்திருந்தாலும் இப்போது அங்கு பெருமளவு செல்வந்தர் உள்ளனர். அவ்வகை செல்வந்தர் எவ்வாறு அமெரிக்க வீடுகளை அள்ளி எடுக்கிறார்கள் என்பதை விபரித்து New York Times பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாட்டு வீடுகளும் இவ்வகையில் செல்வந்த சீனர்களால் கொள்வனவு செய்யப்படுகிறது. . தற்போது சராசரியாக சீன நாட்டவர் கொள்வனவு செய்யும் அமெரிக்க வீடு ஒன்று $831,800 பெறுமானம் கொண்டதாகும் என இக்கட்டுரை […]
சில சந்ததிகளுக்கு முன் செல்வம் நிறைந்த நகர்களாக இருந்த பல அமெரிக்க நகர்கள் இன்று சுருங்கி அழியும் நிலையை நோக்கி செல்கின்றன. உதாரணமாக 1950 ஆம் ஆண்டு அளவில் அமெரிக்காவின் செல்வம் நிறைந்த ஒரு நகராக இருந்த Detroit என்ற Michigan மாநில நகர் இன்று பொருளாதார, சனத்தொகை அழிவுகளால் bankruptcy அடைந்த நகர். இவ்வாறு பல நகர்கள் வேலைவாய்ப்புகளை இழந்து, அதன் காரணமாக மக்கள் வெளியேற சனத்தொகையை இழந்து, அதன் காரணமாக பொருளாதாரத்தை இழந்து அழிகின்றன. […]
ரஷ்யாவின் Su-24 வகை யுத்த விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவின் கூற்றின்படி இந்த யுத்த விமானம் துருக்கி எல்லையில் இருந்து 1 km தூரம் சிரியாவின் உள்ளே இடம்பெற்றுள்ளது. Cold-war கால எதிரிகளான ரஷ்யாவும், துருக்கியும் மீண்டு முறுகல் நிலையை அடைந்துள்ளன. . இந்த தாக்குதலை “முதுகில் குத்தல்” என்றுள்ளார் ரஷ்யாவின் பூட்டின். தாம் இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேவேளை இருதரப்பையும் அமைதி காக்கும்படி ஐரோப்பிய நாடுகள் கேட்டுள்ளன. […]
மேற்கும், சவுதி போன்ற மேற்கு சார் அரபு நாடுகளும் தமக்கு உடன்படாத சிரியாவின் தலைவர் Assad தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு தமது கைப்பொம்மை அரசை அமைக்க ஒரு உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கி இருந்தனர். யுத்தம் நீண்டு சென்றபோதும், பல்லாயிரக்கணக்கானோர் மாண்ட போதும், Assad பதவி விலகும்வரை யுத்த நிறுத்தம் இல்லை என்றும் பிடிவாதமாக இருந்தனர் இவர்கள். . ஆனால் பிள்ளையார் பிடிக்க பூதம் வந்ததுபோல் இந்த யுத்தத்தால் உருவான ஆட்சியில்லாத பாகங்களில் தோன்றியது IS என்ற பயங்கரவாத […]
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் சென்ற இரண்டு பெரிய விமானங்கள் இடைவழியில் தரை இறக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தலை விடுத்தோர் பற்றிய விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. . அமெரிக்காவின் Los Angeles நகரில் இருந்து பாரிஸ் சென்ற AF65 விமானம் Salt Lake City நகரில் தரை இறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு மிகப்பெரிய பயணிகள் விமானமான AirBus 380 ஆகும். இதில் 400 க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். . அத்துடன் அமெரிக்காவின் தலைநகர் […]
France நாட்டின் Paris நகரில் உள்ள உணவகம் உட்பட பல இடங்களில் வெள்ளி இரவு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், அரங்கு ஒன்றில் பெருமளவு பொதுமக்கள் பணயம் வைக்கப்படுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. . உள்ளூர் தொலைக்காட்சி நிலைய செய்திகளில் 100 க்கும் மேற்பட்டோர் அரங்கு ஒன்றில் பணயம் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. அதே நேரம் இடம்பெற்ற வேறு பல தாக்குதல்களுக்கு 128 பேருக்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னுமோர் இடத்தில் தற்கொலை தாக்குதலும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இச்செய்திகள் உள்ளூர் […]
அமெரிக்கா H-1B என்ற தற்காலிக வேலைவாப்பு விசாவை வெளிநாட்டவர்க்கு வழங்குவதுண்டு. அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள், தமக்கு தேவையான வல்லுனர்கள் அமெரிக்காவில் கிடைக்காதுவிடின், இந்த விசா மூலம் உலகம் எங்கிருந்தும் வல்லுனர்களை குறிப்பட்ட காலத்துக்கு வரவழைத்து பணியில் ஈடுபடுத்தலாம். வருடம் ஒன்றில் சுமார் 85,000 H-1B விசாக்கள் வழங்கப்படும். . இந்த விசா உலககின் எல்லா நாடுகளுக்குமானது என்றாலும் இந்திய நிறுவனங்கள் இவற்றின் 70% பங்கை எடுக்கின்றன என காணப்பட்டுள்ளது. மிக அதிக அளவில் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் […]
சுமார் 50 வருட இராணுவ ஆட்சிக்கு பின் அங் சன் சு கி தலைமையில் புதியதோர் ஜனநாயக ஆட்சி பர்மாவில் அமைகிறது. இன்று திங்கள் வெளிவர தொடங்கிய தேர்தல் முடிவுகளின்படி அங் சன் சு கி தலைமையிலான National League for Democracy (NLFD) 70% வாக்குக்களை பெற்றுள்ளது. இராணுவ ஆதரவுடன் போட்டியிட்ட Union Solidarity and Development Party (USDP) தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொண்டுள்ளது. . 1990 ஆம் ஆண்டிலும் இவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்று இருந்தது. […]
மோடி இந்திய ஆட்சியை கைப்பற்றியபோது இந்திய மக்கள் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால் அண்மைகால இந்திய தேர்தல் முடிவுகள் மோடி தனது ஆளுமையை இழந்து செல்வதை காட்டுகின்றன. தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் பீகார் மாநில தேர்தல் முடிவுகள் மோடி தலைமையிலான கட்சி 40% ஆசனங்களை இழந்துள்ளதாக கூறுகின்றன. . பீகார் தேர்தலில் BJP இம்முறை 58 ஆசனங்களை மட்டுமே எடுக்கும் எனவும், இவர்களுக்கு எதிராக போட்டியிட்ட மாநில கட்சி கூட்டணி 178 ஆசனங்களை எடுக்கும் எனவும் […]