ஐ. நாவின் UNCTAD (United Nations Conference on Trade and Development) தயாரிக்கும் Liner Shipping Connectivity Index (LSCI) என்ற சுட்டியில் இந்த ஆண்டு இலங்கை உலக அளவில் 22ம் இடத்தை அடைந்துள்ளது. இந்த சுட்டி ஒரு நாடு உலக வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு வழங்கும் சேவையின் வல்லமையை காட்டுகிறது. சீனா 1,187 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்திலும், தென் கொரியா 640 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் 591 புள்ளிகளை பெற்று […]
காசா யுத்தத்தால் பாதிப்பு அடைந்தோருக்கு உணவு வழங்கும் பணியை செய்த 3 World Central Kitchen (WCK) வாகனங்கள் தவறுதலாக தாக்கப்படவில்லை. அவை மூன்றும் வெவ்வேறு இடங்களில் வைத்து precision guided ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன. Jose Andres என்ற World Central Kitchen ஆரம்பிப்பாளர் மேற்படி தாக்குதலை “systematically, car by car” என்று விபரித்துள்ளார். முதலாம் வாகனம் தாக்கப்பட்ட இடத்தில் இருந்து 2.4 km தூரத்திலேயே மூன்றாம் வாகனம் தாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாகனம் இடைவழியில் தாக்கப்பட்டுள்ளது. […]
இன்று புதன்கிழமை காலை 8:00 மணியளவில் தாய்வானில் 7.6 அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. இதனால் பல கட்டிடங்கள் உடைந்துள்ளன. சிறிய, 3 மீட்டர் அளவிலான சுனாமி ஜப்பான் வரை செல்கிறது. உயிரிழப்பு விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை. இதன் பின் 6.5 அளவிலான நடுக்கங்களும் (aftershocks) இடம்பெற்றுள்ளன. சிறியன, பெரியனவாக 25 aftershocks இடம்பெற்றுள்ளன. இந்த நடுக்கத்தின் மையம் தாய்வானுக்கு கிழக்கே Hualien என்ற நகரத்துக்கு தெற்கே 18 km தூரத்தில், 15 km ஆழத்தில் இருந்துள்ளது. 1999ம் ஆண்டு […]
காசாவில் யுத்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்ட World Central Kitchen (WCK) என்ற தொண்டர் நிறுவன வாகனம் மீது இஸ்ரேல் வான்படை தாக்கியதால் 7 தொண்டர்கள் பலியாகி உள்ளனர். பலியானோரில் அமெரிக்க-கனேடிய இரட்டை குடியுரிமை கொண்டவர், அஸ்ரேலியர், பிரித்தானியர், போலாந்துக்காரர் ஆகியோரும் அடங்குவர். அமெரிக்கா தலைமையில் சைப்ரஸ் நாட்டில் இருந்து இழுவை கப்பல்கள் மூலம் எடுத்துவரப்பட்ட உணவுகளை மக்களுக்கு வழங்கும் பணியையே WCK தொண்டர்கள் செய்து வந்துள்ளனர். மேற்படி தொண்டர்களின் வாகன பயணம் இஸ்ரேல் […]
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை இஸ்ரேலின் யுத்த விமானங்கள் இன்று திங்கள் தாக்கியுள்ளன. இந்த தாக்குதலுக்கு குறைந்தது 6 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் Mohammad Reza Zahedi என்ற Iranian Revolutionary Guards Corps படையின் அதிகாரியும் அடங்குவர். ஆனால் தூதுவர் பாதுகாப்பாக உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் செய்த தாக்குதலுக்கு சிரியாவில் 38 படையினர் உட்பட 53 பேர் பலியாகி இருந்தனர்.
கம்போடியாவிலிருந்து 250 இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தூரகிழக்கில் தொழில்நுட்ப துறை தொழில் தருவதாக கூறி அழைத்து பின் அவர்களை அடைத்து வைத்து இணையம் மூலமான குற்றச்செயல்களுக்கு (cyber crime, online scams) பயன்படுத்தி உள்ளனர். கடத்தப்பட்ட ஒருவருக்கு பெண் ஒருவரின் படங்களை வழங்கி அவற்றை பயன்படுத்தி Facebook போன்ற கணக்குகளை ஆரம்பித்து பலரிடம் பணம் பறிக்க வைத்துள்ளனர். சிலரை வரி திணைக்கள அதிகாரிகளாக நடிக்க வைத்து பணம் பறித்துள்ளனர். 2023ம் ஆண்டு ஐ. […]
வரும் ஏப்ரல் 8ம் திகதி வட அமெரிக்காவில் பூரண சூரிய கிரகணம் இடம்பெறும். இந்த கிரகணம் சில இடங்களில் 4 நிமிடங்கள் 28 செக்கன்களுக்கு இருளை பரப்பும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வருவதால் இந்த கிரகணம் ஏற்படுகிறது. வட அமெரிக்காவின் தென் மேற்கில் ஆரம்பித்து வடகிழக்கு நோக்கி இந்த கிரகணம் நகரும். அதனால் இது Mazatlan (Mexico); 4m 14s, Dallas; 3m 47s, Little Rock; 2m 33s, Indianapolis; 3m 46s, Cleveland; 3m […]
தற்போதைய அமெரிக்க சனாதிபதி பைடென் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் ரம்பிடம் தோல்வி அடையலாம் என்ற பயம் கொண்ட பைடென் தரப்பு முன்னாள் Democratic கட்சி சனாதிபதிகளான ஒபாமாவையும் (Obama), கிளின்டனையும் (Bill Clinton) பிரசாரத்துக்கு அழைத்துள்ளது. நியூ யார்க் நகரத்து Radio City Music மண்டபத்தில் வியாழன் இடம்பெற்ற பைடென் பிரச்சார நிகழ்வில் ஒபாமாவும், கிளின்டனும் பைடெனுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இந்த நிகழ்வு $25 மில்லியன் பணத்தை திரட்டியதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 5,000 பேர் பங்கு கொண்டதாகவும் அனுமதி கட்டணங்கள் $250 முதல் $500,000 […]
சீனாவுக்கும் அஸ்ரேலியாவுக்கும் இடையிலான உறவு மீண்டும் நெருக்கம் அடைய ஆரம்பித்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக அஸ்ரேலிய wine களுக்கு சீனா நடைமுறை செய்திருந்த 218.4% இறக்குமதி வரி மார்ச் 29ம் திகதி முதல் நிறுத்தப்படுகிறது. இதனால் அஸ்ரேலிய wine சீன சந்தையை முழுமையாக அடைகிறது. அமெரிக்க சனாதிபதி ரம்ப் காலத்தில் அஸ்ரேலியாவை ஆட்சி செய்த ரம்ப் ஆதரவு அரசு சீனாவுடன் முரண்பட்டது. அதனால் சீனா மெல்ல அஸ்ரேலிய தயாரிப்புகள் மீது மேலதிக இறக்குமதி வரிகளை நடைமுறை செய்தது. மேற்கு நாடுகள் அஸ்ரேலியா சீனாவுடன் முரண்படுவதை விரும்பினாலும், அஸ்ரேலியாவின் தயாரிப்புகளை […]
இதுவரை சிறுவர்களுக்கான diaper தயாரித்து வந்த ஜப்பானின் Oji Nepia என்ற நிறுவனம் தாம் அப்பணியை நிறுத்தி, முதியோருக்கான diaper தயாரிப்பில் மட்டும் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளது. இதற்கு காரணம் ஜப்பானில் குழந்தைகள் பிறப்பது குறைந்து, முதியோர் தொகை வேகமாக அதிகரிப்பதே. 2001ம் ஆண்டு 700 மில்லியன் diaper களை தயாரித்த Oji தற்போது சந்தையின் அளவு குறைவதால் ஆண்டுக்கு 400 மில்லியன் diaper களை மட்டுமே தயாரிக்கிறது. 2023ம் ஆண்டு ஜப்பானில் 753,631 குழந்தைகள் மட்டுமே […]