தற்போது சர்ச்சைக்குரிய தென்சீன கடலில் (South China Sea) உள்ள Woody தீவுக்குள் சீனா தனது யுத்த விமானங்களை நகர்த்தியுள்ள செய்தியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. Woody தீவு சர்ச்சைக்குரிய Paracel தீவு தொகுதிகளில் ஒன்றாகும். இச்செய்திப்படி சீன நனது Shenyang J-11 மற்றும் JH-7 வகை யுத்த விமானங்களை Woody தீவுக்கு நகர்த்தி உள்ளது. Paracel தீவுகளை சீனா மட்டுமன்றி தாய்வானும் வியட்னாமும் உரிமை கூறியுள்ளன. . கடந்த கிழமை சீனா இந்த Woody தீவுக்குள் HQ-9 […]
அமெரிக்க Supreme Court நீதிபதிகளில் ஒருவரான Antonin Scalia மரணம் அடைந்ததன் காரணமாக நீதிபதிகளுக்கான வெற்றிடம் ஒன்று தோன்றியுள்ளது. அந்த வெற்றுடத்தை நிரப்ப ஜனாதிபதி ஒபாமா முனைகிறார். சட்டப்படி ஒபாமாவுக்கு அந்த உரிமை உண்டு. . ஆனால் தற்போது ஜனாதிபதி தேர்தல் வேலைகள் நடைபெறுவதால், அடுத்த ஜனாதிபதியிடம் அந்த பொறுப்பை விடும்படி எதிர் கட்சியான Republican கூறுகிறது. . ஒபாமா அந்த வெற்றிடத்தை நிரப்ப குறிப்பட்ட சிலரை கணிப்பீடு செய்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு கருத்தில் கொண்டோரில் ஒருவர் […]
சிரியாவில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்ற 4 குண்டு தாக்குதல்களுக்கு 140 பேர் வரை பலியாகியுள்ளதுடன் 200 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். சிரியாவின் டமாஸ்கஸ் (Damascus) மற்றும் Homs ஆகிய நகர்களிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்று உள்ளன. அவற்றில் இரண்டு கார் குண்டு தாக்குதல்கள் என்றும் இரண்டு தற்கொலை தாக்குதல்கள் என்றும் கூறப்படுகிறது. . இந்த நகர்களில் பெரும்பாலும் அசாத் ஆதரவு மக்களே குடியுள்ளனர். இந்த நகர்கள் முன்னரும் பலதடவைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்தன. கடந்த மாதம் […]
ஆபிரிக்காவின் மேற்கே உள்ள நாடான கானாவில் (Ghana) இடம்பெற்ற பஸ்-கனரக வாகன மோதலுக்கு 71 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்தும் உள்ளனர். அரச பஸ் சேவையான Metro Mass Transit க்கு சொந்தமான பஸ்சும் தக்காளி ஏற்றி சென்ற கனரக வாகனமுமே இவ்வாறு மோதியுள்ளன. . உள்ளூர் நேரப்படி இந்த விபத்து புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்களும் ஒரு திருப்பமான வீதியில் விதிமுறைக்கு மிதமான வேகத்தில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. . பயணிகள் சென்ற பஸ் வேறு […]
அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபா செல்லவுள்ளார். சுமார் 90 வருடங்களின் பின் பதவியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி கியூபா செல்வது இதுவே முதல் தடவை. 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவும் கியூபாவும் தம்மிடையே உறவுகளை புதிப்பித்ததன் பின் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல தொடர்புகள் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளன. . கடந்த வருடம் இரு தரப்பும் தூதுவர் மனைகளை ஆரம்பித்து இருந்தன. மார்கழியில் இரண்டு நாடுகளும் தமக்குள் தபால் சேவையை ஆரம்பித்து இருந்தன. கடந்த […]
துருக்கியின் தலைநகர் அன்கராவில் (Ankara) இடம்பெற்ற குண்டு தாக்குதல் ஒன்றுக்கு 28 பேர் பலியாகியுள்ளதுடன் 60க்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 6:30 மணியளவில் அந்நாட்டின் இராணுவ தலைமையும் அமைந்துள்ள இடத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. . இந்த தாக்குதலுக்கு எவரும் இதுவரை உரிமை கொண்டாடவில்லை. . துருக்கி தற்போது மூன்று எதிரிகளுடன் போராடுகிறது. அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுடன் இணைந்து IS என்ற குழுவுக்கு எதிராக போராடுகிறது. அதேவேளை அமெரிக்க ஆதரவுடன் போராடும் […]
சிரியாவைப்போல் சவுதிக்கு தெற்கே உள்ள யெமென் (Yemen) என்ற நாட்டிலும் வெளிநாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு பன்முக யுத்தம் நடைபெறுகிறது. அந்நாட்டின் அரச தரப்புக்கு சவுதியும் சிறுபான்மை இனத்தை கொண்ட எதிர் தரப்புக்கு ஈரானும் உதவி வருகின்றன. எதிர்தரப்பு கட்டுப்பாடில் வைத்துள்ள இடங்களில் சவுதி தமது யுத்த விமானங்கள் மூலம் குண்டுகளை போடுகிறது. . Human Rights Watch (HRW) என்ற அமைப்பு வெளிட்ட அறிக்கையின்படி சவுதி அங்கு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட cluster குண்டுகளை குடியிருப்பு பகுதிகளில் வீசியுள்ளதாம். […]
சிரியாவில் நடைபெறும் யுத்தம் உலகை புதிய Cold War ஒன்றினுள் இழுப்பதாக ரஷ்யாவின் பிரதம மந்திரி Dmitry Medvedev கூறியுள்ளார். சனிக்கிழமை ஜேர்மன் நாட்டில் இடம்பெற்ற Munich Security Council அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். . ரஷ்யாவின் இந்த கருத்தை உடனடியாக மறுத்துள்ளது NATO. NATOவின் கூட்டுப்படை கட்டளையாளர் ஜெனரல் Philip Breedlove “NATOவில் ஒருவரும் Cold War இக்கு மீண்டும் செல்ல விரும்பவில்லை” என்றுள்ளார். . சிரியாவில் மேற்கும், ரஷ்யாவும் தமது ஆதிக்கங்களை […]
Global Fire Power அமைப்பு தனது 2015 ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ பல அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு சுமார் 50 கணியங்களை பயன்படுத்தி உலக நாடுகளின் இராணுவ பலத்தை கணிப்பிடு வரிசைப்படுத்தும். அதன் 2016 ஆண்டுக்கான கணிப்பு இலங்கை இராணுவ பலத்தை 73 ஆம் இடத்தில் வைத்துள்ளது. இந்த கணிப்பு அணு ஆயுதங்களை உள்ளடக்கவில்லை. . இந்த கணிப்பில் அமெரிக்க இராணுவ பலம் முதலில் உள்ளது. அமெரிக்க படைகளிடம் 13,444 யுத்த விமானக்கள், 8,848 […]
பண பலம் கொண்ட Facebook நிறுவனம் 2013 ஆம் ஆண்டில் Free Basics (அப்போது Internet.org) என்ற ஒரு சேவையை ஆரம்பித்தது. இந்த சலுகை smart phone மூலம் cell phone சேவையை பெறும் வறிய நாட்டு மக்களுக்கு இலவச அல்லது குறைந்தவிலை Internet சேவையை கொடுப்பதற்கு என்றே பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அதன் நோக்கம் வறிய நாட்டு மக்களை Facebook இன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே. . இவ்வகை Internet சலுகை பெறுவோர் தாம் நினைத்த எல்லா […]