ஆசியாவில் தற்போது அதிகம் Millionaires உள்ள நாடு ஜப்பான் ஆகும். ஜப்பானில் 1.3 மில்லியன் (1,300,000) Millionaires உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒருவரிடம் $1,000,000 க்கும் மேலான பெறுமதி உடைய சொத்துக்கள் இருப்பின், அவர் ஒரு Millionaire ஆவார். ஜப்பானில் பொதுமக்களிடம் உள்ள மொத்த சொத்து $15.23 ட்ரில்லியன் (15,230,000 மில்லியன்) ஆகும். . ஜப்பானுக்கு அடுத்ததாக ஆசியாவில் அதிகம் Millionaires உள்ள நாடு சீனாவே. சீனாவில் 654,000 Millionaires உள்ளனர். சீனாவின் பொதுமக்கள் வைத்திருக்கும் மொத்த சொத்து […]
இந்த மாதம் 20 ஆம் திகதி முதல் (January 20) அடுத்த மாதம் 20 ஆம் திகதி (February 20) வரை உலகின் பல பாகங்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 5 கோள்களையும் ஒரே பார்வையில் பார்க்கலாம் என்று வானிலை அவதானிகள் கூறுகிறார்கள். 2004 ஆம் ஆண்டின் இறுதி இரு கிழமைகளிலும் 2005 ஆம் ஆண்டின் முதல் இரு கிழமைகளிலும் இவ்வாறு 5 கோள்களையும் பார்க்க சந்தர்ப்பம் இருந்திருந்தது. . சூரிய உதயத்துக்கு […]
இன்றைய யுத்தங்களில் அதிகம் பயன்படுவது ஆள் இல்லா வேவு பார்க்கும் மற்றும் தாக்குதல் புரியும் யுத்த விமானங்கள். தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த ஆல் இல்லா விமானங்களை உலகின் மறுபக்கத்தில் உள்ள தளம் ஒன்றில் உள்ள விமானி செய்மதிகளின் உதவியுடன் செலுத்துவர். உதாரணமாக ஆப்கானிஸ்தான் மேலே பறக்கும் ஒரு ஆள் இல்லா விமானத்தை அமெரிக்காவில் உள்ள விமானப்படை தளம் ஒன்றில் உள்ள விமானி செலுத்துவர். தேவைப்படின் குண்டும் போடுவார். . ஆனால் இவ்வகை தொழில்நுட்பம் நிறைந்த பல ஆல் […]
உலகின் முதல் 1% செல்வந்தரிடம் ஏனைய 99% மக்களைவிட அதிகம் செல்வம் இருப்பதாக Oxfam தனது அறிக்கையில் கூறியுள்ளது. அத்துடன் இந்த் இந்த அறிக்கையின்படி உலகின் முதல் 62 செல்வந்தர் கொண்டிருக்கும் மொத்த செல்வம், உலகின் ஏழைகளான 50% சனத்தொகையினர் கொண்டிருக்கும் செல்வத்தை விட அதிகமானது. Oxfam அறிக்கை Credit Suisse தரவுகளை அடிப்படையாக கொண்டது. . முதல் செல்வந்த 62 பேர்களில் 30 பேர் வரையானோர் அமெரிக்கர், 17 பேர் ஐரோப்பியர். மிகுதியானோர் சீன, பிரேசில், […]
ஈரான் உட்பட அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளும் கடந்த வருடம் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி சனிக்கிழமை முதல் ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த தடை நீக்கம் செய்யப்பட்ட அதேதினம் ஈரானும் அமெரிக்காவும் தம் கைவசம் இருந்த கைதிகளையும் விடுவித்துள்ளனர். . இந்த தடை நீக்கத்தையிட்டு பெரும் கவலை கொள்ளும் நாடு இஸ்ரவேல். இஸ்ரவேலும் அதன் ஆதரவு அமெரிக்கர்களும் இந்த தடை நீக்கத்துக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவரை வருடம் […]
மேற்கு ஆபிரிக்க நாடான Burkina Faso வின் தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது அல்கைடா ஆதரவு குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதல் தற்போது அந்நாட்டின் அரச கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த தாக்குதலில் 18 நாடுகளை சார்ந்த 28 பேர் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் 4 அல்கைடா உறுப்பினரும் அடங்குவர். அந்த நால்வரில் இருவர் பெண்கள் ஆவர். . இந்த தாக்குதல்கள் Splendid ஹோட்டல் மற்றும் அதன் அருகில் உள்ள Cappuccino Cafe ஆகிய இரு இடங்களிலும் […]
குவைத்தில் இருந்து பஹ்ரெயின் சென்றுகொண்டிருந்த அமெரிக்காவின் இரண்டு சிறிய இராணுவ கப்பல்கள் ஈரான் வசம் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த இரண்டு கப்பல்களும் தமது பயணத்தின் இடைவழியில் தமது தளங்களுடனான தொலைத்தொடர்புகளை இழந்துள்ளன. இதற்கு கரணம் இயந்திர கோளாறுகளாக காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. . அதேவேளை ஈரான் இவர்கள் தமது கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாகவும் அப்போது அவர்கள் கைது கைது செய்யப்பட்டனர் எனவும் கூறியுள்ளது. கைது செய்யப்படவர் தொகை 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. . கைது […]
தமிழ்நாட்டு நீதிமன்றம் ஒன்று அமெரிக்காவில் பதியப்பட்ட கப்பல் ஒன்றின் அனைத்து பணியாளர்களுக்கும் 10 வருட சிறைத்தண்டனையை திங்கள்கிழமை விதித்துள்ளது. இந்த பணியாளர் குழு 3 உக்கிரேன் நாட்டவரையும், 14 எஸ்டோனியா நாட்டவரையும், 6 பிரித்தானியர்களையும், 10 இந்தியர்களையும் கொண்டிருந்தது. . ஒரு நாட்டின் எல்லைக்கு நுழையும் கப்பல்கள் தம்முடன் ஆயுதங்கள் எதையும் வைத்திருத்தல் குற்றமாகும். Seaman Guard என்ற அமெரிக்காவில் பதியப்பட்ட கப்பல் தம்மை கடல் கொள்ளையரிடமிருந்து பாதுகாக்க சில ஆயுதங்களை வைத்திருந்தனர். இந்த கப்பல் இந்திய […]
இன்று சனிக்கழமை அமெரிக்காவின் மிகப்பெரிய லொத்தர் சீட்டிழுப்பு இடம்பெறவுள்ளது. Powerball என்ற லொத்தரின் பெறுமதி சுமார் US$ 900 மில்லியன் ($900,000,000) ஆகும். இது அமெரிக்காவில் வழங்கப்பட்ட மிகக்கூடிய பெறுமதியாக இருக்கும். . மற்றைய நாடுகளை போல் அல்லது அமெரிக்காவில் லொத்தர் வருமானங்களுக்கும் அரச வரிகள் செலுத்தப்பட வேண்டும். அதனால் தனியொருவர் இந்த லோத்தரை வென்றால் அவருக்கு, மத்திய அரச வரி செலுத்தியபின், சுமார் $350 மட்டுமே கிடைக்கும். ஒருசில அமெரிக்க மாநிலங்கள் தவிர மற்றைய எல்லாம் […]
இன்று வியாழன் மீண்டும் சீன பங்குச்சந்தை 7% இக்கும் மேலால் வீழ்ச்சி அடைந்துள்ளது. அவ்வாற்று வீழ்ச்சி 7% இக்கும் அதிகமாக இருப்பின் அங்கு பங்குச்சந்தையை அத்தினத்துக்கு மூடி விடுதல் வழமை. அதன்படி இன்று சீன பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச்சந்தைகளையும் இன்று பெரிதும் பாதிக்கலாம். . கடந்த திங்களும் சீனாவின் பங்குச்சந்தை இவ்வாறு வீழ்ச்சி அடைந்ததால் அத்தினத்துக்கும் மூடப்பட்டு இருந்தது. அன்றைய தினமும் வீழ்ச்சி 7% இக்கும் அதிகம் ஆகும்போது சந்தை […]