Yemenனில் சவுதி cluster குண்டுகளை பாவித்தது

சிரியாவைப்போல் சவுதிக்கு தெற்கே உள்ள யெமென் (Yemen) என்ற நாட்டிலும் வெளிநாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு பன்முக யுத்தம் நடைபெறுகிறது. அந்நாட்டின் அரச தரப்புக்கு சவுதியும் சிறுபான்மை இனத்தை கொண்ட எதிர் தரப்புக்கு ஈரானும் உதவி வருகின்றன. எதிர்தரப்பு கட்டுப்பாடில் வைத்துள்ள இடங்களில் சவுதி தமது யுத்த விமானங்கள் மூலம் குண்டுகளை போடுகிறது. . Human Rights Watch (HRW) என்ற அமைப்பு வெளிட்ட அறிக்கையின்படி சவுதி அங்கு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட cluster குண்டுகளை குடியிருப்பு பகுதிகளில் வீசியுள்ளதாம். […]

சிரியாவில் புதிய Cold War என்கிறது ரஷ்யா

சிரியாவில் நடைபெறும் யுத்தம் உலகை புதிய Cold War ஒன்றினுள் இழுப்பதாக ரஷ்யாவின் பிரதம மந்திரி Dmitry Medvedev கூறியுள்ளார். சனிக்கிழமை  ஜேர்மன் நாட்டில் இடம்பெற்ற Munich Security Council அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். . ரஷ்யாவின் இந்த கருத்தை உடனடியாக மறுத்துள்ளது NATO. NATOவின் கூட்டுப்படை கட்டளையாளர் ஜெனரல் Philip Breedlove “NATOவில் ஒருவரும் Cold War இக்கு மீண்டும் செல்ல விரும்பவில்லை” என்றுள்ளார். . சிரியாவில் மேற்கும், ரஷ்யாவும் தமது ஆதிக்கங்களை […]

உலகில் இலங்கையின் இராணுவ பலம் 73 ஆம் இடத்தில்

Global Fire Power அமைப்பு தனது 2015 ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ பல அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு சுமார் 50 கணியங்களை பயன்படுத்தி உலக நாடுகளின் இராணுவ பலத்தை கணிப்பிடு வரிசைப்படுத்தும். அதன் 2016 ஆண்டுக்கான கணிப்பு இலங்கை இராணுவ பலத்தை 73 ஆம் இடத்தில் வைத்துள்ளது. இந்த கணிப்பு அணு ஆயுதங்களை உள்ளடக்கவில்லை. . இந்த கணிப்பில் அமெரிக்க இராணுவ பலம் முதலில் உள்ளது. அமெரிக்க படைகளிடம் 13,444 யுத்த விமானக்கள், 8,848 […]

Facebook Free Basics இந்தியாவில் தடை

பண பலம் கொண்ட Facebook நிறுவனம் 2013 ஆம் ஆண்டில் Free Basics (அப்போது Internet.org) என்ற ஒரு சேவையை ஆரம்பித்தது. இந்த சலுகை smart phone மூலம் cell phone சேவையை பெறும் வறிய நாட்டு மக்களுக்கு இலவச அல்லது குறைந்தவிலை Internet சேவையை கொடுப்பதற்கு என்றே பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அதன் நோக்கம் வறிய நாட்டு மக்களை Facebook இன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே. . இவ்வகை Internet சலுகை பெறுவோர் தாம் நினைத்த எல்லா […]

நையீரிய அகதி முகாமில் தற்கொலை தாக்குதல், 60 பலி

நையீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றை இரண்டு பெண் தற்கொலை தாக்குதல்காரர் தாக்கியதில் 60 வரையானோர் பலியாகி உள்ளனர். அத்துடன் 80 இக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். . இதுவரை எவரும் இந்த தாக்குதலுக்கு உரிமை கொள்ளவில்லை. . Boko Haram என்ற இஸ்லாமிய தீவிரவாதிகள் இங்கு இஸ்லாமிய ஆட்சியை அமைக்க 2009 முதல் முனைகின்றனர். இந்த யுத்தத்துக்கு இருவரை 17,000 பேர் வரை பலியாகியும், 2.6 மில்லியன் வரையானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர். . […]

ரஷ்யாவின் தலையீட்டால் பலப்பட்ட அசாத் ஆட்சி

சிரியாவில் சவுதி மற்றும் மேற்கு சார்பு ஆயுதக்குழுக்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட விமான தாக்குதல் நடவடிக்கைகள் அசாத் (Bashar al-Assad) தலைமயிலான அரசை பலப்படுத்திவிட்டது என்கிறது அமெரிக்க உளவுப்படை. . இன்று செவ்வாய்கிழமை அமெரிக்காவின் லெப். ஜெனரல் Vincent Stewart ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் அந்நாட்டு யுத்த கணிப்புக்களை முற்றாக மாற்றிவிட்டது என்றுள்ளார். அத்துடன் அசாத் தரப்பு ஆறு மாதங்களுக்கு முன் இருந்ததைவிட தற்போது மிகவும் பலமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். . Free Syrian Army என்ற […]

எதிர்ப்புகள் மத்தியில் வடகொரியா ஏவிய ஏவுகலம்

ஐ.நா., அமெரிக்கா, தென்கொரியா ஆகியவற்றின் கடும் எதிர்ப்புகளையும் புறம்தள்ளி ஏவுகலம் ஒன்றை சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு வடகொரியா ஏவியுள்ளது. . வடகொரியா தாம் உலகை கண்காணிக்கும் செய்மதி ஒன்றை ஏவ உள்ளதாக முன்னரே கூறியிருந்தது. ஆனால் அமெரிக்கா இந்த ஏவுகலம் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணைக்கான பரீட்சார்த்தமே என்றது. அதாவது வடகொரியா அமெரிக்காவை தாக்கவல்ல ICMB வகை ஏவுகணையை தயாரிக்க முனைகிறது என்றது. . வடகொரியாவின் வடமேற்கு பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகலம் ஜப்பானின் […]

உலகை மிரட்டும் சீக்க (Zika) வைரஸ்

உலகின் பல பாகங்களை, குறிப்பாக தென் அமெரிக்காவை, மிரட்டுகிறது சீக்க வைரஸ். ஐ.நாவின் சுகாதார அமைப்பான World Health Organization (WHO) இன்று இன்று தெரிவித்த கருத்துப்படி 3 முதல் 4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ்சால் பாதிக்கப்படலாம். நுளம்பால் காவப்படும் இந்த வைரஸ்சால் அதிகம் பாதிப்படைவது கருவுள் உள்ள குழந்தைகளே. . இந்த வைரஸ்ஸை காவும் நுளம்பு ஒன்று ஒரவரை கடித்தால் அந்த நபர் சீக்க வைரசின் பாதிப்புக்கு உள்ளாவார். ஆனால் அவர் பெரிய அளவில் […]

இலங்கைக்கு ஊழல் சுட்டெண் 37

Transparency International (TI) நிறுவனம் 2015 ஆண்டுக்கான உலக நாடுகளின் ஊழல் சுட்டெண்ணை அறிவித்துள்ளது. இந்த சுட்டெண்படி 100 புள்ளியை பெற்ற நாடு ஊழல் எதுவும் அற்ற நாடாகும். கடந்த வருடத்துக்கான இலங்கையின் ஊழல் சுட்டெண் 37 மட்டுமே. மொத்தம் 170 நாடுகள் உள்ளடக்கப்பட்ட இந்த கணிப்பில் இலங்கை 83 ஆம் இடத்தில் உள்ளது. . இந்த கணிப்பில் முதல் 10 இடங்களையும் எடுக்கும் நாடுகள் டென்மார்க் (91%), பின்லாந்து (90%), சுவீடன் (89%), நியூசிலாந்து (88%), […]

அகதிகளின் சொத்துக்களை பறிக்க டென்மார்க் சட்டம்

டென்மார்க்கில் (Denmark) நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சட்டம் ஒன்று அங்கு வரும் அகதிகளின் சொத்துக்களை பறிக்கும் உரிமையை அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த சட்டப்படி சுமார் $1,450 இக்கும் மேலான பெறுமதியுடைய சொத்துக்களை அகதிகளாக வருவோரிடம் இருந்து பறிக்க முடியும். அத்துடன் $1,450 இக்கும் அதிகமான பணம் இருப்பின் அதையும் அரசு பறிக்கும். . இந்த சட்டத்தை வலதுசாரி, இடதுசாரி என்ற வேறுபாடுகள் இன்றி பெருமளவு பாராளுமன்ற உறுப்பினர் ஆதரித்து உள்ளனர். . அதேவேளை ஐ.நா. வின் UNHCR இந்த […]