இந்தியாவில் கணவன் கொலை, கனடிய மனைவி விசாரணையில்

Jaskaran Singh என்ற 38 வயதுடைய கனடிய பிரசை ஒருவர் மார்ச் மாதம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள Sawara என்ற இடத்தில் சிலரால் கொலை செய்யப்பட்டு இருந்தார். இவர் கனடாவின் டொரண்டோ நகரில் வசிக்கும் Pawandeep Kaur என்ற தனது மனைவியை பிரிந்து சென்று பஞ்சாப்பில் வாழ்ந்து வந்தவர். இவர்களுக்கு தற்போது தாயுடன் வாழும் இரண்டு பிள்ளைகளும் உண்டு. . பிரிந்து வாழ்ந்தாலும், கணவனின் மரணத்தின் பின் மனைவி இந்தியா சென்று மரணவீட்டில் பங்கு கொண்டிருந்தார். […]

நக்பூர் ஆயுதக்கிடங்கில் விபத்து, 17 இராணுவம் பலி

இந்தியாவின் நக்பூர் (Nagpur) நகருக்கு அண்மையில் உள்ள இராணுவ ஆயுத கிடங்கு ஒன்றில் செய்வாய் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இராணுவ அதிகாரிகள் உட்பட 17 இராணுவத்தினர் பலியாகி உள்ளனர். மேலும் 20 இராணுவத்தினர் வரை காயமடைந்தும் உள்ளனர். . இந்த ஆயுத கிடங்கே இந்தியாவில் உள்ள மிக பெரிய ஆயுத கிடங்காகும். Pulgaon என்ற இந்த ஆயுத கிடங்கு நக்பூரில் இருந்து 110 km தென்மேற்கே உள்ளது. இந்த ஆயுத கிடங்கு சுமார் 7,000 ஏக்கர் அளவிலானது. […]

எகிப்து கொலைகளில் ஐரோப்பாவுக்கும் பங்குண்டு

எகிப்தின் சிசி (Sisi) ஆட்சியில் இடம்பெறும் அடக்குமுறைகளிலும், கொலைகளிலும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பங்குண்டு என்கிறது Amnesty International. . 2013 ஆம் ஆண்டு ஜூலையில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்து, பின் ஜனாயக முறைப்படி ஆட்சியில் இருந்த கட்சியை தடைசெய்துவிட்டு, இராணுவ அதிகாரத்துடன் ஆட்சிக்கு வந்த சிசி தனக்கு எதிரானவர்களை சிறையில் அடைத்தும், கொலைகள் செய்தும் வருகிறார். Amnesty Internationalன் கருத்துப்படி 2013 ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி சிசிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் […]

ஈரான் துறைமுகத்தில் இந்தியா முதலீடு

திங்கள் அன்று இந்தியாவும் ஈரானும் துறைமுக கட்டுமான ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டுள்ளன. அதன்படி இந்தியா ஈரானில் உள்ள Chabahar துறைமுகத்தை $500 மில்லியன் (0.5 பில்லின்) செலவில் அபிவிருத்தி செய்யும். இதன் நோக்கம் ஈரானையும் ஆப்கானிஸ்தானையும் இந்த துறைமுகத்துடன் இணைத்து மூன்று நாடுகளுக்கும் இடையே பொருளாதாரத்தை வளர்ப்பதாகும். குறிப்பாக இந்தியாவை பாகிஸ்தானுக்கு அப்பால் வர்த்தக போக்குவரத்தில் இணைப்பதாகும். . இந்த துறைமுகத்தில் இருந்து ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நகர்களுக்கு நவீன வீதிகளும் அமைக்கடவுள்ளது. . ஈரானின் […]

வியட்னாமில் ஒபாமா, ஆயுதத்தடை நீக்கம்

இன்று திங்கள் அமெரிக்க ஜனாதிபதி வியட்னாம் சென்றுள்ளார். சுமார் 40 வருடங்களின் முன் அமெரிக்க இராணுவம் வியட்னாமில் இருந்து விரட்டப்பட்டு இருந்தாலும் சமீப காலங்களில் அமெரிக்காவுக்கும் வியட்னாமுக்கும் இடையில் உறவு பலமாகி வந்துள்ளது. அமெரிக்க இராணுவத்தை விரட்டிய கம்யூனிஸ்ட் கட்சியே இன்றும் வியட்னாமை ஆண்டாலும் Bill Clinton, Obama ஆகியோர் பதவில் உள்ளபோதே வியட்னாம் சென்றுள்ளனர். . ஒபாமாவின் இன்றைய பயணத்தின்போது அமெரிக்கா வியட்னாம் மீதான தனது 40 வருட பழமையான ஆயுத தடையையும் நீக்கியுள்ளது. . […]

ஜப்பானிய பெண் கொலை, அமெரிக்கர் கைது

ஜப்பானின் ஒக்கிநாவா (Okinawa) பகுதியில் வாழ்ந்த 20 வயது பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் இராணுவத்தினர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். Kenneth Franklin Shinzato என்ற இந்த முன்னாள் அமெரிக்க இராணுவத்தினர் இன்று ஒக்கிநாவா பகுதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது ஓக்கினாவாவில் உள்ள அமெரிக்க தளம் ஒன்றில் சாதாரண தொழில் புரிகிறார். Rina Shimabukuro என்ற இந்த 20 வயது பெண் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி முதல் […]

எகிப்தின் விமானம் ஒன்று தவறியுள்ளது

இன்று பிரான்சின் பரிஸ் (Paris) நகரில் இருந்து எகிப்தின் கைரோ (Cairo) நகர் சென்ற Egypt Air விமானம் தவறியுள்ளதாக Egypt Air கூறியுள்ளது. Egypt Air விமானம் Flight MS804 பரிஸ் நகரில் இருந்து கைரோ நகர் நோக்கி 21:09 UTC மணியளவில் புறப்பட்டு இருந்துள்ளது. இந்த விமானத்துடனான தொடர்பு 00:45 UTC மணியளவில் அற்று போயிருந்தது. அப்போது இந்த விமானம் கைரோவில் இருந்து சுமார் 125 km தொலைவில் இருந்துள்ளது. . தொடர்பு துண்டிக்கப்பட்டபோது […]

மண்டேலாவை காட்டிக்கொடுத்தது CIA

CIAயின் தகவலின் அடிப்படையிலேயே தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்ற செய்தியை முன்னாள் CIA அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Donald Rickard என்ற அமெரிக்கர் ஒரு CIA உளவாளி. ஆனால் அவர் தென் ஆபிரிக்காவுக்கான அமெரிக்காவின் உதவி கவுன்சிலர் ஆக Durban நகரில் கடமை புரிந்திருந்தார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மண்டேலா கைது செய்யப்பட்டு 27 வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார். . அப்போது CIA மண்டேலாவை ஒரு முழுமையான […]

இலங்கை, தென் இந்தியா வரும் பெருமழை

வரும் நாட்களில் இலங்கையின் பல பாகங்களும் இந்தியாவின் தென் பாகமும் பெருமழையில் மூழ்கலாம் என்று வானிலை அவதானிகள் கூறுகின்றனர். இப்பகுதிகள் வரும் புதன் வரையில் சுமார் 100 முதல் 200 mm அளவிலான (4 -8 inches) மழையினை பெறும். சில இடங்கள் 300 mm (12 inches) அளவிலான மழையை பெறலாம். . கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட்ட இலங்கையின் மேற்கு பகுதியும், தமிழ்நாடு, பாண்டுச்சேரி, தென் கேரளா உட்பட்ட இதியாவின் பகுதிகளும் இந்த தாழ் அமுக்கத்தால் […]

அமெரிக்காவின் Trumpக்கு இந்தியாவில் இந்து சேன வழிபாடு

அமெரிக்காவில் இந்த வருடம் நவம்பரில் ஜானதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. அந்த தேர்தலில் Republican கட்சி சார்பிலும் Democrats சார்பிலும் போட்டியிடுபவரை தேர்ந்தெடுக்கும் உட்கட்சி தேர்தல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. . Republican கட்சி போட்டியில் முன்னணியில் இருப்பவர் Donald Trump என்பவர். இவர் மெக்ஸ்சிக்கோ நாட்டவர் மீதும், இஸ்லாமியர் மீதும் கடுமையான துவேச கருத்துக்களை வெளியிட்டு இருந்தவர். பெருபாலான அமெரிக்கர்களே இவரை துவேசி என்று கருதும்போது, இந்தியாவின் கடும்போக்கு Hindu Sena இவருக்கு வெற்றிகிட்ட இந்தியாவில் பூசைகள் […]