பெய்ஜிங் மரதன் ஓட்ட போட்டியில் குளறுபடி?

பெய்ஜிங் மரதன் ஓட்ட போட்டியில் குளறுபடி?

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெற்ற அரை மரதன் (half marathon) போட்டியில் He Jie முதலாம் இடத்தை அடைந்து $5,500 பரிசை பெற்றுள்ளார். ஆனால் அவரின் வெற்றியில் சீனர் சந்தேகம் கொண்டுள்ளனர். இவருக்கு சில அடிகள் பின்னால் வந்த 3 ஆபிரிக்கர் இறுதி கட்டத்தில் முழுமூச்சுடன் ஓடாது சீனர் வெல்ல வழி செய்திருக்கலாம் என்று கருத வைக்கிறது. முடிவுக்கு சில மீட்டர் தூரம் இருக்கையில் ஒரு ஆபிரிக்கர் சீனரை முன்னோக்கி செல்லுமாறும், இன்னோர் ஆபிரிக்கரை மெதுவாக ஓடுமாறும் […]

இந்தியாவில் $557 மில்லியன் பறிமுதல், வாக்கு கையூட்டுக்கானது

இந்தியாவில் $557 மில்லியன் பறிமுதல், வாக்கு கையூட்டுக்கானது

இந்திய தேர்தல் ஆணையாளர் அலுவலகம் கடந்த 45 தினங்களில் 46.5 பில்லியன் இந்திய ரூபாய் ($557 மில்லியன்) பெறுமதியான பணம், மது, போதை போன்ற பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக கூறியுள்ளது. இவை வாக்காளரின் ஆதரவை சட்டவிரோதமாக கையூட்டு வழங்கி பெற பயன்படுத்தப்பட இருந்தவை என்கிறது தேர்தல் ஆணையாளர் அலுவலகம். 2019ம் ஆண்டில் 34.75 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. இம்முறை அத்தொகை 46.5 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது. திங்கள் காங்கிரஸ் கட்சியின் […]

ஈரான் 300 கணைகளை ஏவியது, 99% தடுக்கப்பட்டன

ஈரான் 300 கணைகளை ஏவியது, 99% தடுக்கப்பட்டன

ஏப்ரல் மாதம் 1ம் திகதி இஸ்ரேல் சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல் செய்து 13 பேரை கொலை செய்ததை தண்டிக்க சனிக்கிழமை இரவு ஈரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 300 கணைகளை (drones, cruise missiles, ballistic missiles) ஏவியுள்ளது. அவற்றில் 99% கணைகளை அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, இஸ்ரேல் கூட்டாக தமது தடுப்பு கணைகள் மூலம் இடைமறித்து தாக்கிஅழித்துள்ளன. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள சுமார் 1,700 km தூரத்தை கணைகள் கடக்க எடுத்த […]

ஈரான் 100+ drone களை இஸ்ரேல் நோக்கி ஏவியது

ஈரான் 100+ drone களை இஸ்ரேல் நோக்கி ஏவியது

ஈரான் நூற்றுக்கும் அதிகமான drone களையும் பல ballistic ஏவுகணைகளையும் சனிக்கிழமை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளது. இந்த drone கள் தமது குறிகளை அடைய பல மணித்தியாலங்கள் எடுக்கும். இஸ்ரேலில் அபாய அறிவிப்பு siren ஒலிகள் எழுப்பப்பட்டு உள்ளன. இஸ்ரேல் தனது ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை உள்நோக்கி வரும் ஈரானின் ஏவுகணைகளை நோக்கி ஏவியுள்ளது. இஸ்ரேலின் வான் பரப்பு விமான போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பல பயணிகள் திசை திருப்பப்பட்டு உள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக தமது முதலாம் […]

சிட்னியில் கத்தி குத்துக்கு 6 பேர் பலி

சிட்னியில் கத்தி குத்துக்கு 6 பேர் பலி

அஸ்ரேலியாவின் சிட்னி (Sydney) நகரில் இடம்பெற்ற கத்தி குத்துக்கு குறைந்தது 6 பேர் பலியாகி உள்ளனர். Bondi Junction என்ற இடத்தில் உள்ள Westfield Shopping Centre என்ற வியாபார நிலையத்திலேயே இந்த சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ந்துள்ளது. இதை தனி ஒருவரே செய்ததாகவும் அந்த 40 வயது சந்தேக நபரை அங்கு விரைந்த முதல் போலீசார் சுட்டு கொன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில காயமடைந்தோர் வைத்தியசாலைகளில் வைத்தியம் பெறுகின்றனர். அதில் ஒரு 9 மாத குழந்தையும் […]

இஸ்ரேலை ஈரான் தாக்கலாம்; இஸ்ரேல், அமெரிக்கா விழிப்புடன்

இஸ்ரேலை ஈரான் தாக்கலாம்; இஸ்ரேல், அமெரிக்கா விழிப்புடன்

இஸ்ரேலை ஈரான் எந்த கணமும் தாக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இஸ்ரேலும், அமெரிக்காவும் மிகுந்த விழிப்புடன் உள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, அஸ்ரேலியா ஆகிய நாடுகள் தமது நாட்டவர் இஸ்ரேல் செல்வதை தவிர்கவும் கேட்டுள்ளன. சுமார் இரண்டு கிழமைகளுக்கு முன் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு அருகில் உள்ள நிலையம் ஒன்றை இஸ்ரேல் தாக்கி இருந்தது. அந்த தாக்குதலுக்கு பிரிகேடியர் ஜெனரல் Mohammad Reza Zahedi, ஈரானின் உயர் படை அதிகாரிகள் உட்பட 13 பேர் பலியாகி இருந்தனர். […]

வியட்நாமில் $44 பில்லியன் திருடியவருக்கு மரண தண்டனை

வியட்நாமில் $44 பில்லியன் திருடியவருக்கு மரண தண்டனை

வியட்நாமில் $44 பில்லியன் திருடிய Truong My Lan என்ற 67 வயது billionaire பெண்ணுக்கு இன்று வியாழன் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவருடன் மொத்தம் 85 சந்தேக நபர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வீடு கட்டுமான வர்த்தகம் செய்த இவர் Saigon Commercial Bank என்ற வங்கியில் இருந்து 11 ஆண்டு கால இடைவெளியில் $44 பில்லியன் கடன் பெற்றுள்ளார். ஆனால் அந்த பணம் தற்போது மீட்கப்பட முடியாது உள்ளது. 2011ம் ஆண்டு முறிய இருந்த […]

சீனாவின் அம்பாந்தோட்டை துறைக்கு புதிய வருமானம்

சீனாவின் அம்பாந்தோட்டை துறைக்கு புதிய வருமானம்

செங்கடலில் செல்லும் கப்பல்களை கூதி ஆயுதக்குழு தாக்குவதால் சீனாவின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இன்று முதல் புதிய வருமானம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகமும் உலகின் பெரியதோர் கொள்கலன் காவும் கப்பல் நிறுவனமான MSC யும் இந்த துறைமுகத்தை கொள்கலன் பரிமாறும்  துறைமுகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. அதன்படி ஐரோப்பாவின் Rotterdam துறைமுகத்தில் பயணத்தை ஆரம்பித்து, ஆபிரிக்காவை சுற்றி வந்த MSC Ingrid என்ற கப்பல் இன்று 9ம் திகதி 500 கொள்கலன்களை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளது. இந்த 500 […]

இணக்கங்கள் இன்றி முடிந்த Yellen னின் சீன பயணம்

இணக்கங்கள் இன்றி முடிந்த Yellen னின் சீன பயணம்

அமெரிக்காவின் Treasury Secretary Janet Yellen பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள குறைபாடுகளை சீன உயர் அதிகாரிகளுடன் உரையாட 4-தின பயணம் ஒன்றை சீனாவுக்கு மேற்கொண்டிருந்தார். அந்த பயணம் இன்று திங்கள் இணக்கங்கள் எதுவும் இன்றி முடிந்துள்ளது. ஆனாலும் இருதரப்பும் பேச்சுக்களை தொடர இணங்கியுள்ளன. அமெரிக்காவில் இது தேர்தல் ஆண்டு ஆகையால் பைடென் அரசு நல்ல பொருளாதார செய்திகளை அமெரிக்க மக்களுக்கு வழங்க விரும்புகிறது. ஆனால் சீனா அதற்கு மசியவில்லை. குறிப்பாக மின்னில் இயங்கும் வாகன […]

ரம்ப் $50 மில்லியன் சேகரிப்பு, பைடென் $26 மில்லியன் 

ரம்ப் தனது சனாதிபதி தேர்தல் செலவுகளுக்கு சனிக்கிழமை செய்த நிதி திரட்டலில் $50.5 மில்லியன் சேகரித்துள்ளார். ஒபாமா, கிளின்டன் ஆகியோரையும் அழைத்து பைடென் செய்த நிதி சேகரிப்புக்கு  கிடைத்தது $26 மில்லியன் மட்டுமே. கடந்த மாதம் ரம்ப் தரப்பு $65.6 மில்லியன் சேகரித்திருந்தது. அத்துடன் மாத முடிவில் ரம்ப் மொத்தம் $93.1 மில்லியன் சேகரித்திருந்தார். பைடென் கடந்த மாதம் $90 மில்லியன் சேகரித்து, மாத முடிவில் $192 மில்லியன் பணத்தை கொண்டிருந்தார். சனிக்கிழமை $814,600 நன்கொடை செய்தோர் […]

1 28 29 30 31 32 329