தமிழ்நாட்டு ரயிலில் ரூ5.75 கோடி கொள்ளை தமிழ்நாட்டில் திங்கள் இரவு பயணித்துக்கொண்டு இருந்த ரயிலில் இந்திய ரூ5.75 கோடி கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையர் ரயில் பெட்டியின் கூரையை வெட்டி, உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். . திங்கள் இரவு 9:00 மணியளவில் சேலத்தில் (Selam) இருந்து புறப்பட்ட ரயிலில் (Selam Express) ஏற்றப்பட்ட இந்த பணம் செவ்வாய் அதிகாலை 4:40 மணியளவில் சென்னையை அடையவிருந்து. Reserve Bank of Indiaவுக்கு சொந்தமான 342 கோடி பணம் இதில் […]
தென் ஆபிரிக்காவில் வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக போராடி அந்நாட்டை சுதந்திரம் அடைய செய்தவர்களில் முக்கியமானவர் மறைந்த நெல்சன் மண்டேலா (Nelson Mandela). அவர் ஆரம்பித்த கட்சியே African National Congress (ANC). இன்று அங்கு நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் ANC வரலாற்றில் அதிகுறைந்த ஆதரவை, சுமார் 54%, பெற்றுள்ளது. . 1994 ஆம் ஆண்டு முதல் ANC 60% க்கும் மேற்பட்ட ஆதரவை பெற்று வந்துள்ளது. ஆனால் அண்மை காலங்களில் ANC உறுப்பினர்களின் ஊழல், அதி உயர் […]
பெருகிவரும் தனியார் வாகன போக்குவரத்தால் இடர்படும் பொதுசன பஸ் சேவையையை மீட்க சீனாவின் நிறுவனம் ஒன்று புதிய வகை பஸ்களை தயாரிக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை சீனாவின் QinHuangDao நகரில் வெள்ளோட்டம் விடப்பட்ட TEB-1 (Transit Elevated Bus) என்ற பஸ் இரண்டு வாகன பாதைகளுக்கு மேலால் செல்கிறது. கீழே சாதாரண தனியார் வாகனங்கள் செல்கின்றன. . சுமார் 16 அடி உயரமான இந்த பஸ், 72 ஆடி நீளமானதும், 26 அடி அகலமானதும் ஆகும். இதில் சுமார் […]
இன்று மாலை இந்தியாவின் திருவானந்தபுரத்தில் இருந்து டுபாய் வந்த Boeing 777 வகை Emirates விமானம் (Flight EK521) தரை இறங்கையில் தீப்பற்றி பாவனைக்கு உதவாத வகையில் எரிந்து நாசமாகியுள்ளது. விமானத்தில் இருந்த 282 பயணிகளும், 18 விமான பணியாளர்களும் விமானத்தில் இருந்து வெளியேறி தப்பியுள்ளார். ஆனால் தீ அணைக்கும் படையினர் ஒருவர் பலியாகி உள்ளார். . அந்த விமானத்தின் விமானி தமது விமான சக்கர செயல்பாடுகளில் (Landing gear) குழப்பம் இருந்ததாகவும் அவசர தரை இறங்களை […]
இலங்கையின் சுத்திகரிக்கப்படும் எரிபொருளின் அளவை இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இலங்கை நாள் ஒன்றில் சுமார் 50,000 பரல் மசகு எண்ணெய்யை மட்டுமே சுத்திகரிக்க முடியும். திட்டம் நிறைவேறின் இலங்கை சுமார் 100,000 பரல்களை நாள் ஒன்றில் சுத்திகரிக்க முடியும். இவ்வகை அதிகரிப்புக்கான வேலைகளுக்கு சுமார் $2.2 பில்லியன் தேவைப்படலாம் என்றும் கூறப்படுகிறது. . அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இதை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. அதேவேளை இந்த புதிய சுத்திகரிப்பு திருகோணமலை அல்லது மாத்தறை […]
சென்னையில் இன்று வெள்ளி சுமார் 600 இலங்கை தமிழ் அகதிகள் போராடத்தில் ஈடுபட்டு உள்ளனர். வேலைவாப்புக்களில் தமக்கு உரிய சலுகைகள் வேண்டும் என்றும், தாம் இலகுவில் நடமாட அனுமதிக்கப்படல் வேண்டும் என்றும் இவர்கள் கேட்டுள்ளனர். . தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் அங்கு அரச தொழில்களை பெறுவது பொதுவாக அனுமதிக்கப்படுவது இல்லை. . 1990 இல் சென்ற தர்மலிங்கம் ராஜா என்பவர் தனது 3ம் சந்ததியுடன் தமிழ்நாட்டு அகதிகள் முகாம்மில் வாழ்வதாகவும், அங்கு தம் மீதான […]
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள மணிப்பூரி என்ற இடத்தில் தாலித் தம்பதி ஒன்று 15 ரூபா ($0.22) கடன் காரணமாக கோடாலியால் கொத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர். . ஒரு கிழமையின் முன் இந்த தம்பதி 3 பிஸ்கட் பைகளை, ஒவ்வொன்றும் 5 ரூபா வீதம், தமது பிள்ளைகளுக்காக கடன் வாங்கியுள்ளனர். கடை உரிமையாளர் (Ashok Mishra), ஒரு தாலித் அல்லாதவர், கடன் பணத்தை மீண்டும் கேட்டுள்ளார். அதற்கு மரணித்த தம்பதி தினக்கூலி கிடைத்தபின் பணத்தை […]
இந்தியாவின் முதலாவது பணக்காரர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani). இவரின் மொத்த சொத்துக்களின் பெறுமதி சுமார் $20 பில்லியன். ஆனால் இவரின் மனைவி Nita அம்பானிக்கு 10 பேர் கொண்ட இந்தியாவின் அதிவிசேட பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்குகிறதாம். தனது 27 மாடி வீட்டில் சுமார் 600 வேலையாளர்களுடன் வாழும் இவருக்கு அரச பணத்தில் பாதுகாப்பு வழங்கும் செய்தியை Hindustan Times வெளியிட்டு இருக்கிறது. . இவரின் கணவர் முகேஷ் அம்பானிக்கு 2013 ஆம் ஆண்டு […]
இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா 15,000 ஏக்கர் நிலத்தை (சுமார் 60 சதுர கிலோமீட்டர்) எதிர்பார்க்கிறது. இந்த பொருளாதார (special economical zone) நடவடிக்கை சுமார் 1 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. . சீனா கருத்தில் கொள்ளும் இடம் இலங்கையின் தெற்கே உள்ள Hambantotaவை அண்டிய பகுதியாகும். இப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையம், துறைமுகம் என்பற்றை பயன்படுத்தக்கூடியதாக இந்த பொருளாதார மையம் அமையும். . சீனாவே இந்த பொருளாதார […]
ஜப்பானின் தலைநகர் ரோக்கியோவுக்கு (Tokyo) மேற்கே உள்ள Sagamihara என்ற நகரில் உள்ள செயல்பாடு குறைந்தோருக்கான நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்தி குத்துகளுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 25 பேர் காயம் அடைந்தும் உள்ளனர். தாக்குதலை நடத்தியவர் என கருதப்படும், 26 வயதுடைய, Satoshi Uematsu என்பவர் செவ்வாய் காலை 3:00 மணியளவில் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். . சரண் அடைந்தவரிடம் இருந்து பல கத்திகள் மீட்கப்பட்டு உள்ளன. அவற்றில் […]