இந்திய போலீஸ் தாக்குதலுக்கு 24 மாவோயிஸ்ட் பலி

இந்தியாவில் இயங்கிவரும் மாவோயிஸ்ட் இயக்க உறுப்பினர் 24 பேரை இந்திய போலீசார் தாக்கி கொலை செய்துள்ளார். 1967 ஆம் ஆண்டு முதல் இடதுசாரி கொள்கைகளுடன் போராடிவரும் இந்த இயக்கமானது சீனாவின் தலைவர் மாஓ ஜெடொங் நாமத்தை தமது இயக்கத்துக்கு கொடுள்ளது. இந்த தாக்குதலில் போலீசார் ஒருவரும் கொள்ளப்பட்டு உள்ளார். . இந்த குழு ஒடிசா-ஆந்திரா எல்லை காடுகளில் கூடி இருந்ததை அறிந்த போலீசார் சுற்றிவளைத்து தாக்கி உள்ளனர். நேற்று ஞாயிறு போலீசுக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த […]

இந்திய விமானம்தாங்கி Viraat ஓய்வு

இந்தியாவின் விமானம்தாங்கி கப்பலான INS Viraat சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறது. Viraat தற்போது சேவையில் இருக்கும் உலகின் மிக பழைய விமானம்தாங்கி கப்பலாகும். 1959 ஆம் ஆண்டு முதல் HMS Hermes என்ற பெயரில் பிரித்தானியாவின் கடல் படையினால் பாவிக்கப்பட்ட இந்த விமானதாங்கி கப்பல் 1987 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்தியாவின் கடற்படையில் சேவையில் ஈடுபட்டது. அவ்வகையில் இது 57 வருடம் பழமைவாய்ந்த விமானந்தாங்கி கப்பலாகும். . இந்த விமானம்தங்கி 16 Sea […]

ExoMars செவ்வாயில் மோதியிருக்கலாம்

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பான ESAயும் (European Space Agency), ரஷ்யாவும் இணைந்து செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலமான ExoMars திட்டமிட்டபடி மெதுவாக தரை இறங்காமல், சுமார் 300 km/h வேகத்தில் தரையில் மோதி உடைந்திருக்கலாம் என்று NASAவும், ESAயும் கருதுகின்றன. இந்த கருத்தை அவர்கள் இன்று வெள்ளி கூறியுள்ளனர். . செய்வாய் கிரகத்தை சுற்றிவரும் நாசாவின் செய்மதியான Mars Reconnaissance Orbiter (MRO) எடுத்துக்கொண்ட படம் ஒன்றின் அடிப்படையிலேயே ExoMars மோதிய உண்மை வெளியிடப்பட்டு உள்ளது. . […]

அமெரிக்காவை கைவிட்டது பிலிப்பீன்ஸ்

ஆசியாவில் நீண்ட காலமாக அமெரிக்காவின் தளமாக இயங்கி வந்த பிலிப்பீன்ஸ் இப்போது அமெரிக்காவை கைவிட்டு, பதிலாக சீனாவின் நட்பு நாடாகி உள்ளது. இன்று வியாழன் சீனா சென்றுள்ள பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி இந்த உண்மையை அங்கு வெளிப்படுத்தி உள்ளார். இவருடன் சுமார் 200 பிலிப்பீன்ஸ் வர்த்தகர்கள் சீனா சென்றுள்ளனர். . ஸ்பானிஸ்-அமெரிக்கன் யுத்த காலத்தில் இருந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த பிலிப்பீன்ஸ், இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலக போரின் பின் சுதந்திரம் […]

இந்திய வைத்தியசாலை தீக்கு 23 பேர் பலி

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள Bhubaneswar என்ற இடத்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீக்கு குறைந்தது 23 பேர் பலியாகி உள்ளனர். SUM என்ற இந்த வைத்தியசாலையில் உள்ள dialysis வைத்திய பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்று உள்ளது. தீ அணைக்கும் படையின் கருத்துப்படி மின்சுற்று காரணமாகவே (short circuit) இந்த விபத்து இடம்பெற்று உள்ளது. . திங்கள் மாலை சுமார் 7:45 மணியளவில் இடம்பெற்ற இந்த தீக்கு மேலும் சுமார் 120 பேர் காயம் […]

இன்று இருவரை விண்ணுக்கு அனுப்பியது சீனா

இன்று இரண்டு சீன விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது சீனா. இவர்கள் இன்று பெய்ஜிங் நேரப்படி காலை 7:30 க்கு அனுப்பப்பட்டனர். சீன விண்வெளி அமைப்பு இதற்கு முன் ஐந்து தடவைகள் தம் வீரர்களை விண்வெளி அனுப்பி இருந்தது. ஆனால் இம்முறையே இந்த சீன வீரர்கள் 30 நாட்கள் வரை விண்வெளியில் இருப்பர். . இன்று ஏவப்படும் விண்கலம் கடந்த மாதம் ஏவப்பட்ட Shenzhou-II என்ற விண் ஆய்வுகூடத்துடன் இரண்டு நாட்களின் பின் இணையும். அந்த ஆய்வுகூடத்தில் […]

பங்களாதேசத்துக்கு சீனா $24 பில்லியன் கடனுதவி

பங்களாதேசத்துக்கு சுமார் $24 பில்லியன் கடனுதவி செய்ய சீனா முன்வந்துள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள BRICS மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் சீன ஜனாதிபதி பங்களாதேசமும் செல்லவுள்ளார். அப்போதே இந்த கடனுதவி விபரம் வெளியிடப்படும். . இந்த கடன் உதவியை பயன்படுத்தி, பங்களாதேசத்தில் 1320 MW மின் உற்பத்தி நிலையம், துறைமுகம், ரயில் சேவை உட்பட சுமார் 25 திட்டங்களை சீனா மேற்கொள்ளும். . சீனாவுக்கு போட்டியாக இந்தியாவும், ஜப்பானும் இணைந்து கடனுதவி செய்ய கடந்த வருடம் […]

இந்தியா S-400 ஏவுகணை கொள்வனவு

ரஷ்யாவின் தயாரிப்பான S-400 ஏவுகணைகளை இந்தியா கொள்வனவு செய்ய இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. நிலத்தில் இருந்து வானத்துக்கு பாயும் இந்த ஏவுகணைகளை இந்தியா சுமார் $ 4.47 பில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்யும். கொள்வனவு செய்யப்படவுள்ள ஏவுகணைகளின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. . கோவா நகரில் நடைபெறவுள்ள BRICS (Brazil, Russia, India, China, South Africa) மாநாட்டின் போது இந்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. BRICS அங்கத்துவ நாட்டு தலைவர்கள் மாநாட்டில் பங்குகொள்ள இந்தியா […]

எட்டு மாதத்தில் 43 மில்லியன் கலன் பால் விரயம்

இந்த வருட முதல் 8 மாதங்களில் அமெரிக்க பசுப்பால் உற்பத்தியாளர்களால் 43 மில்லியன் கலன் பசுப்பால் விரயமாக்கப்பட்டு உள்ளதாம். பெரும்பாலும் இவை நிலத்தில் ஊற்றப்பட்டு விரயம் செய்யப்பட்டு உள்ளன. ஐந்தொகை பால் 66 ஒலிம்பிக் தர நீச்சல் தடாகங்களை நிரப்ப போதுமானது. . தற்போது அமெரிக்காவில் பசுப்பால் உற்பத்தி மிக கூடி, அதனால் விலை மிக குறைந்து உள்ளது. பாலை எடுத்து செல்வதற்கான செலவு, விற்பனை விலையையும் விட அதிகம் ஆகிவிட்டதாலேயே இவ்வாறு பால் விரயம் செய்யப்படுகிறது. […]

ஜெயலலிதா மருத்துவத்தில், பன்னீர்செல்வம் கடமையில்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் சுகவீனம் காரணமாக Apollo வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் (22-10-2016) இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக உறுதியான செய்திகள் வெளியிடப்படவில்லை. அதேவேளை ஒரு பிரித்தானிய வைத்தியர் ஜெயலலிதாவை கண்காணிக்க தமிழ்நாடு சென்றுள்ளார். . இன்று செவ்வாய் ஜெயலலிதாவின் கடமைகள் அவரின் நம்பிக்கைக்கு உரியவராக பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த கடமைகள் கைமாற்றம் தமிழ்நாடு ஆளுநர் முன்னிலையில் இடம்பெற்று உள்ளது. ஆனாலும் ஜெயலலிதாவே […]