இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள Bhubaneswar என்ற இடத்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீக்கு குறைந்தது 23 பேர் பலியாகி உள்ளனர். SUM என்ற இந்த வைத்தியசாலையில் உள்ள dialysis வைத்திய பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்று உள்ளது. தீ அணைக்கும் படையின் கருத்துப்படி மின்சுற்று காரணமாகவே (short circuit) இந்த விபத்து இடம்பெற்று உள்ளது. . திங்கள் மாலை சுமார் 7:45 மணியளவில் இடம்பெற்ற இந்த தீக்கு மேலும் சுமார் 120 பேர் காயம் […]
இன்று இரண்டு சீன விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது சீனா. இவர்கள் இன்று பெய்ஜிங் நேரப்படி காலை 7:30 க்கு அனுப்பப்பட்டனர். சீன விண்வெளி அமைப்பு இதற்கு முன் ஐந்து தடவைகள் தம் வீரர்களை விண்வெளி அனுப்பி இருந்தது. ஆனால் இம்முறையே இந்த சீன வீரர்கள் 30 நாட்கள் வரை விண்வெளியில் இருப்பர். . இன்று ஏவப்படும் விண்கலம் கடந்த மாதம் ஏவப்பட்ட Shenzhou-II என்ற விண் ஆய்வுகூடத்துடன் இரண்டு நாட்களின் பின் இணையும். அந்த ஆய்வுகூடத்தில் […]
பங்களாதேசத்துக்கு சுமார் $24 பில்லியன் கடனுதவி செய்ய சீனா முன்வந்துள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள BRICS மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் சீன ஜனாதிபதி பங்களாதேசமும் செல்லவுள்ளார். அப்போதே இந்த கடனுதவி விபரம் வெளியிடப்படும். . இந்த கடன் உதவியை பயன்படுத்தி, பங்களாதேசத்தில் 1320 MW மின் உற்பத்தி நிலையம், துறைமுகம், ரயில் சேவை உட்பட சுமார் 25 திட்டங்களை சீனா மேற்கொள்ளும். . சீனாவுக்கு போட்டியாக இந்தியாவும், ஜப்பானும் இணைந்து கடனுதவி செய்ய கடந்த வருடம் […]
ரஷ்யாவின் தயாரிப்பான S-400 ஏவுகணைகளை இந்தியா கொள்வனவு செய்ய இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. நிலத்தில் இருந்து வானத்துக்கு பாயும் இந்த ஏவுகணைகளை இந்தியா சுமார் $ 4.47 பில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்யும். கொள்வனவு செய்யப்படவுள்ள ஏவுகணைகளின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. . கோவா நகரில் நடைபெறவுள்ள BRICS (Brazil, Russia, India, China, South Africa) மாநாட்டின் போது இந்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. BRICS அங்கத்துவ நாட்டு தலைவர்கள் மாநாட்டில் பங்குகொள்ள இந்தியா […]
இந்த வருட முதல் 8 மாதங்களில் அமெரிக்க பசுப்பால் உற்பத்தியாளர்களால் 43 மில்லியன் கலன் பசுப்பால் விரயமாக்கப்பட்டு உள்ளதாம். பெரும்பாலும் இவை நிலத்தில் ஊற்றப்பட்டு விரயம் செய்யப்பட்டு உள்ளன. ஐந்தொகை பால் 66 ஒலிம்பிக் தர நீச்சல் தடாகங்களை நிரப்ப போதுமானது. . தற்போது அமெரிக்காவில் பசுப்பால் உற்பத்தி மிக கூடி, அதனால் விலை மிக குறைந்து உள்ளது. பாலை எடுத்து செல்வதற்கான செலவு, விற்பனை விலையையும் விட அதிகம் ஆகிவிட்டதாலேயே இவ்வாறு பால் விரயம் செய்யப்படுகிறது. […]
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் சுகவீனம் காரணமாக Apollo வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் (22-10-2016) இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக உறுதியான செய்திகள் வெளியிடப்படவில்லை. அதேவேளை ஒரு பிரித்தானிய வைத்தியர் ஜெயலலிதாவை கண்காணிக்க தமிழ்நாடு சென்றுள்ளார். . இன்று செவ்வாய் ஜெயலலிதாவின் கடமைகள் அவரின் நம்பிக்கைக்கு உரியவராக பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த கடமைகள் கைமாற்றம் தமிழ்நாடு ஆளுநர் முன்னிலையில் இடம்பெற்று உள்ளது. ஆனாலும் ஜெயலலிதாவே […]
பாகிஸ்தானுடனான மோதல்களின்போது இந்தியா தாம் இந்து நதியை மறித்து அணை ஒன்று கட்டப்போவதாக கூறி இருந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட Indus Water Treaty என்ற உடன்படிக்கையை மீறியே இந்தியா அந்த அறிவித்தலை சில தினங்களுக்கு முன் செய்திருந்தது. . ஆனால் சீனாவில் இருந்து வரும் பிரமபுத்ரா ஆறு விடயத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எந்தவொரு உடன்படிக்கையும் இல்லாதவேளை சீனா பிரமபுத்ராவுக்கு நீரை வழங்கும் கிளை ஆறு ஒன்றை மறித்து, $740 […]
கடந்த மாதம் 29 ஆம் திகதி (29-09-2016) சுமார் 9:00 PM அளவில் இந்து சமுத்திரத்தில் சென்றுகொண்டிருந்த அமெரிக்காவின் கடற்படை கப்பலான USS Hopperஇல் ஒரு படையினருக்கு அவசர வைத்திய சேவை தேவைப்பட்டு இருந்தது. அப்போது அந்த கப்பல் இலங்கை கரையில் இருந்து சுமார் 265 km தொலைவில் இருந்தது. அத்துடன் இந்த கப்பலுக்கு வைத்திய சேவை வழங்க வேறு எந்த அமெரிக்க கப்பலும் அருகில் இருந்திருக்கவில்லை. இந்த கப்பலில் ஹெலியும் இருந்திருக்கவில்லை. . வேறு வழி […]
Ukraine விடயத்திலும், சிரியா விடயத்திலும் முரண்பட்ட கொள்கைகளை கொண்டுள்ள அமெரிக்காவும், ரஷ்யாவும் ஏட்டிக்கு போட்டியாக தம்முள் முரண்பட ஆரம்பித்து உள்ளனர். . கடந்த 24 மணித்தியாலங்களுள் ரஷ்யா தாம் 2000 ஆண்டளவில் அமெரிக்காவுடன் செய்துகொண்டிருந்த plutonium உடன்படிக்கையை தற்கலிகமாக இடை நிறுத்துவதாக கூறியிருந்தது. இந்த உடன்படிக்கையின்படி இருதரப்பும் தலா 34 தொன் எடையுடைய ஆயுத தர plutonium கையிருப்பை அழித்தல் வேண்டும். இந்த 34 தொன் plutonium சுமார் 8500 nuclear ஆயுதங்களை உருவாக்க போதுமானது. . […]
1966 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊக்குவிப்பில், ஜப்பானை தலைமைப்படுத்தி உருவாக்கப்பட்டது ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB). தற்போது அதில் 67 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் ADBயின் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையை மிஞ்சவுள்ளது சீனாவால் உருவாக்கப்பட்ட AIIB (Asian Infrastructure Investment Bank). AIIBயில் தற்போது 57 அங்கத்துவ நாடுகள் உள்ளன. ஆனால் அந்த எண்ணிகள் மேலும் 20 ஆல் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. . புதிதாக வேறு நாடுகள் AIIBயில் இணைவதற்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால […]