இலங்கைக்கு புதிதாக Marines படை (Marines Corps) அமைக்கப்பட்டுள்ளது. அந்த புதிய படைக்கு அமெரிக்காவின் Marines பயிற்சி வழங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த புதிய படை 7 அதிகாரிகளையும், 150 படையினரையும் (sailors) கொண்டிருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. . பொதுவாக நாடுகள் தரைப்படை, கடற்படை, விமானப்படை என மூன்று படை பிரிவுகளை கொண்டிருந்தாலும், அமெரிக்கா போன்ற சில நாடுகள் தரையிலும், கடலிலும் இயங்கக்கூடிய ஒரு அணியையும் கொண்டிருப்பது உண்டு. இவ்வகை படையினர் விசேட தாக்குதல்களுக்கு பயப்படுத்தப்படுவர். […]
இந்திய திரையரங்குகள் படம் ஆரம்பிக்கு முன் கட்டாயமாக இந்திய தேசியகீதத்தை பாடவேண்டும் என்று இந்திய உயர் நீதிமன்றம் இன்று புதன் கூறியுள்ளது. ஆதிகாலங்களில் இவ்வாறு இந்திய தேசியகீதம் பாடப்பட்டு இருந்திருந்தாலும் அண்மைக்காலங்களில் அவ்வாறு பாடுவது நின்று போயுள்ளது. தற்போது உயர் நீதிமன்றம் மீண்டும் தேசீயகீதம் பாடலை கட்டாயப்படுத்தி உள்ளது. . அவ்வாறு கீதம் பாடப்படும்போது, இந்திய தேசிய கொடி அல்லது கொடி உருவமும் கொண்டிருக்கப்படல் வேண்டுமாம். அதுமட்டுமன்றி திரையரங்கின் கதவுகள் மூடப்பட்டு, அனைவரும் எழுந்து நின்று மரியாதை […]
கொலம்பியாவில் பிரேசில் நாட்டு உதைபந்தாட்ட வீரர்களை ஏற்றி சென்ற வாடகை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் ஆறு பேர் உயிர் தப்பியும் உள்ளார். மரணமானோரில் பெரும்பாலானோர் உதைபதாட்ட வீரரும், பத்திரிகையாளரும் ஆவர். உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 10:00 மணியளவில் விமானி அபாயக்குரல் கொடுத்துள்ளார். அவர் விமானத்தில் இலத்திரனியல் குழப்பம் உருவாகியுள்ளதாக கூறி உள்ளார். பின்னர் அந்த விமானம் வீழ்ந்துள்ளது. . இந்த விமானம் (flight 2933) பிரேசில் நாட்டு உதைபந்தாட்ட […]
கியூபாவின் முன்னாள் தலைவர் பிடேல் காஸ்ரோ இன்று தனது 90 ஆவது வயதில் காலமானார். இவர் ஒரு இடதுசாரி தலைவராக அமெரிக்காவின் மிக அருகில் இருந்து வலதுசாரி நாடுகளுக்கு cold war காலத்தில் முக்கிய நிகழ்வுகளை நடாத்தியவர். . ஸ்பெயின் நாட்டிலுருந்து வந்து குடியேறிய ஒருவருக்கு பிறந்த காஸ்ரோ கரும்பு செய்கையில் முன்னணியில் இருந்தவர். இவர் பல்கலைக்கழத்தில் சட்டம் படிக்கும் போதே, அமெரிக்கா நிறுவனங்கள் தமது நாட்டிடை சுரண்டுவதை எதிர்த்தவர். அதன் காரணமாக முதலாளித்துவத்தை எதிர்க்க ஆரம்பித்தார். […]
சுமார் 29 வருடங்களின் முன் காலம் சென்ற நடிகர், முன்னாள் தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆர். சொத்துக்களின் பொறுப்பை நீதிமன்றம் இன்று வியாழன் எடுத்துள்ளது. இந்த சொத்துக்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை நிர்வாகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களை நியமித்து உள்ளது. . 1987 இல் மறைந்த எம். ஜி. ஆர். தனது சொத்துக்களுக்கு பொறுப்பாக ராகவாச்சாரி என்பவரை சட்டப்படி நியமித்து இருந்தார். அத்துடன், ராகவாசரியின் மறைவின் பின் ராஜேந்திரன் என்பவரை […]
கர்நாடக இசை வித்துவான் பாலமுரளிகிருஷ்ணா தனது 86ஆவது வயதில் இன்று செவ்வாய் சென்னையில் காலமானார். தனது கர்நாடக இசைதுறைக்கான சேவை காரணமாக இந்தியாவின் ‘பத்ம பூஷன்’ பட்டம் முதல் பல பட்டங்களை பெற்ற இவர் தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், தமிழ் போன்ற பல மொழிகளில் தனது இசையை பரப்பியுள்ளார். . கர்நாடக இசையில் மட்டுமன்றி இந்திய திரையுலகிலும் இவர் சேவை ஆற்றியுள்ளார். இவர் சுமார் 400 பாடல்கள் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. சில படங்களில் இவர் நடித்தும் உள்ளார். […]
ஜப்பானின் Fukushima பகுதியில், உள்ளூர் நேரப்படி, செய்வாய் காலை 6:00 மணியளவில் 7.3 அளவிலான பெரும் நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. நிலநடுக்கத்தால் உருவாக்கப்பட்ட கடல் அலைகள் 3 மீட்டர் வரை (10 அடிவரை) இருக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. மக்களை உயர் இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் கேட்டுள்ளனர். . Fukushima Daiichi அணு மின் உற்பத்தி நிலையம் இங்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த மின் நிலையத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது. ஆனாலும் முன் எச்சரிக்கையாக அவற்றின் […]
இந்தியாவில் இன்று ஞாயிறு காலை 3:00 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்து ஒன்றுக்கு 100 மேற்பட்டோர் பலியாகியும், 200 வரையானோர் காயமடைந்தும் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்து Indore நகரில் இருந்து பீகார் மாநிலத்து Patna நகர்வரை செல்லும் Indore-Patna Express என்ற ரயிலே இவ்வாறு உத்தர பிரதேச மாநிலத்து கான்பூர் நகரில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியது. தடம்புரண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. . இவ்விபத்தில் குறைந்தது 14 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு உள்ளன. காயமடைந்தோர் கான்பூர் […]
உலகின் மிகவும் இளைய நாடான தென் சூடான் மீது ஐ. நா. ஆயுத தடை நடைமுறை செய்யவேண்டும் என்று அமெரிக்கா இன்று வியாழன் கூறியுள்ளது. அமெரிக்காவுக்கான ஐ. நா. தூதுவர் சமந்தா பவர் (Samantha Power) என்பவரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். . இங்கே வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் தென் சூடானை முன்னைய சூடானில் இருந்து பிரித்து ஒரு நாடாக்க முன்னின்று செயல்பட்டது அமெரிக்காவே. . 2011 ஆம் ஆண்டுவரை தற்போதைய சூடானும், தற்போதைய தென் சூடானும் […]
ரஷ்யா சர்வதேச குற்ற நீதிமன்றம் (ICC) என்ற அமைப்பில் இருந்து வெளியேறுவதாக இன்று புதன் கூறியுள்ளது. இவ்விடயம் சார்பாக கருத்து தெரிவித்த ரஷ்யாவின் வெளிவிவகார அதிகாரி ஒருவர், ICC உண்மையில் ஒரு சுதந்திரமான அமைப்பு அல்ல என்றும், ICC அமைப்புக்கு தேவையான பலம் இல்லை என்றும் கூறியுள்ளார். . ஆனால் ரஷ்யாவின் வெளியேற்றத்துக்கு காரணம், அண்மையில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட Crimea பகுதியில் செய்துகொண்ட சட்டவிரோத நடவடிக்கைள் என்று கருதப்படும் செயல்களை விசாரிக்க முற்பட்டதே என்று நம்பப்படுகிறது. […]