இன்று வெள்ளி அமெரிக்கா தன்வசம் இருந்த ஆர்ஜென்ரீனா யுத்த காலத்து உண்மைகள் பலவற்றை வெளியீடு உள்ளது. Cold War காலத்தில் ஆர்ஜென்ரீனாவில் ஒரு சர்வாதிகார அரசை அமைத்து அதற்கு ஆதரவு வழங்கி வந்திருந்தது அமெரிக்கா. அக்காலங்களில் அந்த சர்வாதிகார அரசு செய்த கொடுமைகளை அமெரிக்கா ஆவணப்படுத்தி வைத்திருந்தாலும் தற்போதே அவைகளை வெளியிடுகின்றது. . 1975 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற, Dirty War என அழைக்கப்படும் இந்த யுத்தம் தொடர்பான 500 ஆர்வங்களை […]
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருந்த டொனால் ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு பதிலடியாக சீனா தனது அணுக்குண்டு விமானம் ஒன்றை தென்சீன கடல் பகுதியில் பறக்க விட்டுள்ளது. முன் எப்போதும் பறக்காத அளவு தூரத்துக்கு இம்முறை இந்த விமானம் பறந்துள்ளது. . 1972 ஆம் ஆண்டு முதல், ‘ஒரு சீனா’ என்ற கொள்கையின்கீழ், பெய்ஜிங் தலைமையிலான சீனாவையே நாடாக கொண்டு, அதேவேளை தாய்வானுடன் மேலதிக உறவையும் பேணி வந்துள்ளது. 1972 முதல் அமெரிக்கா தாய்வானை ஒரு நாடாக […]
நைஜீரியாவின் தென் பகுதியில் உள்ள Uyo நகரில் உள்ள Reigners Bible Church என்ற தேவாலயத்தின் கூரை வீழ்ந்ததில் 160 பலியாகி உள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சனிக்கிழமை பெரும்தொகை மக்கள் நிகழ்வு ஒன்றுக்காக கூடியிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. . சனிக்கிழமை நிகழ்வுக்காக மேற்படி மண்டபம், முறைமைக்கு முரணாக, வேகப்படுத்தி முடிக்கப்பட்டதே காரணமாக இருக்கலாம் எந்றம் கூறப்படுகிறது. கட்டுமான விதிகள் மீறப்பட்டு இருந்தால், உரியவர்கள் தண்டிக்கப்படுவர் என்று அரசு கூறியுள்ளது. […]
இந்தியாவின் கல்கத்தா நகர் பகுதியில் பிறந்த சிசுக்கள் உடனடியாக களவாடப்பட்டு பெருந்தொகை பணத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன. ஆகக்கூடிய விலையில் அழகான ஆண் சிசுக்கள் இந்திய 700,000 ரூபாய் வரையிலும், கருப்பான பெண் சிசுக்கள் மிக குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுகிறதாம். . இந்திய CID போலீஸ் அதிகாரிகள் Baduria என்ற இடத்து வீடு ஒன்றில் இருந்து 3 சிசுக்களை அண்மையில் மீட்டு உள்ளார். இச்சிசுக்கள் அங்குள்ள ஓர் கிறீஸ்தவ பொதுச்சேவை நிலையம் ஒன்றுக்கு எடுத்து […]
தென்கொரியாவின் ஜனாதிபதி Park Geun-hye தனது பதவியை விரைவில் இழக்கக்கூடும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. இன்று வெள்ளி இவர் மீதான குற்ற பிரேரணை (impeachment) வாக்கெடுப்பு நிகழ்த்தப்படுவது உறுதி ஆயிற்று. இவர் மீது குற்ற பிரேரணை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் 234 வாக்குகளால் நிறைவேறி உள்ளது. மொத்தம் 300 உறுப்பினரை கொண்ட சபையில் 200 வாக்குகள் மட்டுமே வேண்டியிருந்தது. . இவரை குற்ற விசாரணை செய்தல் வேண்டும் என ஆதரித்த உறுப்பினரில் சுமார் 70 உறுப்பினர் இவரின் […]
ஹோலிவூட் (Hollywood) முக்கிய பங்கு வகிக்க, சீனாவின் கலைஞர்களை உள்ளடக்கிய பிரமாண்ட திரைப்படம் ஒன்று இந்த மாதம் 16 ஆம் திகதி சீனாவில் வெளிவரவுள்ளது. சீன பெருஞ்சுவரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனை கதை ஒன்றை “The Great Wall” என ஆங்கிலத்திலும், செஆங் செங் (Chang Cheng) என்று சீன மொழியிலும் வெளியிடுகின்றனர். ஹோலிவூட்டின் பிரபல நடிகர் மாற் டேமன் (Matt Damon) உட்பட பல ஹோலிவூட் நடிகர்களும், Andy Lau உட்பட பல சீன […]
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், அரசியல், நகைச்சுவை மற்றும் நாடகத்துறையாளருமான சோ ராமசாமி தனது 82ஆவது வயதில் இன்று புதன் காலமானார். எவருக்கும் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்காத இவர் எவரையும் தட்டிக்கேட்க பின்தங்கியது இல்லை. அதனால் இவர் பல எதிரிகளை உருவாக்கி இருந்தார். இவர் அ.தி.மு.கட்சியையும் சாடியிருந்தார், தி.மு.கட்சியையும் சாடியிருந்தார். BJP ஆதரவு கருத்துக்களை வெயிட்டு இருந்தாலும், இவர் BJP பாபர் மசூதி அழிப்பு நடவடிக்கையையும் சாடியிருந்தார். இவர் MGR அரசையும் சாடியிருந்தார். . இவர் எழுதிய “முகமட் […]
இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் வடபகுதியில் உள்ள ஆச்சேயில் (Aceh) புதன் காலை 5:00 மணியளவில் இடம்பெற்ற நிலநடுக்கத்துக்கு 25 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அமெரிக்க Geological Survey அமைப்பின் கணிப்பின்படி 6.5 அளவிலான நடுக்கம், நிலத்துக்கு கீழ் 17.2 km ஆழத்தில் இடம்பெற்று உள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுள் அகப்பட்டும் இருக்கலாம் என்று க்கூறப்படு உள்ளது. . சுனாமி ஆபத்து இல்லை என்றும் கூறப்படு உள்ளது. . 2004 ஆம் ஆண்டு இவ்விடத்தில் இடம்பெற்ற 9.1 […]
தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இன்று தனது 68 ஆவது வயதில் காலமானார். இவரின் மரணத்தை இன்று திங்கள் இரவு Apollo வைத்தியசாலை அறிவித்து உள்ளது. பொதுவாகவே அரசியல்வாதிகளின் குடும்பத்தில் பிறந்து அரசியலுக்கு வந்த பெண்களை போல் அல்லது, இவர் சுயமாக அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனார். . 1960 ஆம் ஆண்டுமுதல் இவர் 140 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். சுமார் 20 வருடங்கள் சினிமாவில் இருந்த இவர், பின்னர் 1982 ஆம் ஆண்டில் அண்னா […]
இலங்கை அரசாங்கம் புதிதாக உள்ளூர் விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த சேவையை இலங்கை விமானப்படை செயல்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை இரண்டு சீன Y-20 விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக சீன பத்திரிகை கூறியுள்ளது. . சீனாவின் Xian Aircraft Industrial Corporation நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த Y-20 விமானம் இந்த வருடம் ஜூலை மாதத்திலேயே முதன் முதலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இலங்கை இந்த விமானத்தை கொள்வனவு செய்யின், சீனாவுக்கு வெளியே முதலில் Y-20 […]