எம். ஜி. ஆர். சொத்துக்கள் நீதிமன்றம் கையில்

சுமார் 29 வருடங்களின் முன் காலம் சென்ற நடிகர், முன்னாள் தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆர். சொத்துக்களின் பொறுப்பை நீதிமன்றம் இன்று வியாழன் எடுத்துள்ளது. இந்த சொத்துக்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை நிர்வாகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களை நியமித்து உள்ளது. . 1987 இல் மறைந்த எம். ஜி. ஆர். தனது சொத்துக்களுக்கு பொறுப்பாக ராகவாச்சாரி என்பவரை சட்டப்படி நியமித்து இருந்தார். அத்துடன், ராகவாசரியின் மறைவின் பின் ராஜேந்திரன் என்பவரை […]

கர்நாடக வித்துவான் பாலமுரளிகிருஷ்ணா மரணம்

கர்நாடக இசை வித்துவான் பாலமுரளிகிருஷ்ணா தனது 86ஆவது வயதில் இன்று செவ்வாய் சென்னையில் காலமானார். தனது கர்நாடக இசைதுறைக்கான சேவை காரணமாக இந்தியாவின் ‘பத்ம பூஷன்’ பட்டம் முதல் பல பட்டங்களை பெற்ற இவர் தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், தமிழ் போன்ற பல மொழிகளில் தனது இசையை பரப்பியுள்ளார். . கர்நாடக இசையில் மட்டுமன்றி இந்திய திரையுலகிலும் இவர் சேவை ஆற்றியுள்ளார். இவர் சுமார் 400 பாடல்கள் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. சில படங்களில் இவர் நடித்தும் உள்ளார். […]

ஜப்பானில் 7.3 அளவிலான நிலநடுக்கம்

ஜப்பானின் Fukushima பகுதியில், உள்ளூர் நேரப்படி, செய்வாய் காலை 6:00 மணியளவில் 7.3 அளவிலான பெரும் நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. நிலநடுக்கத்தால் உருவாக்கப்பட்ட கடல் அலைகள் 3 மீட்டர் வரை (10 அடிவரை) இருக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. மக்களை உயர் இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் கேட்டுள்ளனர். . Fukushima Daiichi அணு மின் உற்பத்தி நிலையம் இங்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த மின் நிலையத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது. ஆனாலும் முன் எச்சரிக்கையாக அவற்றின் […]

இந்தியாவில் ரயில் விபத்து, 100 வரை பலி

இந்தியாவில் இன்று ஞாயிறு காலை 3:00 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்து ஒன்றுக்கு 100 மேற்பட்டோர் பலியாகியும், 200 வரையானோர் காயமடைந்தும் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்து Indore நகரில் இருந்து பீகார் மாநிலத்து Patna நகர்வரை செல்லும் Indore-Patna Express என்ற ரயிலே இவ்வாறு உத்தர பிரதேச மாநிலத்து கான்பூர் நகரில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியது. தடம்புரண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. . இவ்விபத்தில் குறைந்தது 14 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு உள்ளன. காயமடைந்தோர் கான்பூர் […]

தென் சூடான் மீது ஆயுத தடை, கேட்பது அமெரிக்கா

உலகின் மிகவும் இளைய நாடான தென் சூடான் மீது ஐ. நா. ஆயுத தடை நடைமுறை செய்யவேண்டும் என்று அமெரிக்கா இன்று வியாழன் கூறியுள்ளது. அமெரிக்காவுக்கான ஐ. நா. தூதுவர் சமந்தா பவர் (Samantha Power) என்பவரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். . இங்கே வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் தென் சூடானை முன்னைய சூடானில் இருந்து பிரித்து ஒரு நாடாக்க முன்னின்று செயல்பட்டது அமெரிக்காவே. . 2011 ஆம் ஆண்டுவரை தற்போதைய சூடானும், தற்போதைய தென் சூடானும் […]

ICC அமைப்பிலிருந்து ரஷ்யாவும் வெளியேறியது

ரஷ்யா சர்வதேச குற்ற நீதிமன்றம் (ICC) என்ற அமைப்பில் இருந்து வெளியேறுவதாக இன்று புதன் கூறியுள்ளது. இவ்விடயம் சார்பாக கருத்து தெரிவித்த ரஷ்யாவின் வெளிவிவகார அதிகாரி ஒருவர், ICC உண்மையில் ஒரு சுதந்திரமான அமைப்பு அல்ல என்றும், ICC அமைப்புக்கு தேவையான பலம் இல்லை என்றும் கூறியுள்ளார். . ஆனால் ரஷ்யாவின் வெளியேற்றத்துக்கு காரணம், அண்மையில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட Crimea பகுதியில் செய்துகொண்ட சட்டவிரோத நடவடிக்கைள் என்று கருதப்படும் செயல்களை விசாரிக்க முற்பட்டதே என்று நம்பப்படுகிறது. […]

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா யுத்த குற்றம்?

2003-05-01 முதல் 2014-12-31 வரையான காலத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் படைகளும், CIAயும் யுத்த குற்றங்களை செய்திருக்கலாம் என்று International Criminal Court (ICC) கூறியுள்ளது. . இன்று திங்கள் (2016-11-14) ICCயின் தலைமை வழக்கறிஞர் Fatou Bensouda இந்த கருத்தை தெரிவித்து உள்ளார். ஆப்கானித்தானில் இடம்பெற்றது என கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கான அடிப்படை விசாரணைகளை மேற்கொண்ட இவர், தான் விரைவில் ICC நீதிபதிகளை அணுகி இக்குற்றங்களை ஆழமாக விசாரிக்க அனுமதி கேட்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். . 2003 முதல் 2014 […]

வெட்டுக்கிளி உண்டார் Prof. Sam Wong PhD

. மூன்றாம் உலகநாட்டு சாதாரண மக்கள், குறிப்பாக ஆண்கள், தேர்தல் காலங்களில் அனாவசியமான பந்தயங்களில் ஈடுபட்டு, பின்னர் தோல்வி காரணமாக தலைக்கு மொட்டை அடைத்தல், பாதி மீசையை சவரம் செய்தல் போன்ற காரியங்களை செய்வது உண்டு. ஆனால் அவ்வகை போட்டி ஒன்றில் அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஈடுபட்டு, பின் தோல்வியுற்று, அதன் காரணமாக வெட்டுக்கிளி ஒன்றை தொலைக்காட்சி ஒன்றின் முன்னிலையில் உண்று உள்ளார். . அமெரிக்காவின் New Jersey […]

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி Trump

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ரம் (Donald Trump) தெரிவு செய்யப்படு உள்ளார். இவர் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாவார். இவர் Republican கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றாலும், இவர் வழமையான Republican அமைப்புக்கு (establishment) வெளி நபர் ஒருவரே. . Democrats கட்சி சார்பிலும் பேர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) என்றவர் அக்கட்சிக்குள் பெரும் ஆதரவுடன் இருந்து வந்திருந்தாலும், ஹெலரி கிளின்டன் (Hillary Clinton) உட்கட்சி (establishment) ஆதரவு காரணமாக சாண்டர்ஸை பின்தள்ளி அக்கட்சி சார்பில் போட்டியிட்டு […]

பாலஸ்தீனியரை கைவிட்டு இஸ்ரவேலை நெருங்கும் மோதி

மிக நீண்ட காலமாக இந்தியா ஒரு பாலஸ்தீனியார் ஆதரவு நாடாகவே இருந்து வந்துள்ளது. பாலஸ்தீன் தனது சொந்த நாட்டை அடைவதை இந்தியா 1988 ஆம் ஆண்டிலேயே ஆதரித்து இருந்தது. இந்தியாவே PLOவை ஆதரித்த முதலாவது அரபு நாடு அல்லாத நாடு. ஆனால் அமெரிக்க ஆதரவுடன் இந்தியாவை வளர்க்க முனையும் இந்திய பிரதமர் மோதி காலத்தில் இந்திய-இஸ்ரவேல் உறவு பலமடைந்து வருகின்றது. . இந்த மாதம் 15 ஆம் திகதி இஸ்ரவேலின் ஜனாதிபதி Reuven Rivlin 6-நாள் உத்தியோகபூர்வ […]