காசா யுத்தத்தை நிறுத்த கூறி அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரம் அடைய ஆரம்பித்துள்ளன. University of Southern California (USC) மே மாதம் 10ம் திகதி நிகழவிருந்த பட்டமளிப்பு விழாவையே இடைநிறுத்தி உள்ளது. விழாவில் வன்முறைகள் இடம்பெறலாம் என்று பயம் கொண்டுள்ளதாக USC கூறியுள்ளது. இந்த பட்டமளிப்பில் சுமார் 35,000 பேர் பங்குகொள்ள இருந்தனர். தற்போது அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை சிலர் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் வியட்நாம் யுத்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிடுகின்றனர். USC சுமார் 100 மாணவரை கைது செய்துள்ளது. […]
ஐ.நா. ஏற்றுக்கொண்ட 1967ம் ஆண்டின் எல்லைகளுக்கு ஏற்ப பலஸ்தீன் என்ற தமது நாடு நடைமுறை செய்யப்படல் ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் கட்சியாக மாற தயார் என்று கூறியுள்ளார் ஹமாஸின் அதிகாரி ஒருவர். Associated Press (AP) என்ற செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய உரை ஒன்றிலேயே Al-Hayya என்ற ஹமாஸ் அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார். 1967ம் ஆண்டின் எல்லைகளுக்கு அமைய West Bank, காசா உள்ளடங்கிய நாட்டையே Al-Hayya குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. தற்போதும் இதையே பலஸ்தீனர் நிலம் என்கிறது. ஆனால் இந்த நிலம் எங்கும் சட்டவிரோத யூத குடியிருப்புகள் தொடர்கின்றன. […]
அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் அன்ரொனி பிலிங்கன் (Antony Blinken) மீண்டும் சீனா சென்றுள்ளார். இன்று புதன் சீனா சென்ற இவரின் முதலாவது நோக்கம் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நிலவும் உறவை முறிப்பதே. யூக்கிரேனில் ரஷ்யா செய்யும் யுத்தம் 3 ஆண்டுகளாக தொடர்வதற்கு பிரதான காரணம் மேற்கு ரஷ்யாவின் இராணுவ பலத்தையும், பொருளாதாரத்தையும் முறிக்க முடியாமல் உள்ளமையே. சீனாவின் உதவியுடனேயே ரஷ்யா தனது இராணுவத்தையும், பொருளாதாரத்தையும் மேற்கின் தடைகளுக்கு அப்பால் வளர்ச்சி அடைய செய்கிறது. இன்று புதன் முதல் வெள்ளி வரையிலான 3 […]
அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் எங்கும் காசா யுத்தம் மோதல்களை உருவாக்கி வருகிறது. பல பல்கலைக்கழகங்களில் தடைகள், கைதுகள், வகுப்பு முடக்கங்கள் என்று முரண்பாடுகள் தொடர்கின்றன. Yale University வளாகத்தில் இடம்பெற்ற பலஸ்தீன ஆதரவு மாணவர் ஆர்ப்பாட்டத்தில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். New York University யிலும் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Columbia பல்கலைக்கழகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்கின்றன. California State Polytechnic பல்கலைக்கழகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆர்ப்பாட்டங்கள் காரணமாக Harvard University சில மாணவரை இடைநிறுத்தம் செய்துள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு […]
இலங்கையின் விசா விண்ணப்ப பணி தற்போது VFS Global என்ற நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இலங்கை விசாவை வழங்கிய ETA இணையம் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட VFS Global கனடா போன்ற வேறு பல நாடுகளுக்கும் விசா விண்ணப்ப பணிகளை செய்கிறது. VFS Global விண்ணப்ப பணிகளை செய்தாலும், விசா வழங்கும் தீர்மானம் அந்தந்த நாடுகளாலேயே செய்யப்படுகின்றன. இதுவரை $50 ஆக இருந்த 30-தின உல்லாச பயண விசா கட்டணம் தற்போது $75 ஆக அதிகரித்தது மட்டுமன்றி, VFS Global […]
இன்று வெள்ளி அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி தாக்கின என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானின் Isfahan நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனமான FARS அறிவித்துள்ளது. Isfahan ஈரானின் அணு ஆய்வு நிலையம், படை தளம் ஆகியன உள்ள இடம். ஈராக், சிரியா ஆகிய நாடுகளிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றன. பாதிப்பு விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை. சனிக்கிழமை ஈரான் சுமார் 300 கணைகள் கொண்டு இஸ்ரேலை தாக்கி […]
பலஸ்தீன் ஐ.நாவில் முழு அங்கத்துவம் கொண்ட நாடாக உரிமை பெறுவதை அமெரிக்கா மீண்டும் தனது வீட்டோ (veto) வாக்கு மூலம் தடுத்து உள்ளது. நேற்று வியாழன் 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் (UN Security Council) இடம்பெற்ற வாக்கெடுப்பில் 12 உறுப்பினர் நாடுகள் ஆதரவாக வாக்களிக்க அமெரிக்கா வீட்டோ மூலம் தீர்மானத்தை தடுத்து உள்ளது. ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, பிரித்தானியாவும், சுவிட்சலாந்தும் வாக்களியாது இருந்துள்ளன. […]
2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி கனடாவின் ரொரன்டோ நகரில் உள்ள Pearson சர்வதேச விமான நிலைய cargo பிரிவிலிருந்து C$ 22 மில்லியன் பெறுமதியான தங்க கட்டிகளும், பணமும் திருடப்பட்டு இருந்தன. அது தொடர்பாக விசாரணைகளை செய்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருந்து Air Canada விமானத்தில் வந்திருந்த இந்த தங்கம் உள்வீட்டு உதவியுடனேயே திருடப்பட்டுள்ளது என்பதை போலீசார் விரைவில் அறிந்துள்ளனர். திருட்டுக்கு சமர்ப்பித்த கணினி print ஒன்றே உண்மையை […]
இலங்கை புதிய விசா நடைமுறை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டமும் பயணிகளிடம் இருந்து டாலரை கறக்கும் நோக்கம் கொண்டதாகவே அமைகிறது. 180-தின சாதார உல்லாச பயணிகள் விசா (60 தினம்/பயணம்): $75 1-ஆண்டு உல்லாச பயணிகள் விசா (90 தினம்/பயணம்): $200 2-ஆண்டு உல்லாச பயணிகள் விசா (180 தினம்/பயணம்): $300 5-ஆண்டு உல்லாச பயணிகள் விசா (180 தினம்/பயணம்): $500 10-ஆண்டு உல்லாச பயணிகள் விசா (180 தினம்/பயணம்): $1,000
இலங்கைக்கு IMF வழங்கும் $2.9 பில்லியன் கடனின் அடுத்த பகுதியான $337 மில்லியன் கடன் வழங்கல் பின்போடப்படலாம் என்று .நம்பப்படுகிறது. இலங்கை பிற அரசுகளிடம் இருந்து பெற்ற கடன்களை அடைக்க இணக்கங்கள் ஏற்பட்டு இருந்தாலும், bond மூலம் பெற்ற கடன்களுக்கு இதுவரை இணக்கங்கள் ஏற்படவில்லை. அதனால் IMF வழங்கும் கடனின் அடுத்த வழங்கல் பிந்தலாம் என்று கருதப்படுகிறது. Bond மூலம் கடன் வழங்கியோர் தம் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதை ஏற்க மறுக்கின்றனர். இந்த இழுபறியால் […]