துறைமுக விவகாரத்தில் பொறுத்திருக்க சீனா தீர்மானம்

தென்னிலங்கை துறைமுக விவகாரத்தில் பொறுத்திருக்க சீனா தீர்மானம் செய்துள்ளது. அத்துடன் தென்னிலங்கையில் செய்யவிருந்த $1.1 பில்லியன் முதலீட்டு வேலைகளையும் சீனா பின்தள்ளி உள்ளது. . ஆரம்ப கால உடன்படிக்கைகளின்படி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 80% உரிமையை 99 வருடங்களுக்கு சீனா கொள்ளவிருந்தது. இந்த விடயம் கடந்த ஜனவரி 7 ஆம் திகதியளவில் முற்றாகி இருந்திருத்தல் வேண்டும். ஆனால் அவ்விவகாரம் இப்போதும் இழுபறியில் உள்ளது. துறைமுகத்துக்கு அப்பால், 15,000 ஏக்கர் நிலத்தில் சீனா வர்த்தக வலயம் ஒன்றும் அமைக்க விரும்பி […]

ஒரே ஏவலில் 104 செய்மதிகளை அனுப்பியது இந்தியா

இந்தியாவின் விண்வெளி அமைப்பான Indian Space Research Organization (ISRO) ஒரே ஏவலில் மொத்தம் 104 செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. ஒரே ஏவலில் செலுத்தப்பட்ட செய்மதிகளின் தொகைகளில் இதுவே அதிகம். இதற்கு முன், 2014 ஆம் ஆண்டில் ரஷ்யா 39 செய்மதிகளை ஒரே ஏவலில் அனுப்பி இருந்தது. ஏவப்பட்டு 30 நிமிடங்களில் 104 செய்மதிகளும் தமக்குரிய பாதைகளில் (orbits) பயணிக்க தொடங்கி உள்ளன. . மொத்தம் 104 செய்மதிகள் ஏவப்பட்டாலும் அதில் ஒரு செய்மதி மட்டுமே […]

டிரம்ப் பாதுகாப்பு ஆலோசகர் Flynn பதவிதுறந்தார்

டிரம்பின் ஆட்சியில் மிக முக்கிய பங்கு கொண்டிருந்த பாதுகாப்பு ஆலோசகர், ஒரு ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல், Michael Flynn ஆலோசகர் பதவியை திங்கள் இரவு இழந்துள்ளார். டிரம்ப் ஆட்சியில் வீழ்ச்சி அடையும் முதலாவது முன்னணி உறுப்பினர் இவராகும். . ஒபாமா ஆட்சி காலத்தில், டிரம்ப் சட்டப்படி ஜனாதிபதியாக பதவி ஏற்கமுன், ரஷ்யா மீது சில தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஹில்லாரி கிளின்டன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் emailகளை களவாடி பகிரங்கப்படுத்தியதால் கோபம் கொண்ட […]

அமெரிக்காவிலிருந்து கனடா ஓடும் அகதிகள்

அண்மையில் அமெரிக்காவின் டிரம்ப் அரசு அங்குள்ள அகதிகளுக்கு எதிராக எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் உள்ள சில அகதிகள் கனடாவுக்கு தப்பி ஓடுகின்றனர். தற்போது கனடாவில் குளிர் காலம் ஆகையால் இவர்களுள் சிலர் கடும் குளிரில் அகப்பட்டு உடல் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர். . இவ்வாறு நகரும் அகதிகளில் சிலர் கடாவின் Manitoba மாநிலத்து பெருநகரான Winnipeg நகருக்கு தெற்கே, சுமார் 110 km தொலைவில் உள்ள அமெரிக்க-கனடிய எல்லை நகரான Emerson மூலம் கனடா சென்றுள்ளனர். […]

புலிகளை அழிக்க இந்தியா உதவியது என்கிறார் மேனன்

2009 ஆம் ஆண்டில் புலிகளை அழிக்க இந்தியாவும் உதவியது என்கிறார் முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன். இவர் அண்மையில் வெளியிட்டுள்ள Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற புத்தகத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். . இந்தியாவின் RAW அமைப்பு LTTE, PLOTE, EROS, EPRLF, TELA ஆகிய இலங்கை தமிழ் ஆயுத குழுக்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கி ஆதரித்ததையும் இவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். . […]

அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார் Boris Johnson

தற்போதைய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் Boris Johnson பிரித்தானிய, அமெரிக்கா ஆகிய நாடுகளின் குடி உரிமை கொண்டவர். ஆனால் இவர் தனது அமெரிக்க குடியுரிமையை 2016 ஆம் ஆண்டில் சட்டப்படி கைவிட்டுள்ளார் என்கிறது அமெரிக்க அரசின் ஆவணம் ஒன்று. . Boris Johnson பிரித்தானிய பெற்றாருக்கு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பிறந்தவர். அதனால் அவருக்கு அமெரிக்க குடியுரிமையும், பிரித்தானிய குடியுரிமையும் கிடைத்தது. ஆனால் அவர் ஐந்து வயதில், தனது பெற்றாருடன், பிரித்தானியா சென்றுள்ளார். . இவர் 2015 […]

IPKF 1985 ஆம் ஆண்டிலேயே தயாராம்

அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள பழைய CIA குறிப்புக்களின் படி இந்திய தனது படைகளை இலங்கைக்கு அனுப்ப 1985 ஆம் ஆண்டிலேயே தயார் படுத்தி உள்ளதாம். இந்த CIA கருத்துப்படி இந்தியா இலங்கையின் விமான தளம் ஒன்றை ஆகாய படைகளை அனுப்புவதன் மூலம் கட்டுப்பாடில் கொண்டுவந்து பின் தமது படைகளை பலப்படுத்தும் திட்டத்தை கொண்டிருந்ததாம். இவ்வகை பயிற்சி ஒன்றை இந்திய படையினர் 1985 ஆண்டில் திருவானத்தபுரம் பகுதியில் செய்து இருந்தனராம். . “The paratroopers probably would try to […]

பொலநறுவையில் மும்மொழி பாடசாலை

இந்தியாவின் உதவியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதேசமான பொலநறுவையில் ஓர் பல்கலாச்சார, மும்மொழி பாடசாலை அமைக்கப்படவுள்ளது. இந்த உடன்படிக்கையை இலங்கைக்கான தூதுவர் Taranjit Singh Sandhuவும் இலங்கையின் கல்வி அமைச்சின் செயலாளர் Sunil Hettiarachchiயம் செய்து கொண்டார்கள். . இந்த பாடசாலை கட்டுமானத்துக்கான செலவை, சுமார் 300 மில்லியன் இலங்கை ரூபாய்கள், இந்தியா வழங்கும். இப்பாடசாலைக்கு சிங்கள, தமிழ், இஸ்லாமிய மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவர். இவர்களுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படும். . இந்த திட்டம் […]

டிரம்ப் தாண்டவ கூத்து 2

பலரும் எதிர்பார்த்தபடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சிலநாள் ஆட்சிக்குள் பல கூத்துக்களை நடாத்தியுளார். அவற்றுள் முதலாவது பெரிய கூத்து ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் ஆகிய 6 நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களை 90 நாட்களுக்கு தடை செய்தல். முதலில் அமரிக்க வதிவுரிமை (green card) பெற்றவர்களையும் இந்த தடை மூலம் திருப்பி அனுப்பினார் டிரம்ப், பின்னர் அதை மாற்றிக்கொண்டனர். . டிரம்பின் இரண்டாவது தாண்டவ கூத்துக்கு ஆஸ்திரேலியா இலக்காகி உள்ளது. கடந்த […]

இலங்கை வரவிருந்த 6 Kg போதை கைப்பற்றல்

இந்தியாவின் தூத்துக்குடி என்ற இடத்தில் இருந்து இலங்கைக்கு கடல் மூலம் கடத்தப்படவிருந்த 6 Kg heroin இந்திய சுங்கத்தால் கைப்பற்றப்பட்டு உள்ளது. அத்துடன் 3 இந்தியரும், 4 இலங்கையரும் கைதும் செய்யப்பட்டு உள்ளனர். செய்வாய் கைதுசெய்யப்பட்ட இந்தியர் புதன் கிழமை நீதிமன்றம் எடுத்துவரப்பட்டு இருந்தனர். . கடந்த ஞாயிறு பிற்பகல் இவ்வாறு போதை இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக துப்பு கிடைத்ததின் பின், இந்திய சுங்க உறுப்பினர்கள் கரையோரத்தை கண்காணித்து வந்துள்ளனர். ஒரு படகு சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணிக்க, […]