உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 7:36 மணிக்கு வடகொரியா 4 நீண்டதூரம் செல்லும் ஏவுகணைகளை (ICMB) ஏவியுள்ளது. இவை சுமார் 1,000 km தூரம் சென்று ஜப்பான் கடலுள் வீழ்ந்துள்ளன. தனது கரையோரத்தில் இருந்து 300 km தொலைவில் உள்ள கடலில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்ததாக ஜப்பான் கூறியுள்ளது. . அமெரிக்காவும், வடகொரியாவும் இணைந்து நடாத்தும் வருடாந்த இராணுவ பயிற்சிகள் தற்போது நடைபெறும் நேரத்திலேயே வடகொரியா தனது ஏவுகணை பயிற்சியை நடாத்தி உள்ளது. அமெரிக்க-வடகொரிய இராணுவ பயிற்சி […]
பிரான்சின் கப்பலான FS Mistral இலங்கை, சிங்கப்பூர், வியட்நாம், ஜப்பான், குஆம் (Guam), அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு 5 மாத பயணம் ஒன்றை மேற்கொண்டடுள்ளது. இந்த கப்பலில் 60 பிரித்தானிய படையினரும் தங்களது இரண்டு Merlin MK3 வகை ஹெலிகளுடன் இணைந்துள்ளார். . Mistral வகை கப்பல்கள் தரையிறங்க துறைமுகம்கள் அவசியம் இல்லை. Amphibious என்ற இவ்வகை கப்பல்கள் சாதாரண கடற்கரையில் தரையிறங்கும் வசதி கொண்டவை. விமான ஓடுபாதை இல்லாத இந்த கப்பலில் யுத்த விமானங்கள் இல்லாதுவிடினும், […]
அமெரிக்காவில் நேற்று வெள்ளி இரவு மீண்டும் ஒரு இந்தியர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளது. வெள்ளி மாலை 8:00 மணியளவில் 39 வயதுடைய சீக்கியர் ஒருவர் அவரது வீட்டின் முன் வைத்து சுடப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவின் பசிபிக் கடலோர Washington மாநிலத்து Seattle நகரின் தெற்கே இடம்பெற்று உள்ளது. . இவரை சுட்டது சுமார் 6 அடி உயரமுடைய வெள்ளையர் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. சுடுவதற்கு முன் இருவரும் வாக்குவாதப்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. சுட்டவர் […]
கனடாவின் பெரிய நகரான Torontoவின் நகர தலைவர் (Mayor) John Tory 10 நாள் பயணம் ஒன்றை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணம் இந்த மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகும். இவருடன் இரண்டு நகர பிரதிநிதிகளும், நான்கு ஊழியர்களும் பயணம் செய்வர். அத்துடன் இவர்களுடன் மேலும் 20 வர்த்தகர்கள் தமது செலவில் பயணம் செய்வர். . இவர்கள் இலங்கையில் கொழும்புக்கும், இந்தியாவில் டெல்கி, மும்பாய், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் பயணம் செய்வர். Jubilant Bhartia […]
பெரும் நட்டத்தில் இயங்கும் ஐந்து இலங்கை கூட்டுத்தாபனங்களை சீர்திருத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான Statement of Corporate Intent இன்று புதன்கிழமை அரசால் அங்கீகரிக்கப்படுள்ளது. இவ்வாறு மேற்படி கூட்டுத்தாபனங்களை சீர்திருத்தி இலாபகரமாக மாற்றும்படி IMF கடந்த வருடம் கடன் வழங்கலின் போது பணித்திருந்தது. . இலங்கை விமான சேவை (Srilankan), இலங்கை மின்சார கூட்டுத்தாபனம், இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், இலங்கை துறைமுகம் ஆகியன இவற்றுள் அடங்கும். இவை தற்போது மொத்தம் $7.93 பில்லியன் […]
இன்று செவ்வாய் ஐ. நா. வில், பொதுமக்களுக்கு எதிராக தடைசெய்யப்பட்ட குளோரின் வாயு குண்டுகளை வீசியது என்று குற்றம் கூறி, சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துவந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் veto மூலம் தடுத்துள்ளன. சிரியாவின் யுத்தம் ஆரம்பித்தபின் இன்றுடன் மொத்தம் ஏழு தடவைகள் ரஷ்யா சிரியவையும், அதன் தலைவர் Assadஐயும் பாதுகாத்து உள்ளது. . அத்துடன் டிரம்ப் ஆட்சியில் இதுவே முதல் தடவையாக ரஷ்யா அமெரிக்காவின் தீர்மானம் ஒன்றை ஐ.நாவில் veto மூலம் நிராகரித்து உள்ளது. […]
ஆபிரிக்க கண்டத்தில் உள்ள ஒரேயொரு அமெரிக்க நிரந்தர படை முகாம் Djibouti என்ற சிறிய நாட்டில் உள்ளது. தற்போது இந்த அமெரிக்க முகாமுக்கு அண்மையில், சுமார் 12 km தொலைவில், சீனா தனது 90 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடற்படை முகாம் ஒன்றை அமைக்கும் பணியில் வேகமாக ஈடுபாட்டு உள்ளது. சீனாவின் எல்லைகளுக்கு அப்பால் அமையப்போகும் முதலாவது சீன படைமுகாம் இதுவாகும். . நியூ யோர்க் நகரில் நடந்த 9/11 தாக்குதலின் பின், மத்தியகிழக்கு ஆயுத குழுக்களுக்கு […]
பெரிய அளவில் ஆடம்பர கல்யாண விழாக்கள் நடாத்துவோரை 10% வரி செலுத்த நிர்பந்திக்கும் வகையில் சட்டம் ஒன்றை நாடளவில் நடைமுறைப்படுத்த இந்தியா முனைகிறது. ஏட்டிக்கு போட்டியாக ஆடம்பர கல்யாண விழாக்கள் செய்யப்படும்போது பெரும் விரையங்கள் ஏற்படுவதாகவும், வறியோரையும் அவர்களின் நிலைக்கு அப்பால் செலவழிக்க தூண்டுவதாகவும் கூறப்படுகிறது. . காங்கிரஸ் M.P. Ranjeet Ranjan (பீஹார் மாநிலம்) அறிமுகப்படுத்தும் இந்த சட்டத்தின்படி, சட்டம் நடைமுறைக்கு வந்தால், 500,000 இந்திய ரூபாய்களுக்கு மேல் (சுமார் $7500.00) திருமணத்துக்கு செலவிடுவோர் 10% […]
அமெரிக்க உளவு திணைக்களத்தின் முன்னாள் பணியாளர் Edward Snowden பின்னாளில் அமெரிக்காவின் உளவு சம்பந்தமான இரகசியங்களை ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்தி இருந்தார். அதனால் அவர் அமெரிக்க அரசின் எதிரியும் ஆனார். அமெரிக்காவை விட்டு தப்பியோடிய இவர் சிலகாலம் Hong Kong நகரிலும் மறைந்திருந்தார். . Snowden Hong Kong நகரில் மறைந்திருந்த காலத்தில் அவருக்கு வதிவிட வசதி வழங்கியவர்கள் அங்கிருந்த இலங்கை அகதிகள் என்றும் கூறப்படுகிறது. அந்த இலங்கை அகதிகளை தேடி தற்போது இலங்கை CID போலீசார் Hong […]
இலங்கையின் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும் என்று இந்தியா வலியுறுத்த மாட்டாது என்று இந்தியாவின் வெளிவகார செயலாளர் S. Jaishankar கூறியதாக New Indian Express செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த விபரத்தை Jaishankar இன்று திங்கள்கிழமை TNAக்கு கூறியுள்ளார். . 1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தப்படி வடக்கும், கிழக்கும் இணைக்கப்படல் வேண்டும். ஆனால் இந்தியா அந்த கொள்கையை கைவிட்டு உள்ளது. 1987 இல் பலமான இஸ்லாமிய கட்சி என்று […]