ஐரோப்பாவில் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாதிகள்

நேற்று செவ்வாய் ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice) கூறிய தீர்ப்பில் புலிகள் (LTTE) ஒரு பயங்கரவாத இயக்கம் என்று மீண்டும் கூறியுள்ளது (Judgment ECLI:EU:C:2017:202). . LTTE ஒரு பயங்கரவாத இயக்கம் இல்லை என்றும், அதனால் அந்த இயக்கத்தை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கி, தற்போது முடக்கப்பட்டுள்ள அது சார்ந்த 4 நபர்களின் சொத்துக்களை (frozen assets) விடுவிக்க வேண்டும் என்றும் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே (Case C-158/14) இவ்வாறு தீர்ப்பு கூறப்பட்டு […]

டிரம்பின் 2005 ஆம் ஆண்டு வரி விபரம் பகிரங்கம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஜனாதிபதி வேட்பாளர் ஆக இருந்த காலத்தில் இருந்தே அவரின் வருமானத்தையும், அவர் செலுத்திய வரியையும் அறிய பலர் ஆவலாக இருந்தனர். இந்த விபரங்களை பத்திரிகையாளர் டிரம்பிடம் கேட்டிருந்த போதும், டிரம்ப் தனது வரி மீள் பரிசீலனையில் (audit) உள்ளதகாவும், அது முடிந்தபின் வெளியிடுவதாகவும் கூறியிருந்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னரும் அவ்வாறே கூறு இழுத்தடித்து வந்தார். . ஆனால் இன்று MSNBC என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் 2005 ஆம் ஆண்டுக்கான டிரம்பின் […]

உத்தரபிரதேச மாநிலத்தில் BJP பெருவெற்றி

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி (BJP) அண்மையில் இடம்பெற்ற உத்தரபிரதேச மாநில தேர்தலில் பெருவெற்றி அடைந்துள்ளது. மொத்தம் 403 ஆசனங்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்து தேர்தலில் BJP 312 ஆசனங்களை வென்றுள்ளது. இது, 7 ஆசனங்களை மட்டும் வென்ற, காங்கிரஸ் கடைசிக்கு பலத்த அடியாக உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பிரதமர் மோதிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் கருதலாம். . கடந்த மாத இறுதியிலும், இந்த மாத ஆரம்பத்திலும் […]

தென்கொரிய ஜனாதிபதி பதவி விலக்கப்பட்டார்

ஊழல் குற்றசாட்டு காரணமாக தென்கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதி Park Geun-hyeயின் பதவியை நீதிமன்றம் சற்றுமுன் பறித்துள்ளது. “The court dismisses President Park Geun-hye from her position,” என்றுள்ளார் நீதிபதி Lee Jung-mi. எட்டு நீதிபதிகள் கொண்ட குழுவின் எட்டு நீதிபதிகளும் சட்டசபை ஜனாதிபதியை பதவி விலக்கியது (impeach) சரி என்று தீர்வு கூறியுள்ளனர். . வடகொரியா ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தும் இந்த நேரத்தில் தென்கொரியா ஜனாதிபதியை இழப்பது தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய […]

காலிமுக Shangri-La 50% வரை விற்பனை

இலங்கையின் காலிமுக திடலுக்கு மறுபுறம் கட்டப்பட்டு வரும் One Galle Face என்ற ஷங்கிரி-ல (Shangri-La) மாடி வீடுகளின் (condo) 50% வரை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அதன் அதிகாரி Rajeev Garg கூறியுள்ளார். இந்த வீடுகளை பெரும்பாலும் வெளிநாடுகள் சென்ற இலங்கையரும், அந்நிய நாட்டவருமே கொள்வனவு செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டு உள்ளது. . இந்த வீடுகளில் மிக சிறிய, 3 அறைகளை கொண்ட 1,700 சதுர-அடி வீடுங்கள் சுமார் U$ 800,000 க்கு விற்பனை […]

அமெரிக்கர்களுக்கு ஐரோப்பா செல்ல விசா?

ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல ஐரோப்பிய ஒன்றிய (EU) நாட்டவர் அமெரிக்கா செல்ல முன்கூட்டியே விசா எடுத்தல் அவசியம் இல்லை. அதேபோல் அமெரிக்கர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்ல முன்கூட்டியே விசா எடுத்தலும் அவசியம் இல்லை. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான Bulgaria, Croatia, Cyprus, Poland, Romania ஆகிய நாட்டவர் அமெரிக்கா செல்ல முன்கூட்டியே விசா எடுத்தல் அவசியம். இதை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் தற்போது முனைகிறது. . இந்த மாதம் 2ம் திகதி […]

நான்கு ஏவுகணைகளை ஏவியது வடகொரியா

உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 7:36 மணிக்கு வடகொரியா 4 நீண்டதூரம் செல்லும் ஏவுகணைகளை (ICMB) ஏவியுள்ளது. இவை சுமார் 1,000 km தூரம் சென்று ஜப்பான் கடலுள் வீழ்ந்துள்ளன. தனது கரையோரத்தில் இருந்து 300 km தொலைவில் உள்ள கடலில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்ததாக ஜப்பான் கூறியுள்ளது. . அமெரிக்காவும், வடகொரியாவும் இணைந்து நடாத்தும் வருடாந்த இராணுவ பயிற்சிகள் தற்போது நடைபெறும் நேரத்திலேயே வடகொரியா தனது ஏவுகணை பயிற்சியை நடாத்தி உள்ளது. அமெரிக்க-வடகொரிய இராணுவ பயிற்சி […]

பிரித்தானிய படையுடன் இலங்கை வரும் பிரான்ஸ் கப்பல்

பிரான்சின் கப்பலான FS Mistral இலங்கை, சிங்கப்பூர், வியட்நாம், ஜப்பான், குஆம் (Guam), அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு 5 மாத பயணம் ஒன்றை மேற்கொண்டடுள்ளது. இந்த கப்பலில் 60 பிரித்தானிய படையினரும் தங்களது இரண்டு Merlin MK3 வகை ஹெலிகளுடன் இணைந்துள்ளார். . Mistral வகை கப்பல்கள் தரையிறங்க துறைமுகம்கள் அவசியம் இல்லை. Amphibious என்ற இவ்வகை கப்பல்கள் சாதாரண கடற்கரையில் தரையிறங்கும் வசதி கொண்டவை. விமான ஓடுபாதை இல்லாத இந்த கப்பலில் யுத்த விமானங்கள் இல்லாதுவிடினும், […]

அமெரிக்காவில் மீண்டும் ஓரு இந்தியர் மீது சூடு

அமெரிக்காவில் நேற்று வெள்ளி இரவு மீண்டும் ஒரு இந்தியர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளது. வெள்ளி மாலை 8:00 மணியளவில் 39 வயதுடைய சீக்கியர் ஒருவர் அவரது வீட்டின் முன் வைத்து  சுடப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவின் பசிபிக் கடலோர Washington மாநிலத்து Seattle நகரின் தெற்கே இடம்பெற்று உள்ளது. . இவரை சுட்டது சுமார் 6 அடி உயரமுடைய வெள்ளையர் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. சுடுவதற்கு முன் இருவரும் வாக்குவாதப்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. சுட்டவர் […]

இலங்கை, இந்தியா வரும் Toronto நகர தலைவர்

கனடாவின் பெரிய நகரான Torontoவின் நகர தலைவர் (Mayor) John Tory 10 நாள் பயணம் ஒன்றை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணம் இந்த மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகும். இவருடன் இரண்டு நகர பிரதிநிதிகளும், நான்கு ஊழியர்களும் பயணம் செய்வர். அத்துடன் இவர்களுடன் மேலும் 20 வர்த்தகர்கள் தமது செலவில் பயணம் செய்வர். . இவர்கள் இலங்கையில் கொழும்புக்கும், இந்தியாவில் டெல்கி, மும்பாய், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் பயணம் செய்வர். Jubilant Bhartia […]