உலக சுகாதார அளவீட்டில் இலங்கை 85ஆம் இடத்தில்

உலக அளவில் நடாத்தப்பட்ட Healthcare Access and Quality Index (HAQ) இன்று வெள்ளி வெளியிட்ட கணிப்பில் இலங்கை 73 புள்ளிகளை பெற்று 85ஆம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் உள்ள Andorra (சனத்தொகை 70,000) 95 புள்ளிகளையும், இரண்டாம் இடத்தில் உள்ள Iceland (சனத்தொகை 330,000) 94 புள்ளிகளையும் கொண்டுள்ளன. . இந்த ஆய்வு இலகுவில் குணப்படுத்தக்கூடிய 32 நோய்களுக்கு அந்தந்த நாடுகளில் கிடைக்கும் மருத்துவம், அந்நோய்களுக்கு மரணமாவோர் எண்ணிக்கை ஆகிய கணிப்புக்களையும் உள்ளடக்கும். . […]

நான்கு தடவை முதலமைச்சர் வகுப்பு 12 சித்தி

இந்திய வட மாநிலமான ஹர்யானாவில் (Haryana) நான்கு தடவைகள் முதலமைச்சராக இருந்த Om Prakash Chautala தனது 82 ஆவது வயதில், சிறை தண்டனை ஒன்றை அனுபவிக்கும் காலத்தில், 12 ஆம் வகுப்பு சித்தியை அடைந்துள்ளார். . மேற்படி முன்னாள் முதலமைச்சர் தனது நாலாவது ஆட்சி காலத்தில் செய்த ஊழல் குற்றத்துக்கான 10 வருட சிறைவாசம் செய்கையிலேயே இந்த சாதனையை புரிந்துள்ளார். . 2013 ஆம் ஆண்டு புது டெல்லி நீதிமன்ற நிரூபிப்புப்படி இந்த முதலமைச்சர் எந்தவித […]

இலங்கைக்கு ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பசுக்கள்

ஆஸ்திரேலியாவில் இருந்தும், நியூசிலாந்தில் இருந்தும் பெருமளவு இளம் பசுக்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் ஒன்று நடைமுறை செய்யப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பண்ணை நிறுவனமான Wellard Limited இந்த பணியில் ஈடுபட்டு உள்ளது. . அடுத்துவரும் சில வருடங்களில் சுமார் 20,000 இளம் பசுக்கள் இலங்கை வரும். அதில் ஒரு பகுதியாக 2,000 பசுக்கள் தற்போது இலங்கை வந்துள்ளன. இந்த பசுக்கள் குளிர்மையான காலநிலையை விரும்புவதால், இவை மலையகத்து இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த பசுக்களால் இலங்கை […]

UP முதலமைச்சருடன் மரணவீடு வந்த AC

இம்மாதம் முதலாம் திகதி, காஸ்மீர் பகுதியில், Perm Sagar, Paramjit Singh ஆகிய இரண்டு இந்திய படையினரை கைப்பற்றிய பாகிஸ்தான் இராணுவம் இருவரையும் கொலை செய்திருந்தது. அவர்களின் ஒருவரான Perm Sagar மரண வீட்டுக்கு மே 12 ஆம் திகதி இந்துவாதியான உத்தர பிரதேச முதலமைச்சர் Yogi Adityanath சென்று இருந்தார். முதலமைச்சரின் வருகைக்காக இறந்த இராணுவ வீரரின் வீட்டுக்கு குளிரூட்டி (AC) பூட்டி, புதிய இருக்கை (sofa), புதிய மறைவு சேலை (curtain) தூக்கி, புதிய […]

வடகொரியா மீண்டும் ஏவியது ஏவுகணை

உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை Kusong என்ற இடத்தில் இருந்து Sea of Japanனை நோக்கி ஏவியுள்ளது என்கிறது தென்கொரியா. இந்த ஏவுகணை சுமார் 700 km சென்று வீழ்ந்துள்ளது. ஜப்பானின் கணிப்பின்படி இந்த ஏவுகணை 30 நிமிடங்கள் பறந்தபின் கடலுள் வீழ்ந்துள்ளது. இந்த ஏவுகணை தொடர்பான விபரங்களை தென்கொரியா தொடர்ந்தும் சேகரிக்கிறது. . வடக்குடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விரும்பும் ஜனாதிபதி தெற்கில் ஆட்சிக்கு வந்தபின் முதல் இடம்பெற்ற வடக்கின் ஏவுகணை […]

பிரித்தானிய வைத்தியசாலைகள் மீது Internet தாக்குதல்

இன்று வெள்ளிக்கிழமை London, Derbyshire, Merseyside உட்பட பல பிரித்தானிய நகர NHS வைத்தியசாலைகள் மீது Internet தாக்குதல் (cyber attack) இடம்பெற்று உள்ளது. இதனால் அந்த வைத்தியசாலைகள் தமது கணனிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவேண்டி இருந்துள்ளது. . National Health Service (NHS) மீதான இந்த தாக்குதல் காரணமாக வைத்தியர்கள் நோயாளிகளின் விபரங்களை பெறமுடியாமையால், முறைப்படி சேவையாற்ற முடியாமல் திண்டாடினார். அவசர சேவை தேவைப்படாத (non-emergency) நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. . […]

சீனாவின் OBOR மாநாடு செல்லார் மோதி

One Belt One Road (OBOR) என்ற சீனாவின் மிக பெரிய திட்டம் தொடர்பாக நடாத்தவுள்ள மாநாட்டுக்கு இந்திய பிரதமர் மோதி செல்லார் என்று கூறப்படுகிறது. இலங்கை சார்பில் பிரதமர் ரணில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 28 நாட்டு தலைவர்கள் அல்லது முக்கிய உறுப்பினர் இந்த மாதம் 14-15 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்து கொள்வர் எனப்படுகிறது. ரஷ்ய ஜனாதிபதி பூட்டின், பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஸ் ஷரிப், மலேசியா […]

இலங்கை ஊடு ISக்கு இந்திய ஊக்க மருந்து

இந்தியாவில் இருந்து, இலங்கை ஊடாக, மத்திய கிழக்கின் IS என்ற ஆயுத குழுவுக்கு சென்ற பெருந்தொகை நோவை மறைக்கு (pain killer) மருந்துகளை இத்தாலிய போலீசார் இன்று கைப்பற்றி உள்ளனர். 1977 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் விற்பனைக்கு வந்திருந்த Tramadol என்ற இந்த மருந்து pain killer ஆக பயன்படுத்தும் ஒரு opioid pain medication ஆகும். . இத்தாலி பொலிஸாரின் கூற்றுப்படி மூன்று கொள்கலன்களில் இருந்த சுமார் $75 மில்லியன் பெறுமதியான இந்த மருந்து […]

இலங்கை அரச Bondடில் சீனா புதிய நாட்டம்

அண்மையில் இலங்கை அரசு US$ 1.5 பில்லியன் Bondஐ விநியோகித்து இருந்தது. அந்த Bondடுக்கு கடந்த வருடங்களை விட நாலு மடங்கு அதிக நாட்டம் இருந்துள்ளது. இந்த அதிகரித்த நாட்டத்துக்கு முதல் முறையாக சீன முதலீடுகளின் ஆர்வம் காரணம் என்று கூறப்படுகிறது. . International Sovereign Bond (ISB) என்ற இந்த 10-வருட Bond 6.2% வீதத்தில் வழங்கப்பட்டு இருந்தது. இந்த $1.5 பில்லியன் bondக்கு மொத்தம் $11 பில்லியன் கேள்விகள் கிடைத்திருந்ததாக கூறப்படுகிறது. . இம்முறையே […]

ஸ்ரீலங்கனை கைவிட்டது TPG

இலங்கையின் ஸ்ரீலங்கன் (SriLankan) விமானசேவை நிறுவனத்தில் முதலிடும் எண்ணத்தை கைவிட்டது அமெரிக்காவின் San Fransiscoவை தளமாக கொண்ட TPG என்ற நிறுவனம். . சுமார் US$ 2 பில்லியன் கடனில் மூழ்கியுள்ள இலங்கை விமான சேவை புதிய முதிலீடு ஒன்றை அவசரமாக தேடியது. TPG என்ற அமைப்பு (equity firm) 49% முதலீடு செய்யும் நோக்கில் இலங்கை விமானசேவையின் கணக்குகளை ஆய்வு செய்திருந்தது. ஆய்வுகளின் பின் இலங்கை விமானசேவையில் முதலீடு செய்வதை தவிர்த்து உள்ளது TPG. . […]