2012ம் ஆண்டு முதல் இலங்கை அரசு இலங்கைக்கான விசா வழங்கும் பணிகளை ETA என்ற தனது இணையம் மூலமும் செய்து வந்தது. இந்த முறைமை எந்தவித இடர்களும் இன்றி இயங்கி வந்திருந்தாலும் ரணில் அரசு விசா வழங்கும் பணிகளை கடந்த மாதம் முதல் VFS Global என்ற நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. பரிசோதனை வெள்ளோட்டம் எதுவும் செய்யாது இரகசியமாக மறைத்து வைத்து திடீரென நடைமுறை செய்த VFS இணைய கட்டமைப்பு புதன்கிழமை சரிவர இயங்கவில்லை. அதனால் புதன்கிழமை வந்த பயணி ஒருவர் on-arrival விசா […]
இன்று வெள்ளிக்கிழமை முதல் அஸ்ரேலிய பல்கலைக்கழகங்களிலும் காசா பலஸ்தீனருக்கு ஆதரவு தெரிவித்து மாணவர் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை அதிகாரிகள் அகற்றும் நோக்கத்தில் தற்போது இல்லை. University of Sydney வளாகத்தில் கடந்த கிழமை ஆரம்பிக்கப்பட்ட முகாம் இடல் தற்போது Melbourne, Canberra உட்பட பல இடங்களுக்கும் பரவி உள்ளது. Council of Australian Jewry காசா ஆதரவு முகாம்களை அகற்றுமாறு கேட்டிருந்தாலும், பல்கலைக்கழக அதிகாரிகள் அவ்வாறு செய்ய மறுத்துள்ளனர். அமெரிக்கா, கனடா போல இங்கும் சிறிதளவு யூத […]
கனடாவின் Toronto நகரில் உள்ள பழம் பெரும் University of Toronto உட்பட மொத்தம் 7 கனடிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் காசா ஆதரவு முகாம்களை ஆரம்பித்து உள்ளனர். University of Toronto மாணவர் முகாம் (encampment) இன்று வியாழன் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை U of T அதிகாரிகள் வளாகத்தில் முகாம் இடுவது சட்டத்திற்கு முரணானது என்று கூறி மாணவர் அனைவருக்கும் ஈமெயில் ஒன்று அனுப்பி இருந்தாலும் மாணவர் இன்று வியாழன் முகாமிட்டுள்ளனர். U of T மாணவர்களுக்கு […]
காசா பலஸ்தீனருக்கு ஆதரவு தெரிவித்தும், உடனடி யுத்த நிறுத்தத்தை கேட்டும் Los Angeles நகரில் உள்ள University of California (UCLA) வளாகத்தில் அமைதியாக போராட்டம் செய்த தரப்பு மீது அங்கு திடீரென நுழைந்த முகமூடி அணிந்த இஸ்ரேல் ஆதரவு குழு ஒன்று வன்முறையில் ஈடுபட்டுள்ளது. தடிகளுடன் வந்து தாக்கிய இஸ்ரேல் ஆதரவு குழு பெட்ரோல் குண்டு ஒன்றையும் வீசி உள்ளது. இந்த வன்முறையை அந்த பல்கலைக்கழகத்தை vice-chancellor Mary Osako “horrific of violence occurred at […]
City of Dreams என்ற சூதாட்ட நிலையம் கொழும்பு வருகிறது. Melco நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ள இந்த சூதாட்ட நிலையத்துடன் (casino) கூடிய உல்லாச விடுதி (hotel) 2025ம் ஆண்டின் நடுப்பகுதியில் சேவையை ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சூதாட்ட நிலைய முயற்சிக்கு சுமார் $125 மில்லியன் செலவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்த திட்டத்தின் பெறுமதி $1 பில்லியன் வரையில் இருக்கும். இந்த புதிய சூதாட்ட நிலையத்தில் 800 உல்லாச பயணிகள் அறைகள் இருக்கும் என்றும் அதில் அதி […]
சீனாவின் Sinopec (China Petroleum & Chemical Corporation) என்ற எண்ணெய் வள மற்றும் எரிபொருள் நிறுவனம் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகே மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. அதற்கான ஆய்வுகளை தற்போது Sinopec செய்கிறது. இங்கே Sinopec இரண்டு 100,000 bpd (barrels per day) அல்லது ஒரு 160,000 bpd சுத்திகரிப்பு வசதி கொண்ட முறையே இரண்டு ஆலைகளை அல்லது ஒரு ஆலையை கட்டும். 1960ம் ஆண்டுகளில் ஈரானின் உதவியுடன் இலங்கையில் […]
Janet Yellen என்ற அமெரிக்காவின் திறைசேரி செயலாளரும், Antony Blinken என்ற வெளியுறவு செயலாளரும் அண்மையில் சீனா சென்று தமக்கு சாதகமான இணக்கங்களை ஏற்படுத்த தவறிய நிலையில் ஞாயிறு திடீரென சீனா சென்ற Tesla நிறுவன அதிபர் Elon Musk தனது நோக்கங்களை நிறைவேற்றி உள்ளார் என்கிறது Reuters செய்தி நிறுவனம். Tesla சீனாவின் Baidu என்ற global positioning நிறுவனத்தின் உதவியுடன் Full Self-Driving (FSD) EV வாகனங்களை சீனாவில் நடைமுறை செய்ய அனுமதி பெற்றுள்ளது. Baidu மூலம் இந்த வாகன […]
Elon Musk என்ற அமெரிக்காவின் மின்னில் இயங்கும் EV வாகனங்களை தயாரிக்கும் Tesla நிறுவன அதிபர் திடீரென சீனாவில் தோன்றியுள்ளார். Elon Musk கடந்த கிழமை இந்தியா சென்று பிரதமர் மோதியை சந்தித்து Tesla நிறுவனத்தின் இந்திய சந்தையை அங்கு விரிவாக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் “very heavy Tesla obligations” என்ற காரணம் கூறி Musk இந்தியா செல்வதை இடைநிறுத்தி இருந்தார். ஆனால் அவர் தற்போது சீனாவில் உள்ளார். அங்கு அவர் சீன பிரதமர் […]
இஸ்ரேல் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை காசாவில் சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயன்படுத்துகிறது என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று சில அமெரிக்க State Department பிரிவுகள் தமது உள் அறிக்கைகளில் கூறியுள்ளன. வரும் மே 8ம் திகதி அமெரிக்க வெளியுறவு செயலாளர் Blinken அமெரிக்க காங்கிரசுக்கு இஸ்ரேல் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயன்படுத்துகிறதா என்பதை அறிவிக்க வேண்டும். ஆனால் மார்ச் 24ம் திகதி வரையில் குறைந்தது 7 திணைக்கள பிரிவுகள் இஸ்ரேல் சர்வதேச சட்டங்களுக்கு […]
காசா யுத்தத்தை நிறுத்த கூறி அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரம் அடைய ஆரம்பித்துள்ளன. University of Southern California (USC) மே மாதம் 10ம் திகதி நிகழவிருந்த பட்டமளிப்பு விழாவையே இடைநிறுத்தி உள்ளது. விழாவில் வன்முறைகள் இடம்பெறலாம் என்று பயம் கொண்டுள்ளதாக USC கூறியுள்ளது. இந்த பட்டமளிப்பில் சுமார் 35,000 பேர் பங்குகொள்ள இருந்தனர். தற்போது அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை சிலர் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் வியட்நாம் யுத்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிடுகின்றனர். USC சுமார் 100 மாணவரை கைது செய்துள்ளது. […]