வடகொரியா இன்று செய்வாய் மிக நீண்ட தூரம் செல்லக்கூடிய இருகட்ட ICMB ஏவுகணை (two-stage Intercontinental Ballistic Missile) ஒன்றை ஏவியதை அமெரிக்கா கடுமையாக சாடியுள்ளது. . இந்த ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய வடகொரியா “உலகின் எந்த பாகத்தையும் தாக்கக்கூடிய நம்பிக்கையும், பலமும் கொண்ட நாட்டை உருவாக்கி உள்ளோம்” என்று கூறியுள்ளது. இந்த ஏவுகணை 40 நிமிட நேரத்தில் சுமார் 2,800 km உயரம் சென்று, 933 km தொலைவில் வீழ்ந்துள்ளது. . வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு […]
இந்தியாவின் உத்தர பிரதேச ஆளும் கட்சியான BJP உறுப்பினர் ஒருவருக்கு வாகன போக்குவரத்து தண்டம் விதித்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தூர இடமொன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். . Shrestha Thakur என்பவர் உத்தர பிரதேசத்தின் Bulandshahr நகரின் உதவி SP பதவியில் உள்ள போலீஸ் அதிகாரி. அவர் ஜூன் 22 ஆம் திகதி BJP உறுப்பினரான Pramod Kumar என்பவருக்கு, உரிய பத்திரங்ககள் இல்லாமை, வாகன இலக்க தகடு இல்லாமை, தலைக்கவசம் இல்லாமை போன்ற […]
ஜெர்மனியின் Bavarian மாநிலத்தில் உள்ள Munchberg என்ற நகரில் இன்று திங்கள் காலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றுக்கு குறைந்தது 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30 பேர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர். . மொத்தம் 48 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் ஒன்றும், Truck ஒன்றும் அங்குள்ள A9 Highwayயில் மோதிய பின் விபத்துக்குள்ளான பஸ் தீ பற்றிக்கொண்டது. . உள்ளூர் நேரப்படி திங்கள் காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த […]
சவுதி தலைமையில், UAE, பஹ்ரெயின் உட்பட சில அரபு நாடுகள் ஜூன் மாதம் 13 நிபந்தனைகளை விதித்து இருந்தன. அத்துடன் 13 நிபந்தனைகளும் நாளை ஞாயிருக்கு முன் நடைமுறை செய்யப்படல் வேண்டும் என்றும் கூறப்படு இருந்தது. ஆனால் கால எல்லைக்கு மேலும் சில மணிநேரம் மட்டும் இருக்கும் இந்நிலையில் கட்டார் பணியவில்லை. . கட்டாரின் வெளிவிவகார அமைச்சர் Al-Thani இன்று சனி இத்தாலியில் கூறிய கூற்று ஒன்றில் “இந்த நிபந்தனைகள் கட்டார் அரசின் சுதந்திர உரிமையை பறிக்கும் […]
ஆப்கானித்தானில் தன்னுடன் செயல்பட இந்தியாவை இழுக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் Senate இவ்வாறு இந்தியாவை இழுக்க வேண்டியவற்றை செய்யுமாறு அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனுக்கு (Pentagon) கூறியுள்ளது. . Senate விடுத்த இந்த கட்டளை, 2018 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு வரவுசெலவு திட்டத்தில் (National Defence Authorization Act) உள்ளது. . ஆப்கானிஸ்தானை சோவித்யூனியன் ஆக்கிரமித்து இருந்த காலத்தில் அவர்களை விரட்ட ஆப்கானித்தானில் அமெரிக்கா வளர்த்து ஆயுத குழுவே முயாஹிடீன் (Mujahideen). அதுவே பின் தலபான் ஆகியது. […]
இந்திய பிரதமர் மோதி ஜூலை 4 ஆம் திகதி இஸ்ரேல் செல்லவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் செல்வது இதுவே முதல் தடவை. நீண்ட காலமாக பலஸ்தீனருக்கு ஆதரவாக இருந்து வந்த இந்தியா, தற்போது அமெரிக்காவின் தயவையும், அதை நிறைவேற்ற இஸ்ரேலின் ஆதரவையும் நாடுகிறது. . தனது இஸ்ரேல் பயணத்தின்போது மோதி இஸ்ரேல் பிரதமர் நெற்ரன்யாஹூவை (Netanyahu) சந்திப்பார். . அண்மை காலங்களில் இஸ்ரேல் இந்தியாவுக்கு பெருமளவு ஆயுதங்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. […]
அமெரிக்காவின் Google நிறுவனத்தின் மீது அதன் சட்டவிரோத செயல்கள் (antitrust) காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) $2.7 பில்லியன் தண்டம் விதித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று செவ்வாய் கிழமை அறிவிக்கப்பட்டு உள்ளது. . தற்போது இந்த $2.7 பில்லியன் தண்டமே ஒரு நிறுவனம் மீது ஐரோப்பாவில் விதிக்கப்பட்ட அதிக தண்டமாகும். இதற்கு முன் ஐரோப்பா அமெரிக்காவின் chip தயாரிப்பு நிறுவனமான Intel மீது சுமார் $1.1 பில்லியன் தண்டம் விதித்து இருந்தது. . தற்போது பொதுமக்கள் கூகிளின் […]
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்க இந்திய பிரதமர் வாஷிங்டன் வந்துள்ளார். இந்தியா மீது டிரம்ப் பெருமளவு பொருளாதார குற்றச்சாட்டுக்களை ஏவிய நிலையிலேயே மோதி அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். . சீனா மீதும் டிரம்ப் பெரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்திருந்தாலும், சீன ஜனாதிபதியின் அமெரிக்க பயணத்தின் சீனா மீதான பல குற்றச்சாட்டுக்களை டிரம்ப் கைவிட்டு இருந்தார். உதாரணமாக சீனா, தனது பொருளாதார நலன்களுக்காக, தனது நாணயத்தை கட்டுபப்டுத்தும் நாடு (currency manipulator) என்றிருந்தார் டிரம்ப். ஆனால் சீன ஜனாதிபதியின் […]
இஸ்ரேல் தென் ஆபிரிக்கா வெள்ளையரின் ஆட்சியின் கீழ் கொண்டிருந்தது போலான apartheid ஆட்சியை நோக்கி செல்கிறது என்றுள்ளார் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் Ehud Barak. ஜெர்மன் தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே Barak இவ்வாறு கூறியுள்ளார். . யூதருக்கு, அரபு நாட்டவர்க்கும் இடையே இடம்பெற்ற Six-Day யுத்தத்தின் 50 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு Tim Sebastian நடாத்திய நேர்காணலுக்கே முன்னாள் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். . Netanyahu தலைமயிலான தற்போதைய இஸ்ரேல் அரசு இஸ்ரேல்-பாலஸ்தான் […]
2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடாத்த இந்தியா ஆவல் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒலிம்பிக் அமைப்பான Indian Olympic Association (IOA) 2032 ஆண்டுக்கான போட்டிகளை இந்தியாவில் நடாத்த முயற்சிக்கும் பணிகளுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசிடம் கேட்டுள்ளது. இந்த செய்தியை IOA தலைவர் ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார். . இந்திய அரசு ஆதரவு வழங்கினும், 2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிகை நடாத்த வேறு நாடுகள் முன்வரின் அந்த நாடுகளுடன் போட்டியிட்டே இந்தியா உரிமையை பெற்ற […]