Barcelona வாகன தாக்குதலுக்கு 13 பேர் பலி

Spain நாட்டின் Barcelona என்ற நகரில் இடப்பெற்ற வாகன தாக்குதல் ஒன்றுக்கு குறைந்தது 13 பேர் பலியாகியும், மேலும் 50 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக அப்பகுதி போலீசார் கூறியுள்ளனர். மேலும் ஒரு நபர் பொலிஸாரால் சுட்டு கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. . இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் மேற்படி வாகன சாரதி அந்த வாகனத்தை (van) முன்னோக்கியும், பின்னோக்கியும் வேகமாக நகர்த்தி தாக்குதலை நடாத்தினார்  என்றுள்ளார். தாக்குதல் நடாத்தப்பட்ட இடம் […]

பிடுங்கிய கரட்டிலே வைர மோதிரம்

கனடாவின் Edmonton நகருக்கு தெற்கே உள்ள Armena என்ற சிறுநகரில் அறுவடை செய்யப்பட்ட கரட் ஒன்றில் ஒரு வைர மோதிரம் இருந்துள்ளது. விசாரணைகளின் பின் இந்த மோதிரம் Mary Grams என்பவருக்கு சொந்தமானது என்றும் 2004 ஆம் ஆண்டில் தொலைந்துள்ளது என்றும் அறியப்பட்டு உள்ளது. . Mary இந்த வைரத்தை 1951 ஆம் ஆண்டு முதல் கொண்டிருந்துள்ளார். அவரும் அவரது கணவரும் Armena என்ற இடத்தில் முன்னர் கமம் செய்துள்ளனர். 2004 ஆம் ஆண்டில் பற்றைகளை பிடுங்கி […]

மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு?

இலங்கையின் தெற்கே மகிந்த அரசால் நிமாணிக்கப்பட்டு பெரும் பயன்பாடு இல்லாமல் இருக்கும் மத்தள விமான நிலையத்தை (Mattala Rajapaksa International Airport) இந்தியா கொள்வனவு செய்ய முனைகிறது. இந்திய நிறுவனம் ஒன்று மத்தள விமான நிலையத்தின் 70% உரிமையை வரும் 40 வருடங்களுக்கு கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. இந்த உரிமைக்கு இந்திய நிறுவனம் $205 மில்லியன் வழங்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. . இந்த திட்டத்தை இலங்கையின் Civil Aviation அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா […]

தாய்லாந்தை ஊடறுத்து கிரா கால்வாய்?

தாய்லாந்தை ஊடறுத்து கிரா (Kra Canal) என்ற கால்வாய் சீனாவின் தலைமையில் அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு கால்வாய் அமைக்கப்பட்டால் அது சுயஸ் (Suez) கால்வாய், பனாமா (Panama) கால்வாய் போன்று முக்கிய ஒரு கப்பல் போக்குவரத்து வழியாக அமையும். . தாய்லாந்துக்கு குறுக்காக 135 km நீளம் கொண்ட இந்த கால்வாயை அமைக்க சுமார் $28 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது. அந்தமான் கடலையும், தாய்லாந்து குடாவையும் இணைக்கும் இந்த கால்வாய் இலகுவாக தென்சீன […]

இந்திய வைத்தியசாலையில் இருநாளில் 30 சிறுவர் பலி

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள Gorakhpur என்ற இடத்து வைத்தியசாலை ஒன்றில் 30 சிறுவர்கள் சுமார் 48 மணித்தியாலத்துள் பலியாகி உள்ளனர். கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களில் இந்த 30 சிறுவர்களும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. . பலியான சிறுவர்கள் நுளம்பினால் பரவும் Japanese encephalitis என்ற நோயினால் பாதிக்கப்பட்டு மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையிலேயே அவர்கள் பலியாகி உள்ளனர். இந்த சிறுவர்கள் தமது […]

சவுதியுள் ஒரு யுத்தமும், உலகின் பாராமுகமும்

உலகில் நடக்கும் எல்லா யுத்தங்களையும் அலசி ஆராயும் உலகமும், ஐ.நா.வும் சவுதி அரேபியாவில் நடக்கும் யுத்தம் ஒன்றை பாராது உள்ளன. சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள Awamiya நகரை அண்டிய பகுதியில் இடம்பெறும் யுத்தமே இவ்வாறு உலகத்தால் கண்டுகொள்ளபடாது உள்ளது. . சுனி இஸ்லாமியரை பெரும்பான்மையாக கொண்ட சவுதியின் கிழக்கே உள்ள Awamiya என்ற நகர் பகுதி சியா இஸ்லாமியரை பெரும்பான்மையாக கொண்டது. சுனி நாடான சவுதிக்கும், சியா நாடான ஈரானுக்கும் இடையில் இடம்பெறும் மோதலின் விளைவே […]

அமெரிக்காவில் பூரண சூரிய கிரகணம்

அமெரிக்காவில் வரும் 21 ஆம் திகதி திங்கள் கிழமை பூரண சூரிய கிரகணம் தோன்றவுள்ளது. இந்த பூரண கிரகணம் அமெரிக்காவின் மேற்கு மாநிலமான Oregon வழி சென்று கிழக்கு மாநிலமான South Carolina வழியே போகும். 1979 ஆம் ஆண்டின் பின் அமெரிக்காவுக்கு கிடைக்கும் பூரண சூரிய கிரகணம் இதுவாகும். சில இடங்களில் பூரண கிரகணம் சுமார் 1 நிமிடம் 40 செக்கன்களுக்கு நிலைக்கும். . பூரண கிரகணம் உள்ளபோது மட்டும் கண்ணால் அதை பார்ப்பது முடியும் […]

மொத்தம் 80 நாட்டவர்க்கு கட்டார் விசா தேவையில்லை

மொத்தம் 80 நாட்டவர்கள் கட்டாருக்கு இன்று முதல் விசா இன்றி பயணிக்க முடியும் என்று கட்டார் இன்று புதன் அறிவித்து உள்ளது. சவுதி தலைமையிலான நாடுகள் கட்டார் மீது விதித்துள்ள தடையை முறியடிக்கும் நோக்கமே கட்டாரின் இந்த முயற்சி என்று கருதப்படுகிறது. அத்துடன் 2022  ஆம் ஆண்டில் கட்டாரில் இடம்பெறவுள்ள FIFA World Cup உதைபந்தாட்ட போட்டிக்கு பார்வையாளர் வருகை தருவதையும் விசா இன்மை ஊக்கப்படுத்தும். . மேற்குறிப்பிடப்பட்ட 80 நாடுகளில், 33 நாட்டவர் ஒரு தடவையில் […]

சிரியா விசாரணைகளை கைவிட்டார் Del Ponte

2011 ஆம் ஆண்டில் சிரியாவில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை விசாரணை செய்ய ஐ.நா. Del Ponte தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்து இருந்தது. உண்மையில் அசாத் அரசை கவிழ்க்க அங்கு கிளர்ச்சியை உருவாக்கிய மேற்கு நாடுகள் அசாத் அரசு மீது குற்றம் சுமத்தும் நோக்கிலேயே இந்த விசாரணை ஆரம்பித்திருந்தன. ஆனால் பின்னர் அமெரிக்காவும், ரஷ்யாவும் நேரடியாக களம் இறங்க நிர்பந்திக்கப்பட்டன. அங்கு நிலைமையும் மோசமானது. . படிப்படியா இந்த யுத்தமும் அந்நிய அரசுகளால் அவர்களின் […]

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு மீண்டும் அகதிகள்

அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு அகதிகள் மீண்டும் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இப்படையெடுப்பில் இம்முறை முன்னணியில் உள்ளவர்கள் ஹெயிற்ரி (Haiti) நாட்டவரே. இவர்கள் பிரெஞ்ச் மொழியை இரண்டாம் மொழியாக கொண்டவர்கள் என்பதால் மொன்றியால் நகர் நேக்கியே இவர்கள் நகர்கின்றனர். . அதிக அளவில் அகதிகள் வருவதால், அவர்களை தங்கவைக்க முற்கால ஒலிம்பிக் விளையாட்டு அரங்கான, 56,000 ஆசனங்களை கொண்ட, Montreal Olympic Stadium அகதிகள் தங்குமிடமாக மாற்றப்பட்டு உள்ளது. . இந்த அகதிகளில் பல நாட்டவர் இருந்தாலும் Haiti, Burundi, […]