மொத்தம் 80 நாட்டவர்கள் கட்டாருக்கு இன்று முதல் விசா இன்றி பயணிக்க முடியும் என்று கட்டார் இன்று புதன் அறிவித்து உள்ளது. சவுதி தலைமையிலான நாடுகள் கட்டார் மீது விதித்துள்ள தடையை முறியடிக்கும் நோக்கமே கட்டாரின் இந்த முயற்சி என்று கருதப்படுகிறது. அத்துடன் 2022 ஆம் ஆண்டில் கட்டாரில் இடம்பெறவுள்ள FIFA World Cup உதைபந்தாட்ட போட்டிக்கு பார்வையாளர் வருகை தருவதையும் விசா இன்மை ஊக்கப்படுத்தும். . மேற்குறிப்பிடப்பட்ட 80 நாடுகளில், 33 நாட்டவர் ஒரு தடவையில் […]
2011 ஆம் ஆண்டில் சிரியாவில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை விசாரணை செய்ய ஐ.நா. Del Ponte தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்து இருந்தது. உண்மையில் அசாத் அரசை கவிழ்க்க அங்கு கிளர்ச்சியை உருவாக்கிய மேற்கு நாடுகள் அசாத் அரசு மீது குற்றம் சுமத்தும் நோக்கிலேயே இந்த விசாரணை ஆரம்பித்திருந்தன. ஆனால் பின்னர் அமெரிக்காவும், ரஷ்யாவும் நேரடியாக களம் இறங்க நிர்பந்திக்கப்பட்டன. அங்கு நிலைமையும் மோசமானது. . படிப்படியா இந்த யுத்தமும் அந்நிய அரசுகளால் அவர்களின் […]
அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு அகதிகள் மீண்டும் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இப்படையெடுப்பில் இம்முறை முன்னணியில் உள்ளவர்கள் ஹெயிற்ரி (Haiti) நாட்டவரே. இவர்கள் பிரெஞ்ச் மொழியை இரண்டாம் மொழியாக கொண்டவர்கள் என்பதால் மொன்றியால் நகர் நேக்கியே இவர்கள் நகர்கின்றனர். . அதிக அளவில் அகதிகள் வருவதால், அவர்களை தங்கவைக்க முற்கால ஒலிம்பிக் விளையாட்டு அரங்கான, 56,000 ஆசனங்களை கொண்ட, Montreal Olympic Stadium அகதிகள் தங்குமிடமாக மாற்றப்பட்டு உள்ளது. . இந்த அகதிகளில் பல நாட்டவர் இருந்தாலும் Haiti, Burundi, […]
இலங்கை அரசாங்கம் அண்மையில் கடலடி மீன்பிடி முறைமையை (bottom trawling) தடைசெய்யும் சட்டம் ஒன்றை நடைமுறை செய்திருந்தது. அந்த சட்டத்தின் அடிப்படையில் பல தமிழ்நாட்டு மீனவர்களை அவர்களின் வள்ளங்களுடன் இலங்கை கைது செய்திருந்தது. இவர்களில் பலர் பின்னர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். . அண்மையில் இந்திய பாராளுமன்றில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா (Sushma Swaraj) கடலடி மீன்பிடி தடைக்கு தமது மறைமுக ஆதரவை கூறியுள்ளார். அவர் தனது உரையில் […]
இந்திய Gupta குடும்பம் ஒன்றும், ஜெர்மனியின் SAP என்ற பிரபல software நிறுவனமும் தென் ஆபிரிக்காவில் ஊழல் செய்துள்ளதாக AmaBhungane என்ற புலனாய்வு பத்திரிகையாளர் குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஊழல் தென் ஆபிரிக்க ஜனாதிபதியின் மகன் Duduzane Zuma மூலமாக இடம்பெற்று உள்ளதாம். . Transnet என்ற தென் ஆபிரிக்க அரச நிறுவனத்து திட்டம் ஒன்றை அமைக்கும் உரிமையை பெற SAP $8.21 மில்லியன் இலஞ்சம் வழங்கியுள்ளது என்கிறது இந்த குற்றச்சாட்டு. அந்த இலஞ்சத்தை […]
சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு அமைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் நகரம் பிரான்சின் Paris நகரம் என்றும், 2028 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் இடம்பெறவுள்ள நகரம் அமெரிக்காவின் Los Angeles என்றும் இன்று அறிவித்து உள்ளது. . முன்னர் செல்வந்த நாடுகள் ஒலிம்பிக் போட்டியை தமது நகரங்களில் நடாத்த போட்டி போடுவது வழமை. ஆனால் தற்காலங்களில் பெருமளவு நாடுகள் ஒலிம்பிக் போட்டியை நடாத்த முன்வருவது இல்லை. ஒலிம்பிக் போட்டியை நடத்துவதால் கிடைக்கும் சாதகங்கள் சிறிதாகவும், […]
கடந்த சனிக்கிழமை இரவு இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படை (coast guards) 1,500 kg எடை கொண்ட போதையை கப்பல் ஒன்றில் இருந்து கைப்பற்றி உள்ளது. இந்த போதையின் சந்தை பெறுமதி சுமார் $550 மில்லியன் ஆக இருக்கும் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவினால் கைப்பற்றப்பட்ட அதி கூடிய போதை இதுவே. . இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை தொடர்ந்து இக்கப்பல் இடைமறித்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. MV Henry என்ற […]
அமெரிக்காவின் Senate அண்மையில் ரஷ்யா மீது நடைமுறைப்படுத்திய மேலதிக தடைகளுக்கு பதிலடி வழங்கும் நோக்கில் பூட்டின் இன்று ஞாயிறு 755 அமெரிக்க இராசதந்திரிகளை நாட்டைவிட்டு வெளியேற கேட்டுள்ளார். இது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவிவரும் முறுகல் நிலையை மேலும் உக்கிரம் ஆக்கியுள்ளது. . ரஷ்யாவின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய உரையில், பூட்டின் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நலமான உறவு எதையும் தான் தற்போதைக்கு எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். நிலைமை நலமாக அமையும் என்று தாம் நீண்ட […]
இன்று இலங்கை அரசும் சீன அரசும் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளன. இலங்கை அரசு சார்பில் Sri Lanka Ports Authorityயும் சீனா சார்பில் China Merchants Ports Holdingsம் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளன. . நீண்டகால இழுபறிக்கு பின் முடிவுக்கு வந்த இந்த புதிய ஒப்பந்தப்படி சீனா வரும் 99 வருடங்களுக்கு இத்துறைமுகத்தின் 70% உரிமையை கொண்டிருக்கும். இலங்கை மிகுதி 30% உரிமையை கொண்டிருக்கும். அத்துடன் சீனா தலைமையில் இடம்பெறவுள்ள வர்த்தக நடவடிக்கைகளுக்கு […]
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் (Nawaz Sharif) இன்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் உயர்நீதிமன்றால் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஏப்ரல் மாதம் வெளிவந்திருந்த Panama Paper வெளியிட்ட தகவல்களின்படி பிரதமரும், அவரின் 3 பிள்ளைகளும் நீதிமன்றால் குற்றவாளிகளாக காணப்பட்டு உள்ளனர். ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவில், ஐந்துபேரும் பிரதமரை குற்றவாளி என்றுள்ளனர். . இந்த தீர்ப்பின் பின்னர் பிரதமர் தனது பதவியை.துறந்து உள்ளார். பதவி துறந்த பிரதமருக்கு பதிலாக வேறு ஒருவரை அவரின் கட்சி நியமிக்கும். புதிதாக […]