பூமிக்கு அருகால் சென்றது 4.4 km விட்ட விண்கல்

இன்று பூமிக்கு அருகால் சென்றது Florence என்ற 4.4 km விட்டம் கொண்ட விண்கல் (asteroid). இந்த கல் பூமியில் இருந்து சுமார் 7 மில்லியன் km தூரத்தில் சென்றுள்ளது. இது பூமிக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் 18 மடங்காகும். . வழமையாக விண்கற்கள் அவ்வப்போது பூமிக்கு அருகால் சென்றாலும் பொதுவாக அவை இவ்வளவு பெரிய கல்லாக இருப்பதில்லை. அவை ஒரு பஸ் அளவு அல்லது ஒரு வீடு அளவு கல்லாகவே இருக்கும். NASA ஆவணப்படுத்திய கற்களுள் […]

முஷ்ராபை கைது செய்ய நீதிமன்றம் கட்டளை

முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷ்ராபை (Pervez Musharraf) கைது செய்யும்படி பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று வியாழன் கட்டளை விடுத்துள்ளது. ஆனால் கடந்த வருடம் முதல் முஷ்ராப் டுபாயில் வசிக்கிறார். முஷ்ராபின் சொத்துக்களையும் முடக்கவும் நீதிமன்றம் கட்டளை விடுத்துள்ளது. . 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற பெனாசிர் பூட்டோ (Benazir Bhutto) படுகொலை வழக்கில் முஷ்ராப் குற்றம் சாட்டப்பட்டு உள்ளார். அதை முஷ்ராப் மறுத்துள்ளார். . பாகிஸ்தானில் ஒரு முன்னாள் இராணுவ உயர் அதிகாரியை கைது செய்ய கட்டளை […]

Google தண்டிக்கும் தனது Think Tank

உலகத்திலேயே மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Google, அது நன்கொடை வழங்கி வளர்க்கும் பொது நலனை நோக்காக கொண்ட think tank ஒன்றை தண்டித்து உள்ளது. பொதுநலனில் அக்கறை கொண்டவர்கள் என்று தம்மை காட்டிக்கொள்ளும் Google நிறுவன உயர்மட்டங்கள் இவ்வாறு நடந்து கொண்டமை அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. . New America Foundation என்ற think tank ஏறக்குறைய முழுமையாக Google வழங்கும் நன்கொடையில் இயங்கும் பொதுநல அமைப்பு. Google நிறுவனத்தின் தாய் நிறுவன executive […]

ஜெனரல் ஜெயசூரியா மீது War Crime வழக்கு தாக்குதல்

தற்போது Brazil, Colombia, Peru, Chile, Argentina, மற்றும் Suriname ஆகிய நாடுகளின் இலங்கை தூதுவராக பதவி வகிக்கும் முன்னாள் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா (Jagath Jayasuriya) மீது war crime வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தூதுவர் என்ற முறையில் இந்த நாடுகளில் ஜெயசூரியாவுக்கு diplomatic immunity உண்டு. . இந்த வழக்கை முன்னின்று செயல்படுத்தும் வழக்கறிஞர் Carlos Castresana Fernandez மேற்படி வழக்கு திங்கள்கிழமை பிரேசிலும், கொலம்பியாவிலும் தாக்கல் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். வரும் […]

வடகொரியா ஏவியது கணை, ஜப்பானுக்கு மேலாக

இன்று செய்வாய் கிழமை, உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:58 மணியளவில் வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவி உள்ளது. இம்முறை அந்த ஏவுகணை ஜப்பான் மேலாக சென்று பசுபிக் கடலுள் வீழ்ந்துள்ளது. இதனால் கோபம் கொண்டுள்ளது ஜப்பான். . இன்று ஏவப்பட்ட ICBM வகை கணை சுமார் 550 km உயரம் வரை உயர்ந்து, 2,700 km தூரம் சென்று வீழ்ந்துள்ளது. கடலுள் விழமுன் இந்த கணை 3 துண்டங்களாக பிரிந்து வீழ்ந்துள்ளது. இது ஜப்பானின் Hokkaido […]

பிரான்ஸ் ஜனாதிபதியின் அலங்காரத்துக்கு மாதம் $10,000

அண்மையில் பெரும் ஆதரவுடன் ஜனாதிபதியான தெரிவு செய்யப்பட்ட 39 வயதான பிரான்ஸின் ஜனாதிபதி Emmanuel Macron தனது முதல் மூன்று மாதகால அலங்காரத்துக்கு $31,000 (26,000 euro) வரையான தொகையை செலவு செய்துள்ளதாக Le Point வெளியீடு கூறியுள்ளது. . ஜனாதிபதியின் அலங்காரத்துக்காக அலங்காரம் செய்பவரான Natacha என்பவருக்கு 26,000 யூரோக்கள் (euro) வழங்கப்பட்டுள்ளது என்கிறது இந்த செய்தி. . ஜனாதிபதி குடியிருக்கும் Elysee Palace இந்த தரவுகளை உறுதியம் செய்துள்ளது. . இவருக்கு முன் பதவியில் […]

அமெரிக்காவை தாக்கும் சூறாவளி Harvey

இன்று வெள்ளி இரவு 11:00 மணியளவில் அமெரிக்காவின் Texas மாநிலத்தின் Gulf of Mexico கரையோரத்தை தாக்க ஆரம்பித்துள்ளது சூறாவளி ஹார்வி (Harvey). கரையை தாக்க ஆரம்பித்தபோது இந்த சூறாவளியின் வேகம் சுமார் 209 km/h ஆக இருந்துள்ளது. அடுத்துவரும் நாட்களில் இந்த சூறாவளி பலத்த பாதிப்பை இங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. . வெள்ளி காலையில் வகை-1 (Category 1) ஆக மெக்சிக்கோ குடாவின் நடுப்பகுதியில் இருந்த சூறாவளி, வெள்ளி இரவு 11:00 மணியளவில் வகை-4 […]

இந்தியாவில் குருவுக்கு 10 வருடங்கள், 32 பேர் பலி

Guru Gurmeet Ram Rahim Singh என்ற குருவை இந்தியாவின் ஹரியானா மாநில Panchkula நகர நீதிமன்றம் இன்று குற்றவாளி என்று .தீர்ப்பு கூறியுள்ளது. அந்த தீர்ப்பின்படி இவருக்கு 10 வருடங்கள் சிறை கிடைக்கலாம். இதை அறிந்த அவரின் பக்தர்கள் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வன்முறைக்கு 32 பேர் பலியாகியும் உள்ளனர். மேலும் பலர் காயமடைந்து உள்ளதுடன், பல வாகனங்கள் தீ மூட்டப்பட்டும் உள்ளன. . 2002 ஆம் ஆண்டில் இரண்டு பெண்கள் இந்த குரு […]

கட்டார் ஈரானுடன் மீண்டும் முழுமையான உறவு

கட்டார் (Qatar) வெளியுறவு அமைச்சர் தாம் ஈரானுடன் மீண்டும் முழுமையான உறவை வைத்துக்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார். கட்டாரின் இந்த தீர்மானம் சவுதி தலைமையிலான சுனி இஸ்லாம் அணிக்கு மேலும் ஒரு அடியாகவுள்ளது. . 2016 ஆம் ஆண்டு கட்டார், சவுதியின் வேண்டுகளுக்கு இணங்க, ஈரானில் இருந்து கட்டாருக்கான தூதுவரை திருப்பி அழைத்திருந்தது. ஈரானுடனான தொடர்புகளையும் குறைத்து இருந்தது. ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. . சுமார் 3 மாதங்களுக்கு முன் சவுதி தலைமையில் எகிப்து, UAE, […]

அமெரிக்காவின் 7th Fleet அதிகாரி பதவி நீக்கம்

அமெரிக்காவின் 7th Fleet இராணுவ அதிகாரி (commander) Vice Admiral Joseph Aucoin அவரது பதவியில் இருந்து இன்று புதன்கிழமை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவரின் இடத்துக்கு Vice Admiral Phillip Sawyer நியமனம் செய்யப்பட்டு உள்ளார். . அமெரிக்காவின் 7th Fleet ஆசியாவை மையமாக கொண்டது. இந்த இராணுவ அணியில் 60 முதல் 70 வரையான யுத்த கப்பல்கள் இருக்கும். அதில் சுமார் 18 ஆசியாவிலேயே நிலைகொண்டிருக்கும். அண்மையில் விபத்துகளுக்கு உள்ளான USS Fitzgerald என்ற […]