கடந்த ஞாயிறு இரவு Stephen Paddock என்றவர் நடாத்திய படுகொலைக்கு இதுவரை 59 பேர் பலியாகியும், 500 பேருக்கும் அதிகமானோர் காயப்பட்டும் உள்ளனர். இந்த படுகொலைகளை செய்த இவர் தனது hotel அறையுள் 23 இராணுவ தரத்து ஆயுதங்களை வைத்திருந்துள்ளார். இவரின் வீட்டில் இருந்த ஆயுதங்களுடன் மொத்தம் 47 ஆயுதங்கள் இவரிடம் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. . அமெரிக்காவில் தனி மனிதர் ஒருவரால் செய்யப்பட்ட தாக்குதல்களில் இதுவே மிக பெரியது. . வழமைபோலவே அமெரிக்கா ஊடகங்களும் இந்த […]
அமெரிக்காவின் Nevada மாநிலத்தில் உள்ள Las Vegas என்ற களியாட்ட நகரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு 50 பேருக்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டும், 400 பேருக்கு மேலானோர் காயமடைந்தும் உள்ளனர். இந்த சம்பவம் Mandalay Bay Resort and Casino என்ற நிலையத்துக்கு முன்னாலேயே இடம்பெற்று உள்ளது. . ஞாயிறு இரவு 10:08 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு ஆரம்பமாகியது என்று கூறப்படுகிறது. Stephen Paddock என்ற 64 வயதுடையவரே இந்த துப்பாக்கி சூட்டை செய்துள்ளார். போலீசார் […]
ஸ்பெயின் நாட்டின் (Spain) ஒரு பகுதியாக உள்ள கற்ரலுன (Catalonia) என்ற பகுதி. அப்பகுதி அண்மைக்காலமாக ஸ்பெயினில் இருந்து விலகி, தனி நாடாக செயல்பட முனைகிறது. இதை வன்மையாக எதிர்க்கிறது ஸ்பெயின். இன்று அங்கு நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்று பெரும் வன்முறைகளில் முடிந்துள்ளது. . இன்று இடம்பெற்ற அங்கீகரிக்கப்படாத வாக்கெடுப்பை தடுத்து நிறுத்துமாறு ஸ்பெயின் அரசு பொலிஸாருக்கு கட்டளை விடுத்திருந்தது. அவ்வாறு போலீசார் வாக்கு சாவடிகளை மூட முனைந்தபோதும், வாக்கு பெட்டிகளை கைப்பற்ற முனைந்தபோதும் […]
அமெரிக்க அரசு வடகொரிய அரசுடன் நேரடி தொடர்புகளை கொண்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் Rex Tillerson இன்று கூறியுள்ளார். தற்போது சீனாவின் தலைநகர் பெய்ஜிங் சென்றுள்ள Tillerson இந்த விடயத்தை தெரிவித்து உள்ளார். டிரம்ப் அரசு வடகொரியாவுடன் தொடர்புகளை கொண்டிருப்பதை ஏற்றுக்கொண்டது இதுவே முதல் தடவை. . பத்திரிகையாளர் தொடுத்த கேள்விகளுக்கு பதிலளித்த Tillerson, “we have a couple, three channels open to Pyongyang” என்றுள்ளார். இந்த தொடர்புகள் சீனா ஊடானதா என்று கேட்டபோது, […]
வெள்ளிக்கிழமை காலை மும்பாய் புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு 22 பேர் பலியாகியும், மேலும் 30 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். இந்த நெரிசல் இரண்டு நிலையங்களுக்கு இடையில் உள்ள நடை பாலம் ஒன்றில் இடம்பெற்று உள்ளது. . பிரபாதேவி நிலையத்துக்கும் (Prabhadevi station) பரோல் (Parel station) நிலையத்துக்கும் இடையில் உள்ள ஒருங்கிய பாலத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. . நெரிசலுக்கான காரணம் இதுவரை திடமாக அறியப்படவில்லை. அனால் ஒரு சீமெந்து […]
சீனாவில் இயங்கிவரும் வடகொரியாவின் வர்த்தகங்களை மூடுமாறு கூறியுள்ளது சீனா. இந்த கட்டளையின்படி சீனாவில் அமைந்துள்ள அனைத்து வடகொரிய வர்த்தகங்களும் 120 நாட்களுக்குள் மூடப்படல் அவசியம். இந்த கட்டளை ஐ.நா. கட்டளைக்கு உடன்படும் வகையில் அமைந்துள்ளது. . வடகொரியா 90% ஏற்றுமதி வருமானத்தை சீனாவிடம் இருந்தே பெறுகிறது. . டிரம்ப் அரசு வடகொரியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை கொண்டாடினாலும், சீனாவின் உள்நோக்கம் என்னவென்பது புதிராகவே உள்ளது. . ஆதியில் இருந்தே சீனா பேச்சுவார்த்தைகளுக்கு உதவி செய்யலாம் என்றும், ஆனால் […]
ஆஸ்ரேலியா நோக்கி செல்கையில் கைதுசெய்யப்பட்டு Papua New Guineaவின் Manus தீவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த அகதிகளில் 25 பேர் அமெரிக்கா செல்கிறார்கள். இவர்களுள் இலங்கை தமிழர், Rohingya இஸ்லாமியர், ஆப்கானிஸ்தானியர், பாகிஸ்த்தானியர், பங்களாதேசியர், ஈரானியர், சோமாலியர் ஆகியோர் அடங்குவர். செவ்வாய் பயணிக்கும் 25 பேரும் ஆண் அகதிகள். மேலும் 27 அகதிகள் Nauruவில் இருந்து புதன்கிழமை பயணிக்கிறார்கள். . முன்னாள் ஜனாதிபதி ஒபாமா 1,250 அகதிகளை ஆஸ்ரேலியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள இணங்கி இருந்தார். பதிலாக ஆஸ்ரேலியா […]
World Economic Forum இன்று தனது 2017-2018 காலத்துக்கான Global Competitiveness Index அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த கணிப்புக்கு மொத்தம் 137 நாடுகள் எடுத்து கொள்ளப்பட்டன. . சுவிற்சலாந்து 5.86 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தில் உள்ளது. இந்த நாடே 2016-2017 காலத்திலும் 5.81 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருந்தது. . அமெரிக்கா 5.85 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் 5.71 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளன. 2016-2017 காலத்தில் அமெரிக்கா […]
அமெரிக்காவின் மேரிலாண்ட் (Maryland) என்ற மாநிலத்து Governor தேர்தல் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் இலங்கை வம்சம் வந்த கிரிஷாந்தி விக்கினராசா (Krishanti Vignarajah) என்ற தமிழ் பெண்ணும் போட்டியிடுகிறார். . ஒபாமாவின் மனைவி Michelle Obama அமெரிக்காவின் first lady ஆக இருந்தபோது கிரிஷாந்தி policy director ஆக சுமார் 2 வருடங்கள் கடமை புரிந்தவர். இவர் அமெரிக்காவின் State Department பதவியையும் கொண்டிருந்தவர். அதற்கு முன்னர் சிக்காகோ சட்ட நிறுவனம் ஒன்றிலும் […]
ஜேர்மனியில் இன்று இடம்பெறும் தேர்தலில் அந்நாட்டு அதிபர் (chancellor of Germany) அங்கெல மேர்க்கெல் (Angela Merkel) மீண்டும் அந்நாட்டு அதிபராக தெரிவு செய்யப்படவுள்ளார். முந்திவரும் தரவுகளின்படி அங்கெலவின் கட்சியான CDU (Christian Democratic Union) சுமார் 33% வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது. ஆனாலும் CDU கட்சிக்கு இம்முறை முன்னரிலும் 8.5% குறைவான ஆதரவே கிடைக்கிறது. . இரண்டாவது இடத்தில் உள்ள கட்சியான SPD (Social Democrtic Party) சுமார் 20.6% வாக்குகளை பெறுகிறது. ஐரோப்பிய […]