மின்னில் இயங்கும் (EV) சீன வாகனங்களின் தரத்தால் மிரண்ட அமெரிக்காவின் பைடென் அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் EV வாகனங்களுக்கு இன்று செவ்வாய் முதல் 102.5% இறக்குமதி வரியை (tariff) நடைமுறைசெய்கிறது. EV வாகனங்களுக்கு மட்டுமன்றி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் solar cells (50%), computer chip (50%), syringes, இரும்பு (25%), அலுமினியம் (25%) ஆகியவற்றுக்கும் பைடென் அரசு இறக்குமதி வரியை அதிகரித்து உள்ளது. அதேவேளை ஐரோப்பாவின் Stellantis நிறுவனமும் சீனாவின் Leapmotor நிறுவனமும் கூட்டக செப்டம்பர் மாதம் […]
It is hilarious. Even by third-world political standards, it is total rubbish by the ruling Canadian Liberal Party. On May 10th of 2024, the UN General Assembly convened to vote on resolution (Item 5 – A/ES-10/L.30/Rev.1) to give Palestine an Observer State in the UN assembly. It is a very limited right. Out of the 193-member […]
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக கடமையாற்ற Elizabeth Horst என்பவரை தெரிவு செய்துள்ளார் அமெரிக்க சனாதிபதி பைடென். அமெரிக்க சட்டப்படி சனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட தூதுவர் ஒவொருவரும் அமெரிக்க காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்படல் அவசியம். இவரின் தூதுவர் பதிவி காங்கிரசால் உறுதி செய்யப்பட்டால் தற்போதைய தூதுவர் Julie Chung அமெரிக்கா திரும்ப Horst இலங்கைக்கான புதிய தூதுவர் ஆவார். Horst இதற்கு முன்னர் ஜெர்மனி, யூக்கிறேன் ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றி, பின் Estonia என்ற நாட்டில் இடைக்கால தூதராக (ஜூலை 2018 – […]
இஸ்ரேல் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முரணான முறையில் பயன்படுத்தி இருக்கலாம் என்று இன்று வெள்ளிக்கிழமை பைடென் அரசு கூறியுள்ளது. ஆனாலும் அவற்றை உறுதி செய்ய தம்மிடம் திடமான ஆதாரங்கள் இல்லை என்றும் பைடென் அரசு கூறியுள்ளது. இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ironclad உறவு உள்ளது என்று எப்போதும் கூறும் அமெரிக்கா முடிந்த அளவில் இஸ்ரேலின் குற்றங்களை நீண்ட காலம் மறைத்து வந்துள்ளது. இம்முறை காசாவில் இஸ்ரேல் செய்யும் குற்றங்களை மறைக்க முடியாது முழிக்கிறது […]
Malmo என்ற சுவீடன் நகரில் இடம்பெறும் இந்த ஆண்டுக்கான Eurovision பாட்டு போட்டியில் இஸ்ரேல் பாடகர் பங்கு கொள்வதை எதிர்த்து பல்லாயிரம் பேர்களை கொண்ட காசா ஆதரவு ஊர்வலம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அந்த ஊர்வலத்தில் சூழலுக்காக போராடும் Greta Thunberg உம் கலந்து கொண்டுள்ளார். யூக்கிறேனுள் நுழைந்ததால் ரஷ்யாவை Eurovision போட்டியில் இருந்து விலக்கிய Eurovision அமைப்பாளர் இஸ்ரேலின் காசா கொடுமைகளையும் மீறி இஸ்ரேலை Eurovision போட்டியில் பங்குகொள்ள வைப்பதை சாடியுள்ளார் Greta. Greta இந்த ஊர்வலத்தில் பங்கு கொள்வதற்கு […]
சிலவகை குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்க மறுக்கிறார் அமெரிக்கா சனாதிபதி பைடென். அந்த குண்டுகளை இஸ்ரேல் சர்வதேச மற்றும் அமெரிக்க சட்டங்களுக்கு முரணாக பயன்படுத்துகிறது என்ற அச்சமே காரணம். அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களை நட்பு நாடுகள் அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமையவே பயன்படுத்த வேண்டும். தவறின் அமெரிக்கா தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என்கிறது அமெரிக்க சட்டம். இந்த கிழமை பைடென் அமெரிக்க காங்கிரசுக்கும் இஸ்ரேல் எவ்வாறு அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் பயன்படுத்துகிறது என்பதை சட்டப்படி தெரிவிக்க […]
இலங்கைக்கு விசா வழங்கும் அந்நிய நிறுவனமான VFS Global விசாவின் முதலாம் நுழைவு காலத்தையும் குறைத்து உள்ளதாக விசா பெற்ற பயணிகள் கூறுகின்றனர். இலங்கையின் பழைய ETA விசா வழங்கும் இணையம் முதல் நுழைவுக்கு 6 மாதங்கள் முன்னர் விசாவை பெற வழி செய்தது. அவ்வாறு செய்வது பயணிகள் தமது பயணத்தை திட்டமிட போதிய காலத்தை வழங்கியது. உதாரணமாக ஜூன் மாதம் தனது முதலாம் நுழைவை செய்யவுள்ள பயணி ஜனவரி மாதத்திலேயே ETA மூலம் விசாவை பெற முடியும். ஆனால் VFS Global அந்த காலத்தை […]
இலங்கைக்கான விசா வழங்கும் உரிமையை பெற VFS Global நிறுவனம் $10 மில்லியன் பணத்தை ரணிலின் வரும் தேர்தல் பணிகளுக்கு வழங்கியது என்ற குற்றச்சாட்டை மறுக்கிறார் Public Security அமைச்சர் Tiran Alles. தான் இவ்வாறு செய்திகள் பரவுவதை அறிந்து உள்ளதாகவும் ஆனால் அது பொய் என்றும் கூறுகிறார் Tiran. தான் 5 சதமும் பெறவில்லை என்றும் அது மக்களுக்கு தெரியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். முன்னர் SAARC நாடுகளுக்கு $25 மட்டுமே உல்லாச பயணனிகளுக்கான விசா […]
இந்திய RAW (Research and Analysis Wing) இந்திய வன்முறை குழுக்களை பயன்படுத்தி படுகொலைகள் செய்கிறது என்று கூறுகிறது அமெரிக்காவின் New York Times செய்தி நிறுவனம். கனடாவில் வைத்து Hardeep Singh Nijjar என்ற சீக்கியரையும் அவ்வாறே RAW படுகொலை செய்திருக்கலாம் என்றும் கூறுகிறது New York Times. வெள்ளிக்கிழமை கனடாவில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் இந்திய குடியினர் என்றும் அவர்கள் வன்முறை குழுக்களுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கலாம் என்றும் அந்த செய்தி கூறுகிறது. […]
Hardeep Singh Nijjar என்ற சீக்கியரை British Columbia மாநிலத்தின் Surrey நகரில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர் என்ற சந்தேகத்தில் கனடிய போலீசார் சிலரை கைது செய்துள்ளனர். இந்த கொலையை இந்திய அரசே செய்வித்து என்று கடந்த ஆண்டு கனடிய பிரதமர் கூறியிருந்தார். கனடிய பிரதமரின் குற்றச்சாட்டை ஆவேசத்துடன் மறுத்தது மோதி அரசு. Kamalpreet Singh (வயது 22), Karanpreet Singh (வயது 28), Karan Brar (வயது 22) ஆகியோரே தற்போது கனடிய போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்கிறது […]