வடகொரியா இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 13,000 km பாயும் வல்லமை கொண்டது என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உகந்த கோணத்தில் ஏவினால் இந்த ஏவுகணை அமெரிக்காவின் சிக்காகோ, வெள்ளைமாளிகை உள்ள வாஷிங்டன் DC போன்ற இடங்களை இலகுவில் அடையும். . வடகொரிய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:00 அளவில் ஏவப்பட்ட இந்த கணை 4,500 km உயரம்வரை சென்று, 1,000 km தொலைவில் வீழ்ந்துள்ளது. எதிரியை தாக்கும் நோக்குடன் ஏவப்படும் கோணத்தில் […]
இந்தோனேசியாவின் பாலி (Bali) தீவில் உள்ள Agung எரிமலை கடந்த சில நாட்களாக குமுற ஆரம்பித்துள்ளது. நாளுக்குநாள் இதன் குமுறல் உக்கிரம் அடைந்தும் வருகிறது. தற்போது 100,000 வரையான பொதுமக்கள் எரிமலை பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். Agung மலையில் இருந்து 10 km தூரத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்களே தற்போது நகர்த்தப்பட்டு உள்ளனர். . பாலி தீவு இந்தோனேசியாவில் உள்ள உல்லாச பயணிகளுக்கான முதன்மை இடம். இந்தோனேசியா செல்லும் உல்லாச பயணிகளில் […]
நேற்று வெள்ளிக்கிழமை பாலஸ்தீனர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் (Trump) அரசு முன்னுக்கு பின் முரணான நடவடிக்கை ஒன்றை (U-turn) எடுத்துள்ளது. அதற்கு காரணம் தற்போது எல்லாவற்றையும் இழந்த பாலஸ்தீனம் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட முனைந்ததா என்று வினாவ வைத்துள்ளது. . கடந்த கிழமை அமெரிக்காவின் தலைநகர் Washington DC யில் செயல்பட்டுவந்த பலஸ்தீனர்களின் அலுவலகத்தை மூடிவிடுமாறு ரம்ப் அரசு கட்டளை பிறப்பித்து இருந்தது. இஸ்ரவேலுக்கு எதிராக ஐ.நா. உட்பட எந்தவொரு சர்வதேச அமைப்புகளுடனும் பாலத்தீனம் இணைந்து […]
மாலைதீவு சுதந்திரம் அடைந்ததை முதலில் அனுசரித்த நாடு இந்தியா. அன்றுமுதல் மாலைதீவு இந்தியாவுடன் நெருக்கம் கொண்ட ஒரு நாடாகவே இருந்து வந்துள்ளது. மாலத்தீவுக்கு தேவையான பொருட்களை இந்தியாவும், இலங்கையுமே பெருமளவில் வழங்கி வந்துள்ளன. ஆனால் தற்போது மாலைதீவு இந்தியாவையும் மீறி சீனாவின் நட்பு நாடாக மாறியுள்ளது. . 2014 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி மாலைதீவு சென்றிருந்தார். அப்போது சீனாவும், மாலத்தீவும் பல உடன்பாடுகளை செய்துகொண்டன. மாலைதீவு சீனாவின் One-Road-One-Belt திட்டத்திலம் இணைந்து கொண்டது. இந்த வருடம் […]
இலங்கை மற்றும் தமிழ்நாடு, கேரளா உட்பட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மீண்டும் பெருமழை வருகிறது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இடியுடனான இந்த பெருமழை இப்பகுதிகளில் பொழியலாம். . இலங்கைக்கும், அந்தமான் தீவுகளுக்கும் இடையிலான வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் ஏற்படும் காலநிலை மாற்றங்களே இந்த பெருமழைக்கு காரணம். . சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கோச்சி போன்ற தென்னிந்திய நகரங்கள் இம்மழையால் பெரிதும் பாதிக்கப்படும். இலங்கையின் முழுப்பகுதியும் இந்த மலையின் தாக்குதலுக்கு உள்ளாகும். . தொடர்ச்சியாக பொழியவுள்ள […]
எகிப்தின் சைனாய் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு, மற்றும் துப்பாக்கி தாக்குதல்களுக்கு குறைந்தது 235 பேர் பலியாகியும், மேலும் 100 வரை காயப்பட்டும் உள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை மசூதியில் வழிபாடுகள் இடம்பெற்ற வேளையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. . எகிப்தின் சைனாய் பகுதியில் உள்ள El Arish என்ற நகருக்கு அண்மையில் உள்ள Bir al-Abed என்ற சிறுநகரில் உள்ள Al Rawdah என்ற மசூதி மீதே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. முதலில் […]
கடந்த புதன்கிழமை, நவம்பர் 15 ஆம் திகதி, தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவின் (Argentina) நீர்மூழ்கிகளில் ஒன்று இயந்திர கோளாறுகளுக்கு உட்பட்டதாக நீர்மூழ்கி குழு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி கோளாறு பாரதூரமானது என்று தெரிவித்து இருக்கவில்லை. ஆனால் அந்த நீர்மூழ்கி குழு மறுநாள் வியாழன் மேலதிக தொடர்புகள் எதையும் ஏற்படுத்தாத போது, அவர்களை தேடும் பணி ஆரம்பித்தது. இன்றுவரை அந்த நீர்மூழ்கியின் இடம் அறியப்படவில்லை. அந்த நீர்மூழ்கியில் இருந்த சுவாசத்துக்கு தேவையான வளி (oxygen) நேற்று 22 […]
தன் மனைவியை ஜனாதிபதியாக்கும் நோக்கில், தனது உப-ஜனாதிபதியை (Emmerson Mnangagwa) பதவியில் இருந்து விரட்டிய சிம்பாப்வே ஜனாதிபதி Robert Mugabe இறுதியில் தனது பதவியை துறந்துள்ளார். அந்நிலையில் நாட்டை விட்டோடிய முன்னாள் உப-ஜனாதிபதி Emmerson Mnangagwa மீண்டும் சிம்பாப்வே திரும்பியுள்ளார். அவர் அந்நாட்டின் ஜனாதிபதியாக வெள்ளி பதவி பிரமாணம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. . ஆரம்பத்தில் சிம்பாப்வே மக்களின் நலத்துக்கென போராட புறப்பட்ட முகாபே பதவிக்கு வந்தபின் தம் நலத்துக்காகவே செயல்பட்டிருந்தார். நாடு பஞ்சத்தில் மூழ்கியது. ஆனால் […]
இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜேர்மனியில் இடம்பெற்ற பொதுதேர்தலில் தற்போதைய அதிபர் அங்கெலா மேர்க்கெல் (Angela Merkel) தலைமயிலான Christian Democratic (CDU) கட்சியும் அதன் சகோதர கட்சியும் (CSU) அதிக ஆசனங்களை பெற்றிருந்தாலும் அவ்வணி வென்ற ஆசனங்களின் தொகை பெரும்பான்மை அரசை அமைக்க போதியதாக இருந்திருக்கவில்லை. அதனால் CDU அணி மற்றைய சில கட்சிகளுடன் கூட்டு ஆட்சி அமைக்க முனைந்தது. ஆனால் அந்த முயற்சியும் தற்போது தோல்வியில் உள்ளது. அதனால் அங்கு மீண்டும் ஒரு தேர்தல் […]
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்து பெங்களூர் மாநகரத்தில் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன இந்திரா உணவக (Indira Canteen) நிலையங்கள். இந்த உணவகங்களில் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் தயாரிக்கப்பட்ட உணவு மிக மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு காலையில் இட்டலி 5 ரூபா மட்டுமே. தமிழ்நாட்டில் ஜெயலலிதா நடாத்திய அம்மா உணவகம் (Amma Canteen) வழங்கிய அரசியல் இலாபங்களை கண்காணித்த இந்திரா காங்கிரஸ் வாக்கு சேர்க்கும் நோக்கில் கர்நாடகாவில் ஆரம்பித்த உணவகமே Indira Canteen. […]