மொத்தம் 50 சீன தம்பதிகள் இன்று ஞாயிரு இலங்கையில் திருமணம் செய்துள்ளனர். குழுவாக செய்யப்பட்ட இந்த திருமண (mass wedding) வைபவம் இன்று ஞாயிரு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சில தம்பதிகள் கண்டி சிங்கள ஆடைகளையும், சிலர் சீன ஆடைகளையும், சிலர் மேற்கு நாட்டு ஆடைகளையும் அணிந்திருந்தனர். இந்த 50 தம்பதிகளில் சிலர் ஏற்கனவே திருமணமானவர். . தற்காலங்களில் சுமார் 2 மில்லியன் உல்லாச பயணிகள் வருடம் ஒன்றில் இலங்கை வருவதாகவும் அதில் 13% மானோர் சீனர்கள் என்றும் […]
சில கிழமைகளில் முன் சவுதி அரேபியாவில் billionaire Price Alwaleed bin Tatal உட்பட பல பெரும் பணக்கார இளவரசர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர். சவுதி அரசர் King Salman தனது விருப்பத்துக்குரிய, 32 வயதுடைய, மகன் Crown Price Mohammed bin Salman என்பவரை சவுதியின் அடுத்த அரசர் ஆக்கும் நோக்கில் அதிகாரங்கைளை வழங்கி இருந்தார். அந்த அதிகாரங்களை பயன்படுத்தியே இளவரசர் சல்மான் (Salman) தனக்கு போட்டியாக இருக்கக்கூடிய இளவரசர் Tatal போன்றோரை கைது செய்திருந்தார். […]
World Inequality Report வெளியிட்ட அறிக்கையின்படி மத்தியகிழக்கு நாடுகளிலும், இந்தியாவிலும் வருமான பரம்பல் பின்னிலையில் உள்ளது. மத்தியகிழக்கு நாடுகளில் மொத்த வருமானத்தின் 61% அந்த நாடுகளின் முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது. மிஞ்சிய 39% வருமானமே 90% மக்களை அடைகிறது. இந்தியாவில் 55% வருமானம் முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது. . அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளிலும் 47% வருமானம் முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது. சீனாவில் 41% வருமானம் முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது. […]
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் முழு ஜெருசலேம் நகரும் இஸ்ரவேலின் தலைநகர் என்று அறிவித்ததுடன், அங்கு அமெரிக்காவின் தூதுவராலயத்தை நகர்த்த அறிவிப்பு விடுத்ததை தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் இன்று கிழக்கு ஜெருசலேமை (East Jerusalem) பாலத்தீனியர் தலைநகர் என்று அறிவித்துள்ளன. . துருக்கியில் கூடிய Organization of Islamic Cooperation (OIC) என்ற 57 இஸ்லாமிய நாடுகளை அங்கத்துவம் கொண்ட அமைப்பு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அதேவேளை ரம்பின் தீர்மானத்தை அமெரிக்காவும், இஸ்ரவேலும் மட்டுமே இன்றுவரை ஆதரித்து […]
வடகொரியாவுடன் முன் நிபந்தனைகள் எதுவுமின்றி தாம் பேச்சுவார்த்தைகள் நடாத்த தயாராக உள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ரில்லெர்சன் (Secretary of State Rex Tillerson) இன்று செய்வாய் கூறியுள்ளார். வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடாதவரை தாம் வடகொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை செய்யப்போவது இல்லை என்று இதுவரை கூறிய அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பெரியதோர் திருப்பமாக உள்ளது. . வடகொரியா பெருமளவில் அணுவாயுதத்துள் முதலீடு செய்துள்ளதாகவும் (“they have too much invested in it”), அவ்வகை முதலீட்டை […]
2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி பூட்டின் (Vladimir Putin) மீண்டும் போட்டியிடவுள்ளார். இந்த அறிவிப்பை பூட்டின் இன்று தொழில்சாலை ஒன்றுக்கான பயணத்தின்போது விடுத்துள்ளார். . Boris Yeltsin ஆட்சிக்கு பின், அவரால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிக்கு வந்திருந்த பூட்டின் 2000 ஆம் ஆண்டில் இருந்து ரஷ்யாவின் பலம் மிக்க தலைவராக இருந்து வந்துள்ளார். ரஷ்ய சட்டம் காரணமாக 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பூட்டின் […]
தற்போது ரெல் அவிவ் (Tel Aviv) நகரில் உள்ள அமெரிக்காவின் இஸ்ரவேலுக்கான தூதுவராலயத்தை சர்ச்சசைக்குரிய ஜெருசலேம் (Jerusalem) நகருக்கு நகர்த்தும் திட்டத்தை நாளை அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் அறிவிப்பார் என கூறப்படுகிறது. பல உலக நாடுகள் இந்த நகர்வை வன்மையாக கண்டித்துள்ளன. . 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அமெரிக்காவின் யூதர்கள் ஆதிக்கம் கொண்ட காங்கிரஸ் ஒரு சட்டத்தை உருவாக்கியிருந்தது. அந்த சட்டப்படி அமெரிக்கா தனது இஸ்ரவேலுக்கான தூதுவராலயத்தை ஜெருசலேம் நகருக்கு […]
தற்போது நாணய சந்தையை உலுக்கி வருகிறது bitcoin என்ற மின்னியல் நாணயம் (digital currency). சிலர் இதை ஒருவகை முக்கோண சீட்டு என்கின்றனர். வேறு சிலர் இதுதான் வருங்கால நாணயம் என்கின்றனர். இந்த நாணயம் ஏனைய நாணயங்கள் போல் அச்சடிக்கப்படுவது இல்லை. இந்த நாணயம் எந்தவொரு நாட்டின் மத்திய வங்கியாலும் மேற்பார்வை செய்யப்படுவதும் இல்லை. இந்த நாணயம் எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தை பிரதிபலிப்பதுவும் இல்லை. இது ஒரு digital currency. . இந்த நாணய முறை Satoshi […]
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் யுகோசிலவியாவுக்கான நீதிமன்றம் (ICTY அல்லது International Criminal Tribunal for the former Yugoslavia), அங்கு இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாக, பல முன்னாள் இராணுவ மற்றும் அரசியல் தலைமைகளை விசாரணை செய்து தண்டித்து வருகிறது. . அந்த விசாரணைகளில் ஒரு அங்கமாக குரோசியன் (Croatia) ஜெனரல் Slobodan Praljak என்பவரும் விசாரணை செய்யப்பட்டிருந்தார். இவர் 2004 ஆம் ஆண்டில் தானாகவே விசாரணைக்கு சமூகம் செய்திருந்தார். இவர் ஒரு war crime […]
அண்மைக்காலங்களில் ஏற்பட்டுவரும் சனத்தொகை மாற்றங்களால் இந்தியாவும் விரைவில் ஒரு முதியோர் (60+ வயதுடையோர்) நிறைந்த நாடாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த முதியோர் பெரும்பாலும் தனிமையிலேயே வாழவும் நேரிடும். . தற்போது இந்தியாவில் சுமார் 100 மில்லியன் முதியோர் உள்ளதாக கணிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு வீதம், இந்தியாவின் சனத்தொகை அதிகரிப்பு வீதத்தின் இரண்டு மடங்காக இருந்து வருகிறது. இந்நிலை தொடரின், 2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் சனத்தொகையின் 25% […]