இரும்பு, அலுமினிய வரி, வர்த்தக போருக்கு அறிகுறி

அமெரிக்காவின் ரம்ப் அரசு அமெரிக்காவுள் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு (steel) 25% இறக்குமதி வரியையும், அலுமினியத்துக்கு (aluminum) 10% வரியையும் நடைமுறை செய்ய திடமாக உள்ளது. ஆனால் இந்த புதிய வரிகள் அமெரிக்க நட்பு நாடுகளுடன் ஒரு வர்த்தக போரை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது. . மேற்படி வரி சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் மலிவு விலை உலோக அளவை கட்டுப்படுத்த வரையப்பட்டது என்று கூறப்பட்டாலும், இந்த புதிய வரி கனடாவையும் ஐரோப்பிய நாடுகளையுமே அதிகம் பாதிக்கும். கடந்த […]

சிரியாவில் ரஷ்ய தனியார் இராணுவம்

கடந்த 7ஆம் திகதி (2018-02-07) சிரியாவின் Deir al-Zour என்ற இடத்தில் பல ரஷ்ய ஆயுததாரிகள் அமெரிக்காவின் விமான தாக்குதலுக்கு பலியாகி இருந்தனர். மேற்கு நாட்டு பத்திரிகைகள் பலியானோர் தொகையை 100 வரை இருக்கும் என்று கூறியிருந்தன. ஆனால் ரஷ்யா பலியானோர் தொகை சிறிது என்றிருந்தது. ஆனால் இருதரப்பும் இந்த தாக்குதலை விரைவில் மூடி மறைத்துவிட்டன. . உண்மையில் பலியான இந்த ரஷ்ய ஆயுததாரிகளின் விபரங்கள் படிப்படியாக வெளிவந்துள்ளன. அமெரிக்கா அந்நாட்டு தனியார் இராணுவங்களை (private armies) […]

2018 Winter ஒலிம்பிக் நிறைவு, அடுத்து Beijing

2018 Winter ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்று ஞாயிரு நிறைவு பெற்றன. வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கைகள் காரணமாக குழம்பலாம் என்று கருதப்பட்ட 2018 போட்டிகள் எதிர்பாராத அரசியல் திருப்பங்களின் மத்தியில் நிறைவு பெற்றுள்ளது. . மொத்தம் 39 பதக்கங்கள் பெற்ற நோர்வே முதலாம் இடத்தில் உள்ளது. 1924 ஆண்டு முதல் இன்றுவரை நோர்வே 8 தடவைகள் winter ஒலிம்பிக்கில் முதலாம் இடத்தை வென்றுள்ளது. . இரண்டாம் இடத்தில் ஜேர்மனி உள்ளது. ஜேர்மனி 31 பதக்கங்களை வென்றுள்ளது. முற்கால […]

ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்

இந்திய நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இன்று சனிக்கிழமை தனது 54வது வயதில் மரணமாகி உள்ளார். இவர் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வுக்கு Dubai சென்றிருந்தபோதே மரணமாகி உள்ளார். . 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிவகாசியில் தமிழ் தந்தையாருக்கும், தெலுங்கு தாயாருக்கும் பிறந்த இவர் ‘துணைவன்’ படம் (1969) மூலம் தனது நடிப்பு தொழிலை ஆரம்பித்து இருந்தார். . இவர் முதன்மை பாத்திரமாக நடித்த திரைப்படம் கே. பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ என்ற 1976 […]

சீனாவில் உலகின் மிகநீள 55 km பாலம்.

சீனாவில் 55 km நீளம் கொண்ட பாலம் ஒன்று கட்டுமான வேலைகள் பூர்த்தியான நிலையில் உள்ளது. Hong Kong, Zhuhai, Macau ஆகிய இடங்களை இணைக்கும் இந்த பாலம் 22.9 km நீள பிரதான பாலத்தையும், 6.7 km நீள கடலுக்கு கீழான சுரங்கத்தையும் கொண்டது. . இந்த பால திட்டமிடல் வேலைகள் சுமார் 6 வருடங்களையும், கட்டுமானம் சுமார் 8 வருடங்களையும் எடுத்து இருந்தன. . இந்த பாலம் தற்போது 3 மணித்தியாலங்கள் செலவிட்டு பயணிக்கும் […]

இந்தியாவில் கனடிய பிரதமர், வேண்டாத விருந்தாளி?

கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ (Justin Trudeau) தற்போது இந்திய பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் முன்னரே இவர் இந்தியாவில் சிறிது எதிர்ப்புக்களை எதிர்பார்த்து இருந்திருந்தாலும், தற்போது கனடிய பிரதமருக்கு இந்தியாவில் கிடைக்கும் புறக்கணிப்புகள் அவரை ஒரு வேண்டா விருந்தாளியாக காண வைத்துள்ளது. . முதலில் இந்திய பிரதமர் மோதி, கனடிய பிரதமரை குறைவு செய்திருந்தார். கனடிய பிரதமரை தான் விமான நிலையம் சென்று வரவேற்பதற்கு பதிலாக, ஒரு junior அமைச்சரை வரவேற்க அனுப்பி இருந்தார் […]

ஊழலில் இலங்கை 91 ஆம் இடத்தில்

இன்று Transparency International வெளியிட்ட 2017ஆம் ஆண்டுக்கான Corruption Perception Index (CPI) கணிப்பில் இலங்கை 38 புள்ளிகளை மட்டும் பெற்று 91ஆம் இடத்தில் உள்ளது. . இலங்கை 2012, 2013, 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளில் முறையே 40, 37, 38, 37, 36 புள்ளிகளை பெற்று வந்துள்ளது. . 2017 ஆண்டில் 89 புள்ளிகளை பெற்ற நியூ சீலாந்து 1ஆம் இடத்தில் உள்ளது. அதாவது உலகில் ஊழல் மிக குறைந்த நாடாக உள்ளது […]

Seychelles தீவில் இந்திய தளம்

இந்து சமுத்திரத்தில் உள்ள சீசெல்லில் (Seychelles) இந்தியா தனது படை தளம் ஒன்றை அமைக்கவுள்ளது. சீனா தனது ஆளுமையை இந்து சமுத்திரத்தில் பரப்பிவரும் செய்கைக்கு போட்டியான செய்கையே இதுவென்று கருதப்படுகிறது. . கடந்த மாதம் இந்தியாவும், சீசெல்லும் 20-வருட உடன்படிக்கை ஒன்றில் ஒப்பமிட்டன. அந்த ஒப்பந்தப்படி, இந்தியா ஒரு விமான ஓடுபாதையையும், கப்பல் இறங்கு துறையையும் அமைக்கும். இவை இரண்டும் சிசெல்லின் Assumption தீவில் அமையும். . இந்த திட்டம் இந்திய பிரதமர் மோதி 2015 ஆம் ஆண்டு […]

கமல் பிரச்சாரத்தில் இணைய ரஜனி மறுப்பு

நடிகர் கமலஹாசன் அண்மையில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து இருந்தார். அந்த அரசியல் பிரவேசத்தின் ஒரு அங்கமாக, கமல் தமிநாடு மாநில அளவில் பிரச்சார நடவடிக்கை ஒன்றை புதன்கிழமை முதல், இராமநாதபுரத்தில் இருந்து மேற்கொள்ளவுள்ளார். . இன்று ஞாயிறு ரஜனியின் Poes Garden வீடு சென்ற கமல், ராஜனியை தனது பிரச்சாரத்தில் இணைய அழைத்திருந்தார். ஆனால் அழைப்புக்கு நன்றி தெரிவித்த ரஜனி, தம் இருவரது பாணியும் வித்தியாசமானது (our styles are different) என்று கூறி, இணைய […]

ஈரானில் விமான விபத்து, 66 பேர் பலி

ஈரானின் Aseman Airlines விமான சேவைக்கு சொந்தமான ATR-72 வகை விமானம் ஒன்று இன்று மலை பகுதி ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. அதில் பயணித்த 60 பயணிகளும், 2 விமானிகளும், 2 பணியாளரும், 2 பாதுகாப்பு அதிகாரிகளும் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. . ஈரானின் தலைநகர் Tehranனுக்கு தெற்கே சுமார் 780 km தொலைவில் உள்ள Yasuj என்ற மலைப்பகுதி நகரிலேயே இந்த விபத்து இடம்பெறுள்ளது. விபத்தின் போது இப்பகுதி பனி நிறைந்து காணப்பட்டது என்றும் […]