கடந்த வருடம் அதிகூடிய விமான சேவைகள் சிங்கப்பூர் விமான நிலையத்துக்கும், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கும் இடையில் இடம்பெற்று உள்ளதாக OAG Aviation என்ற விமான சேவைகள் தரவு நிலையம் கூறுகிறது. அத்துடன் உலகின் அதிகூடிய விமான சேவைகள் தம்மிடையே கொண்ட முதல் 10 விமான நிலைய இரணைகளில், Toronto (YYZ) – New York (LGA) இரணை மட்டுமே ஆசியாவுக்கு வெளியே உள்ளது. . சிங்கப்பூர் விமான நிலையத்துக்கும், கோலாலம்பூர் விமான நிலையத்துக்கும் இடையே […]
இந்தியாவின் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், புஞ்சாப் ஆகிய மாநிலங்களில் புதன்கிழமை வீசிய தூசு புயலுக்கு சுமார் 125 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 200 பேர்வரை காயப்பட்டும் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் சுமார் 111 பேர் பலியாகி உள்ளனர். தாஜ்மகால் உள்ள Agra பகுதியில் சுமார் 46 பேர் பலியாகி உள்ளனர். . கடும் காற்று, கடுமையான மின்னல்கள் என்பன தூசு புயலுடன் கூடவே குடியிருப்புகளை தாக்கி உள்ளன. ஆந்திர பிரதேசத்தில் மட்டும் சுமார் 41,000 மின்னல்கள் […]
இந்திய வம்ச பெண் ஒருவர் பிரித்தானியாவின் Manchester நகரில் இருந்து Dubai மூலம் இந்தியாவின் புதுடெல்லி நகர்வரை தனது கணவனின் கடவுசீட்டில் பறந்துள்ளமை பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த பெண்ணை கணவனின் கடவுசீட்டில் எடுத்து வந்த Emirates விமானசேவை தவறை ஏற்றுகொண்டுள்ளது. . கடந்த மாதம் 23ஆம் திகதி (April 23) Geeta Modha என்ற பெண் Manchester நகரில் இருந்து Dubai மூலம் புதுடில்லி நகர் பறக்கவிருந்தார். அவர் தனது கடவுசீட்டுக்கு பதிலாக தவறுதலாக தனது […]
இந்தியா அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நிலையங்களை தனியார் செயல்பாட்டுக்கு விடவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சுமார் 95 வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்கள் இவ்வாறு தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் விசனம் கொண்டுள்ளனர் இந்திய வரலாற்று ஆய்வாளர். . Dalmia Bharat என்ற நிறுவனமும், இந்திய உல்லாசப்பயண அமைச்சும் 17ஆம் நூற்றாண்டு தாஜ்மகாலை 5 வருடங்கள் செயல்படுத்த $3.7 மில்லியன் பெறுமதிக்கு இணங்கி உள்ளன என்றும் கூறப்படுகிறது. . Dalmia Bharat தாஜ்மகாலுக்கான நுழைவு […]
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) மீதான வழக்கு தொடர்பாக இலங்கை அரசு சமர்ப்பித்த ஆவணங்களின்படி இலங்கை அரசு 2006 ஆம் ஆண்டில் $7.83 மில்லியன் பெறுமதியான பாவித்த MiG விமானங்களுக்கும், அவற்றை பராமரிக்கும் சேவைகளுக்கும்மிகையான தொகையான $15.66 மில்லியன் பணத்தை வழங்கி உள்ளது. . அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசு மேற்படி கொள்வனவு யுக்கிரைன் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அரசுகளுக்கும் நேரடியா இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் என்று கூறி இருந்தாலும், […]
இலங்கையில் பிறந்தவரான சுபாஷ்கரன் அல்லிராஜா (Subaskaran Alliraja) என்பவரால் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டது Lycamobile என்ற நிறுவனம். இந்த நிறுவனம் பெருமளவு பண கடத்தலில் (money laundering) ஈடுபட்டுள்ளது என்ற கூறி பிரான்ஸ் செய்யும் விசாரணைகளுக்கு பிரித்தானியாவின் Conservative அரசாங்கம் இணங்க மறுத்துள்ளது. . Lycamobile நிறுவனம் தொடர்பான தகவல்களை BuzzFeed News என்ற செய்தி நிறுவனம் பெருமளவில் பகிரங்கப்படுத்தி வருகின்றது. இந்த செய்தி நிறுவனம் மீது Lycamobile வழக்கும் தொடர்ந்துள்ளது. . இந்த செய்தி நிறுவன கூற்றுப்படி […]
இன்று வெள்ளி வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியாவுள் புகுந்து, தென்கொரிய ஜனாதிபதியை சந்தித்து உள்ளார். சுமார் 65 வருடங்களுக்கு முன்னர் உருவாகிய வட-தென் கொரியாக்களுக்கு இடையிலான எல்லையை வடகொரிய தலைவர் கடப்பது இதுவே முதல் தடவை. . எல்லையின் வடகொரியா பக்கத்தில் உள்ள Panmungak என்ற கட்டிடத்தில் இருந்து வெளியேறிய வடகொரியாவின் கிம், எல்லை கோடுவரை வந்துள்ளார். எல்லையில் அவரை வரவேற்ற தென்கொரிய ஜனாதிபதி தென்கொரியாவுள் நுழைய அழைத்துள்ளார். தெற்கே வந்த வடகொரிய கிம், […]
அண்மை காலம் வரை பெருமளவு அணு குண்டு பரிசோதனைகளை செய்துவந்த வடகொரிய தலைவர் திடீரென அவ்வகை அணு பரிசோதனைகளை தாம் நிறுத்துவதாக கூறியிருந்தார். இந்த தீர்மானத்தை வடகொரியா சுயமாகவே எடுத்திருந்தது. உலகம் வடகொரியாவின் இந்த மன மாற்றைத்தை அறிந்து வியந்தும் இருந்தது. . ஆனால் தற்போது சீனாவில் இருந்து வெளிவரும் சில அறிக்கைகள் வடகொரியா அணு குண்டு பரிசோதனைகளை செய்யும் மலை பகுதி அண்மையில் வெடிக்கப்பட்ட மிக பெரிய குண்டுகளின் தாக்கம் காரணமாக உடைந்து வீழ்ந்துள்ளது என்கின்றன. […]
இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் இந்திய பிரதமர் மோதி சீனாவின் ஜனாதிபதியை சீனாவின் மத்திய பகுதியில் உள்ள வூகான் (Wuhan) நகரத்தில் சந்திக்கவுள்ளார். . இந்த சந்திப்பு ஒரு ‘informal’ சந்திப்பு என்று கூறப்பட்டாலும், இவர்கள் இருவரும் மிக முக்கிய விடயங்களை கலந்துரையாடுவார்கள் கூறப்படுகிறது. அனால் பேசப்படும் விடயங்கள் எதுவும் பகிரங்கம் செய்யப்படவில்லை. . அண்மையில் சீனாவின் Xiamen நகரில் இடம்பெற்ற BRICS மாநாட்டின்போது […]
அந்நிய நாடுகளில் வாழும் அல்லது தொழில் புரியும் மக்கள் தம் நாடுகளுக்கு பணம் அனுப்புவது வளமை. இவ்வகை பணத்தை (remittances) பெறும் நாடுகளில் முதலாவதாக உள்ளது இந்தியா. 2017 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு $69 பில்லியன் பணம் இவ்வகையில் கிடைத்துள்ளது என்கிறது உலக வங்கி (Worl Bank). இத்தொகை 2016 ஆம் ஆண்டுக்கான தொகையிலும் 9.9% அதிகம். ஆனால் 2014 ஆம் ஆண்டிலேயே இந்தியா அதிக தொகையான $70.4 பில்லியன் பணத்தை இவ்வகையில் பெற்றிருந்தது. . இரண்டாவது […]