இந்த கிழமையின் ஆரம்பத்தில் இடம்பெற்ற மலேசிய பொது தேர்தலில் தோல்வி அடைந்த, 64 வயதுடைய, முன்னாள் பிரதமர் Najib Razak மலேசியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. . உள்ளூர் நேரப்படி இன்று சனி காலை 10:00 மணியளவில் முன்னாள் பிரதமரும், Rosmah Mansor என்ற அவரின் மனைவியும் விசேட விமானம் ஒன்றின் மூலம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தோனேசியாவின் Jakarta நகருக்கு செலவிருந்தனர். அப்போதே முன்னாள் பிரதமர் வெளிநாடு செல்வது இடைநிறுத்தப்படுள்ளது. . […]
வரும் ஜூன் 12 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ரம்பும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்திக்கவுள்ளார். இந்த அறிவிப்பை ரம்ப் இன்று வெளியிட்டுள்ளார். . அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் Mike Pompe) இந்த சந்திப்பு நோக்கம் “permanent, verifiable, irreversible, dismantling of North Korea’s weapons of mass destruction” என்றுள்ளார். வடகொரியாவின் தலைவரும் சுயமாகவே அதையே செய்யவுள்ளதாக முன்னர் கூறியுள்ளார். ஆனால் தனது அணுவாயுதங்களை கைவிட, பிரதியுபகாரமாக என்னவெல்லாம் கேட்பர் என்பது […]
மலேசியாவில் புதன்கிழமை இடம்பெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியை தலைமை தாங்கிய Mahathir Mohamad மீண்டும், தனது 92 ஆவது வயதில், பிரதமர் ஆகவுள்ளார். மொத்தம் 222 ஆசனங்களில், எதிர்க்கட்சி 115 ஆசனங்களை வென்றுள்ளது. . Mahathir தனது 56 ஆவது வயதில் முன்னர் மலேசியாவின் பிரதமராக பதவி வகித்தவர். 1981 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை இவர் பிரதமராக ஆட்சி செய்திருந்தார். அப்போது அவர் ஆளும் […]
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் அமெரிக்கா சென்று, அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்பிடம் ஈரான் அணுவாயுத உண்டபடிக்கையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கேட்டிருந்தனர். ஆனாலும் ரம்ப் ஈரானுடனான ஆணுவாயுத உடன்படிக்கையில் இருந்து நேற்று வெறியேறி இருந்தார். இந்நிலையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாட்டு தலைவர்கள் தாம் தொடர்ந்தும் ஈரானுடன் இணைந்து செயல்படவுள்ளதாக இன்று கூறி உள்ளனர். . ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் Heiko Maas “We remain committed to the nuclear […]
ஒபாமா காலத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய 6 நாடுகளும் ஈரானுடன் செய்துகொண்ட அணுவாயுத உடன்படிக்கையில் இருந்து தான் வெளியேறுவதாக ரம்ப் இன்று கூறியுள்ளார். ஒபாமா செய்துகொண்ட எல்லா நடவடிக்கைகளையும் தரம் குறைந்தது என்று கூறும் ரம்ப், ஒபாமா செய்த ஈரான் உடன்படிக்கையையும் தரமற்றது என்று கூறியுள்ளார். . கடந்த சில நாட்களாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் உடன்படிக்கையில் இருந்து வெளியேற வேண்டாம் என்று ரம்பை கேட்டிருந்தும், அவற்றை எல்லாம் […]
நியூயோர்கின் (New York) attorney general Eric Schneiderman நேற்று திங்கள் இரவு தனது பதவியை துறந்துள்ளார். இவர் மீது நான்கு பெண்கள் வன்முறை மற்றும் பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்ததே இவரின் பதவி விலகலுக்கு காரணம். இந்த நான்கு பெண்களுள் இலங்கையில் பிறந்த ரான்யா செல்வரெத்தினமும் (Tanya Selvaratnam) ஒருவர். அதேவேளை Schneiderman தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தும் உள்ளார். . Michelle Manning என்ற பெண்ணும் Tanya செல்வரத்தினமும் தம்மை Schneiderman தாக்கியும், கழுத்தை நெரித்து […]
திங்கள்கிழமை லெபனான் (Lebanon) நாட்டில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சியா இஸ்லாமிய குழுவான ஹிஸ்புல்லாவும் (Hezbullah) அதன் கூட்டு அணிகளும் அரை பங்குக்கும் மேலான ஆசனங்களை கைப்பற்றி உள்ளன. . மொத்தம் 128 ஆசங்களில், 67 ஆசங்களை ஹிஸ்புல்லாவும் அதன் ஆதரவு குழுக்களும் பெற்றுள்ளன. . ஈரான் சார்பு இயக்கமான ஹிஸ்புல்லாவின் வெற்றியால் விசனம் கொண்டுள்ளது இஸ்ரேல். சிரியாவில் இடம்பெறும் யுத்தத்திலும் ஹிஸ்புல்லா சிரிய Assad அரசு சார்பில் சண்டையிட்டு வெற்றிகளை கண்டிருந்தது. பலமான எதிரி ஆயுத […]
பிரான்சின் Air France விமான சேவை விரைவில் இல்லாது அழியக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் Bruno Le Maire. Air France விமான சேவையின் ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக ஊதியம் கேட்டு பல தடவைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதே அமைச்சரின் இந்த கூற்றுக்கு காரணம். . அமைச்சர் மட்டுமன்றி பெரும் முதலீடுகளை செய்வோரும் Air France தனது செலவுகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே ஏனைய விமான சேவைகளுடன் போட்டியிட முடியும் என்று கூறுகின்றனர். . […]
மாற்றி அமைக்கப்பட்ட tanker வகை கப்பல் மூலம் அஸ்ரேலியா அல்லது நியூசீலாந்து செல்ல முனைந்தார்கள் என்று கூறி 131 இலங்கையரை மலேசிய போலீசார் கைது செய்துள்ளார். இவர்களுள் 98 ஆண்கள், 24 பெண்கள், 4 சிறுவன்கள், 5 சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர். . சிங்கப்பூரை அண்டியுள்ள மலேசியாவின் Johor மாநிலத்துக்கு அருகில் இந்த கப்பல் இடைநிறுத்தப்பட்டு தேடுதல் செய்யப்பட்டிருந்தது. அப்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். . இவர்களை கடத்த பயன்படுத்தப்பட்ட மீன்பிடி வள்ளத்துடன், 3 இந்தோனேசியர், 4 […]
அதிகரித்துவரும் ரஷ்யாவின் கடற்படை நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்கா மீண்டும் தனது Second Fleet என்ற கடற்படை அணியை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்த செய்தி கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க கடற்படையால் வெளியிடப்பட்டுள்ளது. . இரண்டாம் உலகயுத்தம் முடிந்த பின், Cold War காலத்தில், Second Task Fleet என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அமெரிக்க கடற்படை அணி, 1950 ஆம் ஆண்டு முதல் Second Fleet என்று அழைக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில், Cold War தணிந்த காரணத்தாலும் கடற்படையின் […]