2026 World Cup அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோவில்

2026 ஆம் ஆண்டுக்கான FIFA World Cup கால்பந்தாட்ட போட்டிகள் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளிலும் இடம்பெறவுள்ளன. மொத்தம் 200 வாக்குகளில் 134 வாக்குகள் மேற்படி மூன்று நாடுகளின் கூட்டுக்கு கிடைத்துள்ளது. இந்த கூட்டுடன் போட்டியிட்ட மொராக்கோ (Morocco) சந்தர்ப்பத்தை இழந்துள்ளது. . 2026 ஆம் ஆண்டில் மொத்தம் 80 போட்டிகள் இடம்பெறும். அதில் 60 போட்டிகள் அமெரிக்காவில் இடம்பெறும். கனடாவிலும், மெக்ஸிக்கோவிலும் தலா 10 போட்டிகள் இடம்பெறும். . இந்த போட்டிகள் மொத்தம் […]

கிம்-ரம்ப் சந்திப்பில் கிம்முக்கே அதிக வெற்றி

நேற்று செய்வாய்க்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்ற கிம்-ரம்ப் சந்திப்பில் அமோக பயன் அடைந்தது வடகொரிய தலைவர் கிம்மே. தன்னை ஒரு சிறந்த உடன்படிக்கை செய்பவர் (deal maker) என்று பறைசாற்றும் ரம்ப் அடைந்த பயன்கள் இதுவரை எதுவுமில்லை. . சர்வாதிகாரி, தன் மாமனை கொன்றவர், தன் சகோதரரை (half-brother) சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட இரசாயணம் வீசி மலேசியாவில் கொலை செய்தவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்ட கிம், உலகின் மிக பெரிய வல்லரசான அமெரிக்காவின் ஜனாதிபதியுடன் சமனாக அமர்ந்து […]

ரம்ப்-கிம் இன்று சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் (வயது 71), வடகொரிய தலைவர் கிம்மும் (வயது 34) இன்று சிங்கப்பூரில் உள்ள Sentosa (Sanskrit: santosha, சந்தோச) நேரடியாக சந்தித்து உள்ளனர். இதுவரை ஒருவரை மற்றவர் தூற்றியதை மறந்து, இருவரும் நட்புடன் சந்தித்து கைகுலுக்கினர். கிம்முடனான சந்திப்பை ரம்ப் “terrific relationship” என்றும், “better than expected” என்றும் வர்ணித்துள்ளார். . கிம் சீனாவின் தலைவர்கள் பயன்படுத்தும் Boeing 747 Air China விமானம் ஒன்றிலேயே சிங்கப்பூர் வந்திருந்தார். அவர் முன் […]

கனடிய பிரதமர் மீது வசைபாடும் ரம்ப்

வடகொரிய தலைவர் கிம்மை சந்திக்க சிங்கப்பூர் சென்றுகொண்டிருக்கும் ரம்ப் கனடிய பிரதமர் ரூடோ மீது இன்று வசைபாடியுள்ளார். அத்துடன் G7 அமர்வின் பின்னான கூட்டறிக்கைக்கு (Summit Communique) அமெரிக்கா வழங்கிய ஆதரவையும் பின்வாங்கினார் ரம்ப். . ரம்ப்  கனடாவில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க முன்னரே G7 அமர்வு தனது கூட்டறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிக்கைக்கு அமெரிக்கா உட்பட அனைத்து G7 நாடுகளும் ஆதரவு வழங்கி இருந்தன. . பின்னர் பிரதமர் ரூடோ கனடா ஜூலை 1ஆம் […]

பலஸ்தீனர்க்கு பட்டமும் ஆயுதம்

தமது விடுதலைக்காக போராடும் பலஸ்தீனர் புதிதாக விலை மலிந்த ஆயுதம் ஒன்றை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அவர்கள் தற்போது பட்டங்களின் வால்களில் தீப்பந்தம் கட்டி, அந்த பட்டத்தை பறக்கவிட்டு, பின்னர் அதை இஸ்ரேலின் பக்கம் அறுத்து விடுகிறார்கள். அதனால் இஸ்ரேல் பக்கத்து மரங்கள், காடுகள், விவசாய நிலங்கள் என்பன அவ்வப்போது தீக்கு இரையாகுகின்றன. . இந்த சாதார தொழில்நுட்பத்தை முறியடிக்க இஸ்ரேல் drone (ஆளில்லா சிறு விமானங்கள்) போன்ற விலை உயர்ந்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுகிறது. வாலில் தீ […]

இந்தியாவில் 4,000 வருட பழமையான ரதம்

இந்தியாவின் ASI (Archaeological Survey of India) சுமார் 4,000 வருட பழமையான மூன்று ரதங்கள், வாள், சிறு கத்தி, குடம் போன்ற பொருட்களை மீட்டுள்ளனர். புதுடில்லிக்கு வடக்கே, சுமார் 70 km தூரத்தில், உள்ள Sinauli என்ற கிராமத்திலேயே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. . கடந்த 3 மாதங்களாக நடாத்திய அகழ்வுகளின் பின்னரே இவை மீட்கப்பட்டுள்ளன. 2005 ஆம் ஆண்டிலும் இப்பகுதியில் வேறுபல ஆதிக்குடிகளின் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. . ASI அமைப்பின் அதிகாரி ஒருவர் இந்த […]

G7 அமர்வுக்கு ரம்ப் வெறுப்புடன் பயணம்

நாளை 8ஆம் திகதியும், மறுதினம் 9ஆம் திகதியும் கனடாவின் Quebec மாகாணத்து Charlevoix நகரில் இடம்பெறவுள்ள வருடாந்த G7 அமர்வுக்கு வேண்டாவெறுப்புடன் செல்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப். இவர் பதவிக்கு வந்த நாள் முதல் தன்னிசையாக எடுத்துக்கொண்ட தீர்மானங்கள் தொடர்பாக மற்றைய 6 நாட்டு தலைவர்களும் விமர்சனம் செய்யக்கூடும் என்பதாலேயே ரம்ப் அங்கு செல்ல நாட்டம் கொண்டிருக்கவில்லை. . ரம்பின் வர்த்தகத்துக்கான ஆலோசகர் Larry Kudlow இந்த முரண்பாடுகளை ஒரு குடும்ப சண்டை (much like a […]

வெள்ளைமாளிகையை எரித்தது கனடா, கூறுவது ரம்ப்

கடந்த மே மாதம் 25ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும், கனடிய பிரதமர் ரூடோவுக்கும் இடையில் ரம்பின் புதிய உலோக வரிகள் தொடர்பாக காரசாரமான பேச்சுக்கள் இடம்பெற்றதாம். அந்த உரையாடலின்போது ரம்ப் 1812 ஆம் ஆண்டில் கனடாவே அமெரிக்காவின் வெள்ளைமாளிகையை எரித்தது என்றும் கூறியுள்ளார். . ரம்பின் அரைகுறை அறிவு War of 1812 தொடர்பானது. அந்த யுத்தம் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கு இடையிலானது. அப்போது கனடா என்ற ஒரு நாடே இருந்திருக்கவில்லை. . உண்மையில் பிரித்தானியா வெள்ளைமாளிகை […]

ஒருவருட தடை, பணியாது வளர்ந்த கட்டார்

2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 5ஆம் திகதி சவுதி, UAE, பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கட்டார் மீது கடுமையான தடைகளை விதித்திருந்தன. முதலில் மேற்கூறிய நான்கு நாடுகளும் ஈரானுடனான உறவை துண்டி, கட்டாரின் Al Jazeera தொலைக்காட்சி சேவையை நிறுத்து, கட்டாரில் நிலைகொண்டுள்ள துருக்கி இராணுவத்தை வெளியேற்று என்று பல நிபந்தனைகளை விதித்து இருந்தன. அவற்றுக்கு கட்டார் இணங்க மறுக்க, நான்கு நாடுகளும் கட்டாருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தன. கட்டாரின் விமான சேவை தனது […]

பசுபிக் கடலை நீந்திக்கடக்கும் Lecomte

பசுபிக் கடலை நீந்திக்கடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரெஞ்சு நாட்டு Ben Lecomte என்பவர். சுமார் 9,000 km நீளம் கொண்ட இவரின் நீச்சல் ஜப்பானின் கிழக்கு கரையில் ஆரம்பித்து அமெரிக்காவின் மேற்கு கரையான San Franciscoவில் முடிவடையும். இந்த சாதனையை இவர் வெற்றிகரமாக நிறைவு செய்தால் இவரே பசுபிக் கடலை நீந்திக்கடந்த முதலாவது நபர் ஆவார். . தான் தினமும் 8 மணித்தியாலங்கள் நீந்தவுள்ளதாக இவர் கூறியுள்ளார். இவருக்கு உதவியாக வள்ளம் ஒன்று இவருடன் பயணிக்கும். இந்த […]