சவுதியின் குண்டுக்கு யெமனில் 45 மாணவர் பலி

இன்று வியாழன் சவுதி அரேபியாவின் தலைமையிலான இராணுவ அணி யெமனில் (Yemen) நடாத்திய விமான தாக்குதலுக்கு 45 மாணவர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மேலும் சுமார் 43 மாணவர் காயம் அடைந்தும் உள்ளனர். . மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பஸ் ஒன்று மீது செய்யப்பட்ட குண்டு தாக்குதலே மாணவர்கள் பலியாக காரணமாக இருந்துள்ளது. இந்த சிறுவர்கள் 10 வயது முதல் 13 வயதுடையோர் ஆவர். . அதேவேளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மரணித்தோரில் குறைந்தது […]

முற்றிவரும் கனடா, சவுதி முறுகல்

கனடிய அரசும், சவுதி அரசும் கடந்த சில நாட்களாக கருத்து போரில் ஈடுபட்டுள்ளன. அந்த போர் நாளாந்தம் முற்றி வருகிறது. . அண்மையில் சவுதி அரசு Samar Badawi என்ற உரிமைகளுக்காக போராடும் பெண்ணை சிறையில் அடைத்திருந்தது. அதை கனடா கண்டித்திருந்தது. அதனாலேயே சவுதி கோபம் கொண்டுள்ளது. சவுதியின் உள்நாட்டு விடயங்களுள் கனடாவே அல்லது வேறு ஒரு நாடோ தலையிடுவதை எதிர்க்கிறது சவுதி. . Samar Badawi என்பவர் Raif Badawi என்பவரின் சகோதரி ஆவார். சவுதி அரசை […]

அமெரிக்காவின் செவ்வாய் வரிக்கு சீனா புதன் வரி

அமெரிக்காவின் ரம்ப் அரசு நேற்று செய்வாய் மீண்டுமொரு புதிய இறக்குமதி வரியை (tariffs) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதித்திருந்தது. அதற்கு பதிலடியாக சீனா இன்று புதன் மீண்டும் ஒரு புதிய இறக்குமதி வரியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதித்துள்ளது. . செய்வாய் அமெரிக்கா புதிதாக நடைமுறை செய்த $16 பில்லியன் வரிக்கு நிகராக சீனாவும் $16 பில்லியன் பெறுமதியான அமெரிக்க பொருட்களுக்கு புதிய வரியை நடைமுறை செய்கிறது. இருதரப்பு வரிகளும் […]

ஈரான் மீது அமெரிக்கா முதல்கட்ட பொருளாதார தடை

இன்று செய்வாய் முதல் (00:01 EDT, New York நேரம்) முதல் அமெரிக்காவின் ஈரான் மீதான முதல் கட்ட பொருளாதார தடை நடைமுறைக்கு வந்துள்ளது. இரண்டாம் கட்ட பொருளாதார தடை, குறிப்பாக எண்ணெய் வளம் மீதான தடை, நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைமுறைக்கு வரும். . அமெரிக்காவின் இந்த தடை அமெரிக்க நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகள் செய்வதை தடுப்பது மட்டுமன்றி, அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் பிற நாட்டுகளின் நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தகம் செய்வதையும் […]

இந்திய பல்கலைக்கழகங்கள் உள்ளும் குளறுபடிகள்

இந்தியாவின் பல்கலைக்கழகங்களுள் இடம்பெறும் குளறுபடிகள் தொடர்பாக அமெரிக்காவின் New York Times பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரை இந்திய உயர் கல்வியியுள் பிரதமர் மோதி தலைமயிலான பா. ஜ. கட்சி செய்யும் குளறுபடிகளை சாடியுள்ளது. . கடந்த மே மாதம் Times Higher Education World University Rankings வெளியிட்ட ஆய்வுகளின்படி எந்தவொரு இந்திய பல்கலைக்கழகமும் உலகின் முதல் 100 அதிசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த ஆய்வுக்கு உலகின் 1,000 பல்கலைக்கழகங்கள் உட்படுத்தப்பட்டிருந்தன. […]

இந்தோனோஷியாவில் 7.0 நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் Bali பகுதிக்கு அண்மையில் உள்ள Lombok தீவில் 7.0 அளவிலான நிலநடுக்கம் இன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தலாம் என்று அறிவித்திருந்தாலும், சுனாமி எச்சரிக்கை பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளது. . உள்ளூர் நேரப்பபடி இந்த நடுக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6:46 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த நடுக்கத்தின் மையம் சுமார் 10 km ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. . இந்த நடுக்கத்துக்கு பின்னர் 5.4 மற்றும் 4.9 அளவிலான நடுக்கங்கள் உட்பட 12 சிறிய […]

சீனா இலங்கைக்கு மேலும் $1 பில்லியன் கடன்

இலங்கைக்கு மேலும் $1 பில்லியன் டாலர் கடன் வழங்க சீனா முன்வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளி கூறியுள்ளது. இந்த 8 வருட கடனுக்கு முதல் 3 வருடங்களுக்கு வட்டி இல்லை என்றாலும், 3 வருடங்களின் பின் 5.25% வட்டி அறவிடப்படும். . சீனாவின் China Development Bank இந்த கடனை வழங்குகிறது. அதேவேளை இன்னோர் $250 மில்லியன் கடனை சீனாவின் முதலீட்டார்களிடம் இருந்து Panda Bond மூலம் பெறவும் இலங்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. […]

Apple முதல் trillion டாலர் பொது நிறுவனம்

அமெரிக்காவின் Apple நிறுவனம் இன்று உலகின் முதல் 1 டிரில்லியன் டாலர் சந்தை பெறுமதி கொண்ட பொது நிறுவனம் என்ற உயர்வை அடைந்துள்ளது. iPhone என்ற தொலைபேசி உட்பட சில தொலைத்தொடர்பு உபகரணங்களை தயாரிக்கும் Apple நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கு (stock) ஒன்று இன்று $207.05 பெறுமதியை அடைந்த போதே அந்நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி (market capital) 1 டில்லின் ($1,000,000,000,000) டாலர் ஆகியுள்ளது. . Apple தற்போது 4,829,926,000 பங்குளை (AAPL, NASDAQ) கொண்டுள்ளது. அதேவேளை […]

மரணித்த குட்டியை சுமக்கும் ஓர்கா திமிங்கிலம்

ஜூலை மாதம் 24 ஆம் திகதி பிறந்து, சிறிது நேரத்தில் மரணமாகிய தனது பிள்ளையை தற்போதும் (ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை) சுமந்து திரிகிறது J-35 என்று இலக்கம் இடப்பட்ட தாய் ஓர்கா திமிங்கிலம் (orca whale, killer wale). கனடாவின் வான்கூவர் (Vancouver), மற்றும் அமெரிக்காவின் சியாற்றல் (Seattle) பகுதிகளுக்கு அண்டிய கடலில் நிகழும் இந்த துயரத்தை ஆய்வாளர்கள் தொடர்ந்து அவதானித்து வருகின்றனர். . சிலவேளைகளில் தாய் திமிங்கிலம் தனது பிள்ளை இன்றியும் காணப்படுள்ளது. […]

800 நியூசிலாந்து மாணவ விசாக்கள் மீள் விசாரணையில்

இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்குகான மாணவ விசா பெற்ற 800 பேரின் விசாக்கள் மீள்  விசாரனைக்கு உட்படுவதாக நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் Ian Lees-Gallway கூறியுள்ளார். இலங்கையில் இருந்து பொய்யான நிதி நிறுவனம் ஒன்று இயங்குவதாகவும், அதை பல இலங்கை மாணவர் விசாவுக்கு பயன்படுத்தி உள்ளதாகவும் அமைச்சரால் கூறப்பட்டுள்ளது. . இலங்கை மாணவர்களிடம் படிப்பை தொடர போதிய பணம் இல்லாதபோது, இந்த நிறுவனம் அந்த மாணவர்களிடம் போதிய பணம் உள்ளதாக பொய் ஆவணங்களை வழங்கி உள்ளது. . அண்மையில் இந்தியாவின் […]