இலங்கையின் விமான சேவையான SriLankan மீண்டும் தனியார் முதலீட்டை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு முன்னரும் சுமார் $1 பில்லியன் கடனில் உள்ள இந்த விமான சேவை முதலீடு பெற்று தனியார் வசமாக முனைந்திருந்தது. அப்போது சிறிது நாட்டம் கொண்டிருந்த TPG Capital (Texas Pacific Group Capital) என்ற அமெரிக்க முதிலீட்டு நிறுவனம் பின்னர் பின்வாங்கி இருந்தது. . SriLankan விமான சேவையின் கணக்கியல் புத்தகங்களை ஆராய்ந்த பின்னரே TPG முதலிட மறுத்து பின்வாங்கி […]
Total என்ற மிகப்பெரிய பிராஸ் நாட்டு எண்ணெய் அகழ்வு நிறுவனம் ஈரானில் தனது செயல்பாடுகளை நிறுத்தி, அங்கிருந்து வெளியேறுகிறது. இந்த செய்தியை ஈரானிய அரசு இன்று திங்கள் வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவின் ரம்ப் அரசு ஈரான் மீது தடை விதிக்கவுள்ள நேரத்தில், Total அமெரிக்காவில் உள்ள தனது எண்ணெய் அகழ்வு திட்டங்களை பாதுகாக்கும் நோக்கில் ஈரானில் இருந்து வெளியேறுகிறது. . 2015 ஆம் ஆண்டில் ஒபாமா அரசு, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுடன் […]
இந்தியாவின் தென் பகுதியில் கடந்த சில தினங்களாக பொழிந்து வரும் மழையினால் பெருக்கெடுத்த வெள்ளத்துக்கு வெள்ளிக்கிழமை வரை 1,019 பேர் பலியாகி உள்ளனர் என்று இந்திய உள்துறை அமைச்சு கூறியுள்ளது. அத்துடன் சுமார் 324,000 பேர் தமது வீடுகளில் இருந்து வெளியேற உதவிடப்பட்டு, வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டும் உள்ளனர். அங்கு மொத்தம் 33 மில்லியன் மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். . அதிகம் பாதிப்பை அடைந்த கேரளா மாநிலத்தில் மட்டும் சுமார் 300 பேர் இதுவரை […]
அமெரிக்காவை தாக்க சீன படைகளின் குண்டு வீச்சு விமானிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலகமான பென்ரகன் (Pentagon) கூறியுள்ளது. . சீனாவின் படை நடவடிக்கைகளை அறிந்து, அறிக்கை தயாரிக்குமாறு அமெரிக்காவின் காங்கிரஸ் கூறியதன் காரணமாக பென்ரகன் நேற்று வியாழன் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. . கடந்த 3 வருடங்களாக சீனாவின் PLA (People’s Liberation Army) கடல்கள் மேலாக சென்றும் தாக்கும் பயிற்சியில் தரம் அடைந்து வருவதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. . உதாரணமாக […]
இன்று புதன்கிழமை நியூசிலாந்தில் நடைமுறை செய்யப்பட்ட சட்டம் ஒன்றிப்படி வெளிநாட்டார் நியூசிலாந்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை கொள்வனவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்ரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டவர்களுக்கு இந்த தடை இல்லை. . சீனர் போன்ற செல்வம் மிக்க வெளிநாட்டவர் போட்டிக்கு அதிக பணம் செலுத்தி வீடுகளை கொள்வனவு செய்வதால் உள்ளூர் மக்கள் வீடுகளை கொள்வனவு செய்ய முடியாது உள்ளமையே இந்த புதிய சட்டத்துக்கு காரணம். . கடந்த 10 வருடத்துள் அந்நாட்டில் வீட்டு விலை சுமார் […]
ஐக்கிய நாடுகள் சபைக்கு (UN general budget) அதிக பண பங்களிப்பை செய்யும் இரண்டாவது நாடாக சீனா இடம்பெறவுள்ளது. 2019 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான ஐ. நா. செலவுகளின் 12.01% தொகையை சீனா வழங்கவுள்ளது. . இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த ஜப்பான் 2019-2021 காலத்தில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும். 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஐ. நா. செலவுகளின் 9.68% தொகையை ஜப்பானும், 7.92% […]
இத்தாலியில் வாகனங்கள் ஓடும் மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 22 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியின் Genoa என்ற நகரில் உள்ள Morandi Bridge என்ற மேம்பாலமே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது. இன்று செவ்வாய் வீசிய கடும் புயலே இந்த உடைவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. . சுமார் 80 மீட்டர் நீளமான உடைந்த மேம்பால துண்டு 50 மீட்டர் கீழே உள்ள புகையிரத பாதையில் வீழ்ந்தபோது அந்த பாலத்தில் பயணித்த வாகனங்களும் கூடவே வீழ்ந்துள்ளன. […]
காஸ்பியன் கடலை சூழவுள்ள ஐந்து நாடுகளும் இன்று ஞாயிறு அக்கடலுள் எல்லைகளை தீர்மானிக்க இணங்கி உள்ளன. ரஷ்யா, ஈரான், அஜேபையான் (Azerbaijan), கஜகஸ்தான் Kazakhstan), ரேர்க்மென்ஸ்ரான் (Turkmenistan) ஆகிய ஐந்து நாடுகளுமே காஸ்பியன் கடலை பங்கிட சுமார் 20 வருட பேச்சுவார்த்தைகளின் பின் இணங்கி உள்ளன. . USSR காலத்தில் காஸ்பியன் கடல் ரஷ்யா, ஈரான் ஆகிய இரண்டு நாடுகளால் மட்டுமே சூழ்ந்திருந்தது. USSR உடைவின் பின் மற்றைய 3 நாடுகளும் தோன்றி உள்ளன. . மேலும் […]
நேற்று சனிக்கிழமை அமெரிக்காவின் நாசா (NASA) சூரியனை நோக்கி விண்கலம் (probe) ஒன்றை ஏவி உள்ளது. Parker Solar Probe என்ற இந்த விண்கலம் புளோரிடா (Florida) மாநிலத்தின் Cape Canaveral தளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. . இந்த விண்கலமே சூரியனுக்கு மிக அருகாக செல்லவுள்ள முதல் விண்கலமாகும். சூரியனுக்கு அருகில் வெப்பநிலை சுமார் 555,000 C என்று கூறப்படுகிறது. அதனால் இந்த விண்கலம் சூரியனில் இருந்து சுமார் 6 மில்லியன் km தொலைவிலேயே எரிந்து பயனற்று […]
துருக்கி (Turkey) நாணயமான லிரா (lira) இன்று நாணயமாற்று சந்தையில் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. துருக்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும் இடையே இடம்பெற்றுவரும் முறுகல் நிலை காரணமாகவே துருக்கியின் நாணயம் வீழ்ச்சி அடைந்துள்ளது. துருக்கியில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமியத்துக்கு 20% மேலதிக இறக்குமதி வரியும், இரும்புக்கு 50% மேலதிக வரியும் அறவிடப்போவதாக ரம்ப் கூறிய பின்னரே லிரா வீழ்ந்துள்ளது. . Andrew Brunson என்ற அமெரிக்க கிறீஸ்தவ ஆயரை துருக்கி 2016 ஆம் ஆண்டு […]