பங்களாதேஷ் ஆடை உற்பத்தி ஊழியருக்கு மாதம் 8,000 உள்ளூர் நாணயமான ராக்கா (சுமார் $95) வழங்க எடுத்துக்கொண்ட முடிவை அந்நாட்டு ஆடை உற்பத்தி சங்கம் நிராகரித்து உள்ளது. பதிலாக மாதம் 16,000 ராக்கா ($190) ஊதியமாக வழங்கப்படல் வேண்டும் என்கிறது ஆடை உற்பத்தி ஊழியர் சங்கம். . 2013 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற ஒரு ஆடை உற்பத்தி நிலைய தீ விபத்துக்கு 1,130 ஊழியர்கள் பலியாகி இருந்தனர். அப்போது நடைமுறை செய்யப்பட்ட சம்பள தொகையான மாதம் […]
Art Gallery of South Australia (AGSA) என்ற அஸ்ரேலியாவின் நூதனசாலையில் இந்தியாவில் திருடப்பட்ட நடனமாடும் சிவன் சிலை ஒன்று உள்ளதாக அறியப்பட்டுள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த சிலையை இந்தியாவுக்கு மீண்டும் எடுத்துவரும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த சிலையின் உண்மை 1958 ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றின் மூலம் அடையாள காணப்பட்டு உள்ளது. . இந்த சிலை இந்தியாவின் நெல்லை (Nellai) ஆலயம் ஒன்றில் இருந்து 1970 ஆம் ஆண்டுகளில் திருடப்பட்டு உள்ளது. அப்போது […]
இன்று வியாழன் முதல் என்றுமில்லாத அளவு பெரிய யுத்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளது ரஷ்யா. 1981 ஆம் ஆண்டில் USSR செய்துகொண்ட மிகப்பெரிய யுத்த பயிற்சியிலும் பெரியது இன்று முதல் இடம்பெறும் பயிற்சி. இம்முறை முதல் தடவையாக சீனாவும் பங்குகொள்ள அழைக்கப்பட்டுள்ளது. . பசுபிக் கடலோரம், ரஷ்யாவின் Vladivostok நகருக்கு அண்மையிலேயே இந்த பயிற்சி இடம்பெறுகிறது. NATO அணிக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தங்கள் காரணமாக ரஷ்யா ஐரோப்பாவை அண்டிய பகுதியில் பெரும்தொகை இராணுவம் கொண்ட பயிற்சியில் ஈடுபட […]
அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (national security adviser) John Bolton இன்று திங்கள் சர்வதேச குற்ற நீதிமன்றத்துக்கு (ICC) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் செய்ததாக கூறப்படும் குற்றங்களை ICC விசாரணை செய்ய முனைந்தால் தாம் ICC யையும் அதன் நீதிபதிகள் உட்பட்ட அதிகாரிகளையும் தண்டிக்கவுள்ளதாக Bolton கூறியுள்ளார். . “The ICC is already dead to us” என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது எங்களை பொறுத்தமட்டில் ICC […]
தென் அமெரிக்காவில் உள்ள வெனேசுவேலா (Venezuela) நாட்டில் இராணுவ சதி மூலம் ஆட்சி கவிழ்ப்பு ஒன்றை செய்ய அமெரிக்காவின் ரம்ப் அரசு பேச்சுவார்த்தைகள் செய்திருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. . கடந்த வருடத்தின் இறுதி காலங்களிலும், இந்த வருடத்தின் ஆரம்ப காலங்களிலும் வெனேசுவேலாவின் சில இராணுவ அதிகாரிகளும், அமெரிக்காவின் அதிகாரிகளும் சந்தித்து இராணுவ கவிழ்ப்பு மூலம் அமெரிக்க ஆதரவு ஆட்சியை அங்கு அமைக்க திட்டங்களை ஆராந்துள்ளனர். . ஆனாலும் சில அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்காவின் உதவியுடன் இடம்பெற்ற முன்னைய […]
ரஷ்யாவின் ஜனாதிபதி பூட்டின், துருக்கியின் ஜனாதிபதி Recep Tayyip Erdogan, ஈரானின் ஜனாதிபதி Hassan Rouhani ஆகியோர் இன்று ஈரானின் தலைநகர் தெகிரானில் கூடி சிரியா யுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தி உள்ளனர். . எஞ்சியுள்ள முரண்பாடுகளுக்கு இராணுவ யுத்தம் தீர்வல்ல என்று மூன்று தரப்பும் கூறினாலும், ரஷ்யாவும், ஈரானும் ஆயுத குழுக்களிடம் இருந்து இட்லிப் (Idlib) பகுதி மீட்கப்படல் வேண்டும் என்றுள்ளன. ஆனால் துருக்கி கட்டுப்படுத்திய இராணுவ நடவடிக்கைகளை மட்டும் நாடுகிறது. துருக்கி தனது ஆதரவு […]
Bedouin என்ற பகுதியில் உள்ள பலஸ்தீனர் குடியிருப்புகளை அழிக்க இஸ்ரேல் உயர்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உரிமை வழங்கியுள்ளது. ஜெருசலேத்துக்கு கிழக்கே உள்ள இந்த குடியிருப்பில் உள்ள சுமார் 180 பலஸ்தீனர் பலவந்தமாக வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட உள்ளனர். . அங்கு குடியிருந்த பலஸ்தீனார் வீடுகள் தரமாக கடப்பட்ட வீடுகள் ஆல்ல என்று இஸ்ரேல் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆனால் நீண்ட காலமாக அங்கு வாழும் பலஸ்தீனார் தாம் கல்வீடுகளை அமைக்க இஸ்ரேல் அரசு அனுமதி தரவில்லை என்று கூறியுள்ளனர். […]
நேற்று புதன்கிழமை The New York Times பத்திரிகை ரம்ப் தொடர்பாக கட்டுரை (Op-Ed) ஒன்றை, அதை எழுதியவரின் பெயரை குறிப்பிடாது, வெளியிட்டு இருந்தது. இந்த கட்டுரையை எழுதியவர் தன்னை ஒரு ரம்ப் அவையின் பிரதான உறுப்பினர் என்றே கூறியுள்ளார். தானும், தன்னைப்போல் அமெரிக்காவின் நலன் விரும்பிகள் சிலரும் ரம்ப் செயல்பாடுகளில் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடிந்ததை செய்வதாக கூறியுள்ளார். இதனால் ரம்ப் விசனம் கொண்டுள்ளார். இந்த கட்டுரையை எழுதியவர் வீரம் இல்லாதவர் என்றும், நேர்மை இல்லாதவர் […]
சிரியாவின் Idlib பகுதியில் ரஷ்யா, 22 நாட்களின் ஓய்வின் பின்னர், மீண்டும் விமான தாக்குதல்களை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே ரஷ்யா இந்த தாக்குதலை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்த பகுதியிலேயே தப்பியுள்ள அரச எதிர்ப்பு குழுக்கள் நிலை கொண்டுள்ளன. இதுவே அவர்களின் இறுதி தளம். . எதிர்ப்பு குழுக்களின் தகவல்படி இன்று 16 இடங்களில், குறைந்தது 30 குண்டுகளை ரஷ்ய யுத்த விமானங்கள் வீசியுள்ளன. . சிரியாவின் அரச படைகள் Idlib மீது […]
உலகமெல்லாம் Made in China என்று பதியப்பட்டு சீனாவின் smartphone வகை தொலைபேசிகள் விற்பனை செய்யப்பட்டாலும், அவற்றுள் இருக்கும் processor (chip) போன்ற சில முக்கிய பாகங்களின் (parts) உரிமையை Qulacomm, Intel போன்ற அமெரிக்காவின் நிறுவனங்களே தற்போது கொண்டுள்ளன. அண்மையில் அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்ப், சீனாவை தண்டிக்கும் நோக்கில், அமெரிக்காவின் Qualicomm நிறுவனம் சீனாவின் ZTE என்ற smartphone தயாரிக்கும் நிறுவனத்துக்கு semiconductor விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்தார். அதனால் ZTE நிறுவனம் தனது […]