குவைத் மாடி தீக்கு 49 வெளிநாட்டு ஊழியர் பலி

குவைத் மாடி தீக்கு 49 வெளிநாட்டு ஊழியர் பலி

குவைத் (Kuwait) அடுக்குமாடி ஒன்றில் ஏற்பட்ட தீக்கு குறைந்தது 49 வெளிநாட்டு ஊழியர்கள் பலியாகி உள்ளனர். அதில் பெரும்பாலானோர் இந்தியர் என்று கூறப்படுகிறது. இந்த தீ புதன் காலை 6:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த மாடியில் அளவுக்கு அதிகமானோர் குடியிருந்தாகவும் கூறப்படுகிறது. கேரளா முதலமைச்சர் Pinarayi Vijayan தனது மாநிலத்தவரும் மரணித்து உள்ளதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டினரும் இங்கு குடியிருந்துள்ளனர். Mangaf என்ற இடத்தில் இடம்பெற்ற இந்த தீக்கு கட்டிட உரிமையாளரின் பேராசையே காரணம் என்று குவைத் உதவி […]

பைடெனின் மகன் Hunter குற்றவாளி, சிறை செல்வார்

பைடெனின் மகன் Hunter குற்றவாளி, சிறை செல்வார்

அமெரிக்க சனாதிபதி பைடெனின் மகன் Hunter Biden அவர் மீது சுமத்தப்படட 3 குற்றச்சாடுகளிலும் குற்றவாளி என்று நேற்று செவ்வாய் நீதிமன்றால் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மேற்படி குற்றங்களுக்கு அதிகூடிய தண்டனைகளாக 25 ஆண்டுகள் சிறையும், $750,000 குற்றப்பணமும் அறவிடப்படலாம். ஆனால் இது ஹன்ரரின் முதலாவது குற்றம் ஆனபடியால் குறைந்த அளவு தண்டனையே வழங்கப்படும். அமெரிக்காவில் சாதாரண குடிமகனும் பெரும் துப்பாக்கிகளை சட்டப்படி கொள்வனவு செய்யலாம். Right to bear arms என்பது அமெரிக்காவின் சரத்தில் உள்ள உரிமை. […]

நிரந்தர காசா யுத்த நிறுத்தத்துக்கு ஐ. நா. வாக்களிப்பு

நிரந்தர காசா யுத்த நிறுத்தத்துக்கு ஐ. நா. வாக்களிப்பு

காசாவில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை நடைமுறை செய்ய ஐ. நா. பாதுகாப்பு சபை வாக்களிப்பு மூலம் கூறியுள்ளது. மொத்தம் 15 பாதுகாப்பு சபை வாக்குகளில் 14 வாக்குகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 0 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. சீனா ஆதரவாக வாக்களித்தது, ரஷ்யா வாக்களிக்கவில்லை. இவ்வகை தீர்மானங்கள் பல முன்னர் ஐ. நா. பாதுகாப்பு சபைக்கு வந்திருந்தபோது அவற்றை அமெரிக்கா தனது வீட்டோ வாக்கு மூலம் தடுத்து இருந்தது. இம்முறை அமெரிக்காவே இவ்வகை தீர்மானத்தை வாக்களிப்புக்கு எடுத்து வந்துள்ளது. […]

வலதுசாரிகள் கையில் ஐரோப்பா, பிரான்சில் தேர்தல்

வலதுசாரிகள் கையில் ஐரோப்பா, பிரான்சில் தேர்தல்

அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் வலதுசாரிகள் கை ஓங்கி உள்ளது. இம்முறை வென்ற கட்சிகள் பொதுவாக புதிய குடிவரவாளர் மீது வெறுப்பு கொண்டவை ஆகையால் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய சட்டங்கள் குடிவரவாளருக்கு பாதகமானவையாக அமையலாம். பிரான்சில் தனது இடதுசாரி கட்சி தோல்வி அடைந்ததால் பிரான்சின் சனாதிபதி Macron உடனடியாக உள்நாட்டு National Assembly தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரான்சில் Marine Le Pen னின் கட்சியான National Rally கட்சி 31% வாக்குகளை பெற்றுள்ளது. அது […]

இலங்கைக்கு Starlink மூலம் இணைய சேவை

இலங்கைக்கு Starlink மூலம் இணைய சேவை

இலங்கையில் விரைவில் Starlink செய்மதிகள் மூலமான இணைய சேவை வழங்கப்படவுள்ளது. அமெரிக்கரான Elon Musk என்பவரின் SpaceX நிறுவனத்தின் கிளை நிறுவனமானது Starlink நிறுவனம். ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் Starlink சேவையை அனுமதிக்காத நிலையிலும் அமெரிக்காவின் அரவணைப்பை நாடும் ரணில் அரசு Starlink சேவைக்கான உரிமையை விரைந்து வழங்கியுள்ளது. இலங்கையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் Sri Lanka Telecom, Dialog, Airtel போன்ற நிறுவனங்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில்  உள்ளது போல் Starlink இலங்கை […]

Gaokao: 13.4 மில்லியன் மாணவர் எழுதும் சோதனை

Gaokao: 13.4 மில்லியன் மாணவர் எழுதும் சோதனை

சீனாவில் ஆண்டுதோறும் இடம்பெறும் Gaokao (Higher Exam) என்ற சோதனையை இந்த ஆண்டு ஜூன் 7ம், 8ம் திகதிகளில் 13.4 மில்லியன் மாணவர் எழுதுகிறார்கள்.  உலகத்திலேயே மிக கடுமையான சோதனையாக கருதப்படும் இந்த சோதனை சீன மாணவர்களின் பல்கலைக்கழக வாய்ப்பை தீர்மானிக்கும்.  அதி கூடிய புள்ளிகளை பெறும் மாணவர் முன்னணி பல்கலைக்கழக அனுமதி பெறுவர். கடந்த ஆண்டு இந்த சோதனையை 12.9 மில்லியன் மாணவர் மட்டுமே எழுதி இருந்தனர். இந்த சோதனை சீன மொழி, கணிதம், ஆங்கிலம், […]

மதவாதத்தை புறக்கணித்த சில இந்திய வாக்காளர்

மதவாதத்தை புறக்கணித்த சில இந்திய வாக்காளர்

பெருமளவு இந்துவாதி இந்திய வாக்காளர் பிரதமர் மோதி தலைமையிலான பா. ஜ. கட்சிக்கு முன்னைய தேர்தல்களில் வாக்களித்து இருந்தாலும் சில இந்திய இந்து வாக்காளர் இம்முறை மதவாதத்தை புறக்கணித்து உள்ளனர். இவர்கள் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பு இன்மை போன்ற விசயங்களின் கவனம் செலுத்தி உள்ளனர். அதனால் பா. ஜ. முன்னைய தேர்தலில் வென்றிருந்த தொகுதிகளில் 63 ஐ இம்முறை இழந்துள்ளது. இதுவரை குஜராத் மாநில தேர்தல்கள், இந்திய மத்திய தேர்தல்களில் மோதி பெரும்பான்மை ஆட்சிக்கு தேவையான ஆசனங்களை வென்றிருந்தாலும் […]

மூன்றாம் தடவை வலுவிழந்து பிரதமர் ஆகும் மோதி

மூன்றாம் தடவை வலுவிழந்து பிரதமர் ஆகும் மோதி

பிரதமர் மோதி தலைமையில் ஆனால் வெகுவாக வலுவிழந்த பா. ஜ. கட்சி கூட்டணி இந்தியாவில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. பா. ஜ. கட்சி தெற்கு மாநிலங்களில் மட்டுமன்றி உத்தர பிரதேசம் போன்ற பா. ஜ. கோட்டைகளிலும் வலுவிழந்து உள்ளமை வியப்பாக உள்ளது. இம்முறை “Ab ki baar, 400 paar” என்று தனது பிரச்சாரங்களில் 400 ஆசனங்களை கைப்பற்றும் நோக்கத்தை மோதி தெரிவித்து இருந்தாலும் பா. ஜ. இம்முறை 50% ஆசனங்களை வெல்வதே கேள்விக்குறியாகி உள்ளது. பா. […]

சந்திரனின் மறுபக்கத்தில் தரையிறங்கிய சீன கலம்

சந்திரனின் மறுபக்கத்தில் தரையிறங்கிய சீன கலம்

சீனாவின் Chang’e 6 என்ற விண்கலம் சந்திரனின் மறுபக்கத்தில் பத்திரமாக சீன நேரப்படி ஞாயிறு காலை தரையிறங்கி உள்ளது. இந்த கலம் அங்கிருந்து 4 kg சந்திர நிலத்தின் மாதிரியை பூமிக்கு எடுத்துவரும். இதுவே இதுவரை மனிதன் செலுத்திய சந்திர கலங்களில் மிகவும் நுணுக்கமானது. சந்திரனின் மறுபக்கத்தில் சீனா தரையிறங்குவது இது இரண்டாவது தடவை. 2019ம் ஆண்டு சீனாவின் Chang’e 4 கலம் பத்திரமாக தரை இறங்கி இருந்தது. 2030ம் ஆண்டு சீனா சந்திரனில் சீன விண்வெளி வீரரை தரையிறக்க […]

தென் ஆபிரிக்காவில் ஆளுமையை இழக்கும் ANC

தென் ஆபிரிக்காவில் ஆளுமையை இழக்கும் ANC

நெல்சன் மண்டேலாவின் ANC (African National Congress) அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் முதல் தடவையாக 50% க்கும் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளது. ANC கட்சி கருப்பு இனத்தவரின் வாழ்கையை மேம்படுத்த தவறியமையே மக்களின் வெறுப்புக்கு காரணமாகியுள்ளது. அங்கு சுமார் 33% மக்கள் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர். அதில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் குறைந்தவர்கள். சுமார் 82% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ANC 41% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 1994ம் ஆண்டுக்கு பின் இம்முறையே ANC 50% க்கும் குறைவான […]

1 22 23 24 25 26 329