சர்வதேச வின் நிலையத்துக்கு (IIS, International Space Station) இரண்டு விண்வெளி வீரர்களை ஏற்றி சென்ற ரஷ்யாவின் சோயூஸ் (Soyuz) ஏவுகணை இயந்திர கோளாறு காரணமாக பயணத்தை தொடராது வீழ்ந்துள்ளது. அதில் பயணித்த இரண்டு வீரர்களும் தப்பி உள்ளனர். . Alesey Ovchiin என்ற ரஷ்ய விண்வெளி வீரரும், Nick Haque என்ற அமெரிக்க வீரருமே இவ்வாறு விபத்தில் இருந்து தப்பியவர்கள். . Soyuz கலம் ஏவப்படத்தில் இருந்து முதல் 90 செக்கன்கள் வரை குளறுபடிகள் எதுவும் […]
அமெரிக்காவின் Dow Johns (30 blue-chip stocks) பங்கு சுட்டி இன்று புதன்கிழமை 831 புள்ளிகளால், அல்லது 3.15% ஆல், வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வருடம் இடம்பெற்ற இரண்டாவது பெரிய வீழ்ச்சி இதுவாகும். கடந்த பெப்ருவரி 5 ஆம் திகதி DOW 1,100 புள்ளிகளால் வீழ்ந்திருந்தது. . இன்று கூடவே S&P 500 பங்கு சுட்டியும் 3.3% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. தொழிநுட்ப நிறுவனங்களின் பங்குகளை பெருமளவில் கையாளும் NASDAQ பங்குச்சந்தையும் 4% க்கு மேலால் வீழ்ச்சி […]
தமிழ்நாட்டில் இடம்பெறும் அகழ்வாய்வுகளுக்கு இந்திய மத்திய அரசு இடராக இருக்கிறதா என்று கேட்க வைக்கின்றன மத்திய அரசின் அண்மைக்கால நடவடிக்கைகள். . வைகை நதி கரையோரம், மதுரைக்கு தென்கிழக்கே, உள்ள கீழடி என்ற இடத்தில் சுமார் 2200 வருடங்களுக்கு முற்பட்ட குடியிருப்பு ஒன்று இருந்தமை அறியப்பட்டது. சுமார் 4 வருடங்களுக்கு முன் இவ்விடத்தை அகழ்வாய்வு செய்யும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. ஆனால் பின்னர் நிதிகளை முடக்குவதன் மூலம் அகழ்வு வேலைகள் இழுத்தடிக்கப்பட்டன. . 2016 ஆன் ஆண்டில் […]
ஐ. நா. வுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி கேலி (Nikki Haley) இந்த வருட முடிவில் தனது பதவியை விட்டு நீங்குவதாக இன்று செவ்வாய் கூறியுள்ளார். அவரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் நிக்கியின் பதவிக்கு வேறு ஒருவரை விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளார். . 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த பதவியை ஆரம்பித்த நிக்கி, இரண்டு வருடத்துள் தான் விலகுவதற்கான காரணத்தை கூறவில்லை. . நிக்கி தனது பதவி விலகலை தனது […]
அண்மையில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இன்டர்போல் தலைவர் சில நாட்களாக காணாமல் போயிருந்தார். அவர் தற்போது தனது இன்டர்போல் தலைவர் பதவியை விலகுவதாக கூறியுள்ளார். அதை அவர் சீனாவின் கட்டுபாட்டில் இருக்கையிலேயே கூறியுள்ளார். . சீனாவின் புதிய ஜனாதிபதி Xi Jingping காலத்தில் பல முன்னாள் உயர் அதிகாரிகள் மீது ஊழல் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின் பல அதிகாரிகள் சிறைக்கும் சென்றுள்ளனர். அவ்வகை விசாரணை ஒன்றே Meng Hongwei என்ற இன்டர்போல் தலைவர் மீதும் […]
துருக்கியின் (Turkey) தலைநகர் இஸ்தான்புல்லில் (Istanbul) உள்ள சவுதியின் தூதரகத்துள் வைத்து சவுதி பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. Jamal Khasgoggi என்ற அமெரிக்காவின் The Washington Post பதிக்கையாளரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம். . சவுதியை சார்ந்த இந்த பத்திரிகையாளர் தற்போதைய சவுதி அரசுக்கு பாதகமான கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். அதனால் சவுதி அரசின் மிரட்டலுக்கு உள்ளான இவர், 2017 ஆம் ஆண்டு முதல் சவுதி செல்லாது அமெரிக்காவிலேயே தங்கி […]
தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ள முன்னாள் அமெரிக்க இராணுவ இரகசியம் ஒன்று வியட்னாம் யுத்த காலத்திலும் அமெரிக்க படைகள் அணுக்குண்டு வீச முயற்சி செய்திருந்ததாம். அப்போது அங்கு நிலைகொண்டிருந்த William Westmoreland என்ற அமெரிக்க இராணுவ ஜெனரலின் இந்த இரகசிய முயற்சியை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி Lyndon Johnson உடனடியாக தடுத்துள்ளார். . 1968 ஆம் ஆண்டில் தென் வியட்னாமில் நிலைகொண்டிருந்த ஜெனரல் William Westmoreland அமெரிக்க ஜனதிபதிக்கு தெரிவிக்காமல் சில அணுகுண்டுகளை தென் வியட்னாமுக்கு நகர்த்த முயன்றுள்ளார். […]
தற்போதைய இன்ரபோல் தலைவர் (Interpol president) காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. Meng Hongwei என்ற சீனாவை சார்ந்த இவர் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போயுள்ள விபரத்தை அவரின் மனைவி இன்ரபோலுக்கு தெரிவித்து உள்ளார். . சீன நாட்டவரான மனைவி முதலில் சீனாவிடம் கணவனின் தொலைவு தொடர்பாக கூறி இருந்தாரா என்பதுவும், அவ்வாறு செய்யாவிடின் ஏன் அவர் சீனாவுக்கு முதலில் தொலைவை அறிவிக்கவில்லை என்பதுவும் தற்போது வெளியிடப்படவில்லை. . […]
ரஷ்ய ஜனாதிபதி பூட்டினும், இந்திய பிரதமர் மோதியும் இன்று வெள்ளி ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கான S-400 ஏவுகணை கொள்வனவில் ஒப்பம் இட்டுள்ளனர். இந்த ஏவுகணை கொள்வனவின் பெறுமதி சுமார் $5 பில்லியன் ஆகும். . பூட்டின் வியாழன் இந்தியா பயணித்திருந்தார். அக்காலத்திலேயே இந்த நிலத்தில் இருந்து வானத்துக்கான S-400 ஏவுகணை கொள்வனவு ஒப்பமிடப்பட்டு இருந்தது. இந்த ஏவுகணை எதிரியின் யுத்த விமானங்களை மட்டுமன்றி cruise, ballistic ஏவுகணை போன்ற மற்றைய பல ஏவுகணைகளையும் தங்கி அழிக்கக்கூடியது. இந்த ஏவுகணை […]
இந்தியாவின் பிரபல தனியார் வங்கியான ICICI Bank (Industrial Credit and Investment Corporation of India) CEO பதிவியில் இருந்த Chanda Kochchar என்பவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவர் மீது அண்மையில் இடம்பெற்ற ஊழல் விசாரணை ஒன்றின் பின்னரே பதவி பறிக்கப்பட்டுள்ளது. . மேற்படி பெண் ICICI வங்கியின் CEO மற்றும் Managing Director ஆக பதவி வகித்த காலத்தில் அந்த வாங்கி Videocon Group என்ற நிறுவனத்துக்கு வழங்கிய கடன் தொடர்பாக ஊழல் விசாரணை […]