தாய்வானில் இன்று ஞாயிறு மாலை 4:50 மணியளவில் கடுகதி ரயில் ஒன்று தடம்புரண்டு உள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 18 பேர் பலியாகியும், 170 காயமடைந்தும் உள்ளனர். . இந்த விபத்து Taipei நகரில் இருந்து சுமார் 70 km தூரத்தில் உள்ள Xinma என்ற ரயில் நிலையத்து அருகில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில் 366 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. . மேற்படி ரயில் 6 வருடங்களுக்கு முன்னரே சேவையில் இணைந்ததாகவும், விபத்து இடம்பெற்ற நேரத்தில் காலநிலை […]
வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் இடம்பெறவுள்ள மெகா மில்லியன் (Mega Million) குலுக்கலுக்கான முதல் பரிசு தொகை $1, 600,000,000 ஆக்கவுள்ளது. நேற்று வெள்ளி இடம்பெற்ற குலுக்கலில் எவரும் முதல் பரிசுக்கான எண்களை (15, 23, 53, 65, 70, Mega Ball 7) தெரிவு செய்யாதவிடத்து இந்த கிழமை பரிசு $1.6 ஆக உயர்ந்துள்ளது. . இந்த குலுக்கல் பரிசு வழங்கப்படும் போது இதுவே உலகின் மிகப்பெரிய குலுக்கல் பரிசாக இருக்கும். இதற்கு முன், 2016 ஆம் […]
துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் (Istanbul) உள்ள சவுதி தூதுவரகத்தில் வைத்து பத்திரிகையாளர் ஜமால் கசோகி (Jamal Khashoggi) மரணமானதை சவுதி அரசு சற்றுமுன் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனாலும் கசோகி எவ்வாறு இறந்தார் என்பதையோ, அல்லது அவரின் உடல் எங்கே உள்ளது என்பதையோ சவுதி தெரிவிக்கவில்லை. . கசோகியின் மரணம் சவுதி தூதுவரகத்தில் நிகழ்ந்தது என்பதை துருக்கி திடமாக கூறி இருந்திருந்தும், அதை சவுதி இதுவரை மறுத்து வந்திருந்தது. கசோகி தூதுவரகத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்று உத்தியோகபூர்வமாக கூறியும் இருந்தது. […]
உள்ளுர் நேரப்படி வெள்ளி மாலை 6:30 மணியளவில் இந்தியாவின் புஞ்சாப் (Punjab) மாநிலத்தில் உள்ள Amritsar நகரில் இடம்பெற்ற ரயில் விபத்து ஒன்றுக்கு குறைந்தது 60 பேர் பலியாகியும், மேலும் 100 பேர் வரை காயப்பட்டும் உள்ளனர். . மேற்படி மக்கள் ரயில் பாதை வழியே நின்று பத்து தலை இராவணனை எரிக்கும் Dusshera என்ற இந்து பண்டிகையையும், அப்போது நடாத்தப்பட்ட வாணவேடிக்கையையும் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே அவ்வழியே வந்த ரயில் இவர்களை மோதி உள்ளது. . கேளிக்கைகளை […]
சீனாவின் Hunan மாகாணத்தில் கடன் தொல்லை காரணமாகவும், காப்புறுதி பணம் பெறும் நோக்கிலும் He என்ற கணவன் தனது பொய் மரண நாடகத்தை நடாத்தி உள்ளார். கணவனின் மரணம் உண்மை என்று கருதிய மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் குளம் ஒன்றுள் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளார். . சுமார் $14,400 கடனில் இருந்த கணவன் அந்த கடனில் இருந்து தப்பிக்கொள்ளவும், தனது மனைவி பிள்ளைகளுக்கு காப்புறுதி பணம் கிடைக்கும் என்று கணக்கிட்டும் விபத்து நாடகம் ஒன்றை நடாத்தி […]
1971 ஆம் ஆண்டில் இந்திய குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக 5.2 பிள்ளைகள் பிறந்துள்ளனர். ஆனால் 2016 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றுக்கு சராசரியா 2.3 பிள்ளைகள் மட்டுமே பிறந்துள்ளன. அதேவேளை இந்தியாவின் பெரும் நகர்களில் குடும்பம் ஒன்றுக்கான பிறப்பு விகிதம் 2.1 க்கும் குறைவாகவே உள்ளது. ஒரு நாட்டின் சனத்தொகை மாறாமல் இருக்க அந்நாட்டில் சராசரி பிறப்பு விகிதம் 2.1 ஆக இருத்தல் அவசியம். . மிகையான பிறப்பு விகிதம் இருந்த காரணத்தாலேயே 1971 ஆம் ஆண்டில் […]
அமெரிக்கா தனது இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை ஜெருசலேத்துக்கு நகர்த்தியது போல, தானும் அஸ்ரேலியாவின் இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை ஜெருசலேத்துக்கு நகர்த்த எண்ணத்தில் கொண்டுள்ளதாக இன்று செவ்வாய் கூறியுள்ளார் அஸ்ரேலியாவின் பிரதமர் Scoot Morrison. . இந்த திடீர் நாடகத்துக்கு காரணம் முன்னாள் Liberal கட்சி பிரதமர் Malcolm Turnbull இதுவரை பிரதிநியாக இருந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடாத்தப்பட உள்ளதே. சிட்னி நகர் பகுதில் உள்ள Wentworth என்ற இந்த தொகுதியில் வரும் சனிக்கிழமை, 20 ஆம் திகதி, இடைத்தேர்தல் நடைபெற […]
Microsoft என்ற பலம் வாய்ந்த software நிறுவனத்தை Bill Gates உடன் இணைந்து உருவாக்கிய Paul Allen என்பவர் இன்று தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார். Non-Hodgkin’s lymphoma என்ற வகை புற்று நோய்க்கே இவர் பலியாகினார். . 1975 ஆம் ஆண்டு இவரும், Bill Gates உம் இணைந்து IBM நிறுவனத்துக்கு operating system வழங்கும் உரிமையை பெற்று இருந்தனர். அப்போது அவர்களிடம் அவ்வகை operating system இருந்திருக்கவில்லை. அதனால் இவர்கள் Tim Paterson […]
அண்மைக்காலம் வரை மேற்கின் விருப்பத்துக்குரிய மத்தியகிழக்கு நாடாக இருந்த சவுதி அரேபியா தற்போது மேற்கு நாட்டு நிறுவனங்களால் கைவிடப்பட்டு வருகிறது. துருக்கியில் உள்ள சவுதி தூதுவராகம் சென்ற Jamal Khashoggi என்ற பத்திரிகையாளர் தொலைவானதே இதற்கு காரணம். . இந்த மாதம் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை சவுதி அரேபியாவில் பெரியதோர் முதலீட்டாளர் மாநாடு இடம்பெறவிருந்தது. சவுதி அரசினால் நடாத்தப்படவிருந்த இந்த அமர்வில் பல பெரிய நிறுவனங்கள் பங்குகொள்ள இருந்தன. இந்த […]
அமெரிக்க ரம்ப் அரசின் பிரமுகரான Zabiullah Mujahid கடந்த கிழமை கட்டாரில் (Qatar) நேரடியாக சந்தித்து பேசியுள்ளனர். அமெரிக்கா தலைமையில், நியூயார்கில் இடம்பெற்ற 9/11 தாக்குதலுக்கு பின்னர், ஆப்கானித்தானில் தொடுக்கப்பட்ட யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவரவே இந்த முயற்சி ஆகும். . சுமார் 17 வருடங்களாக தலிபானுடன் போரிட்டு, அவர்களை அழிக்க முடியாமலும், ஆப்கானிஸ்தானில் ஒரு அமைதியான ஆட்சியை ஏற்படுத்த முடியாத நிலையிலும் உள்ள அமெரிக்கா தற்போது தலிபானுடன் நேரடியாக பேச முனைகிறது. . அமெரிக்கா தரப்பில் […]