உலகில் உள்ள 174 நாடுகளில், குறைந்தது 36 நாடுகள் பிறப்பு மூலமான குடியுரிமையை (citizenship) வழங்குகின்றன. அதாவது இந்த நாடுகளில் பிறக்கும் குழந்தை ஒன்று, அக்குழந்தையின் பெற்றார் அந்நாட்டு குடியுரிமை அற்றவர்கள் ஆகினும், அந்த நாட்டு குடியுரிமையை பெறுகிறது. அந்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஆனால் அந்த முறையை மாற்றி அமைக்க முனைகிறார் ரம்ப். . அமெரிக்கா ஒரு செல்வந்த நாடாக இருப்பதால், மற்றைய நாட்டவர் இந்த சட்டத்தை தம் நலன்களுக்காக பயன்படுத்துவதும் உண்டு. சிலர் படிப்புக்கான […]
ஜெர்மன் நாட்டின் அதிபர் அங்கெலா மேர்க்கெல் (Angela Merkel) தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இன்று திங்கள் கூறியுள்ளார். அவர் தனது தற்போதைய பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டில் முடிவடையும்வரை பதிவியில் இருக்கவுள்ளதாகவும், ஆனால் அதன் பின் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் கூறியுள்ளார். . அண்மைக்கால தேர்தல்களில் அவரின் தலைமையிலான கூட்டணி பலத்த தோல்விகளை சந்தித்து வருவதே இவரின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்நாட்டின் மத்திய மாநிலம் ஒன்றில் சுமார் 5 […]
இந்தோனேசியாவில் Lion Air விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்துள்ளது. விபத்துக்கு உள்ளன இந்த விமானத்தில் 181 பயணிகளும், 2 விமானிகளும், 5 பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான இந்த விமானம் 2017 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த Boeing 737 MAX 8 வகை நவீன விமானமாகும். . தலைநகர் Jakarta விமான நிலையத்தில் இருந்து திங்கள் காலை 6:20 மணிக்கு Pangkal Pinang நோக்கி பயணித்த இந்த விமானம் (Flight JT-610) […]
அமெரிக்காவின் Pittsburgh நகரில் உள்ள யூதர்களின் ஆலயம் ஒன்றில் (synagogue) இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு 11 பேர் பலியாகியும், மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்தோருள் 4 போலீசாரும், சந்தேக நபரும் அடங்குவர். . இந்த தாக்குதலை செய்தவர் என்று கருதப்படும் Robert Bowers, வயது 46, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த தாக்குதலை AR-15 என்ற இராணுவ வகை துப்பாக்கி கொண்டே நிகழ்த்தி உள்ளார். அப்பொழுது இவரிடம் வேறு இரண்டு […]
அமெரிக்காவின் Democratic கட்சி தலைவர்களுக்கு 14 குழாய் குண்டுகளை தபால் மூலம் அனுப்பிய அமெரிக்கர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் வாகனமும் கைப்பற்றப்பட்டு உள்ளது. Florida மாநிலத்தில் உள்ள Plantation என்ற நகரிலேயே இந்த கைது இடம்பெற்று உள்ளது. . கைது செய்யப்பட்டுள்ள, 56 வயதுடைய, Cesar Sayoc என்பவர் ஒரு ரம்ப் ஆதரவாளர். ரம்பின் பிரச்சார கூட்டங்கள் பலவற்றுக்கு சென்ற இவர், அந்த இடங்களில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை Internet எங்கும் பதித்துள்ளார். அவரின் […]
சிரியாவில் நிலைகொண்டுள்ள ரஷ்ய படைகளின் Hemeimeem தளத்தை அமெரிக்கா அடையாளம் அறியப்படாத ஆளில்லா விமானங்களை திசை திருப்பி தாக்க முனைந்தன என்று ரஷ்யாவின் உதவி பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். சீனாவின் பெய்ஜிங் நகர் சென்றுள்ள ரஷ்ய உதவி பாதுகாப்பு அமைச்சர் இன்று இந்த செய்தியை வெளியிட்டு உள்ளார். . அடையாளம் அறியப்படாதோரால் ஏவப்பட்ட 13 ஆளில்லா விமானங்களை (drones) அப்போது Mediterranean கடல் மேலே பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் Poseidon-8 என்ற இராணுவ விமானமே, தனது manual கட்டுப்பாட்டுள் […]
இன்று புதன்கிழமை அமெரிக்காவின் ஏழு Democratic கட்சி சார்பு அரசியவாதிகளின் முகவரிகளுக்கு ஏழு குழாய் குண்டுகள் (pipe bombs) அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் இடைவழியில் பாதுகாப்பு படைகளால் தடுக்கப்பட்டுள்ளன. . அந்த 7 குழாய் குண்டுகளும் பின்வருவோரின் முகவரிகளை அனுப்பப்பட்டு உள்ளன: 1) முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் Washington DC முகவரி, 2) ஹிலாரி கிளின்ரனின் நியூ யார்க் முகவரி , 3) ஒபாமா அரசின் CIA director John Brennanனின் Washington DCயில் உள்ள […]
இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான CBI யின் (Central Bureau of Investigation) முதலாவது அதிகாரியான director Alok Kumar Verma என்பவரும், இரண்டாவது முக்கிய அதிகாரியான Rakesh Asthana என்பவரும் இன்று புதன் கிழமை (அக்ரோபர் 23) மோதி அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். Nageshwar Rao என்பவர் தற்போது director ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். . பதவி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கும் இடையே வலுத்து வந்த முரண்பாடுகளே அவர்களின் பதவி நீக்கலுக்கு […]
அஸ்ரேலியாவை தளமாக கொண்ட Lonely Planet என்ற உல்லாச பயணத்துறை புத்தகங்கள், வழிகாட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனம் 2019 ஆண்டில் செல்லவேண்டிய முதலாவது நாடாக இலங்கையை தெரிவு செய்துள்ளது. இதனால் இலங்கைக்கான உல்லாச பயணிகள் வரவு 2019 ஆம் ஆண்டில் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. . Lonely Planet இலங்கையை தெரிவு செய்தமைக்கு காரணங்களாக அழகிய கடற்கரைகள், சிறந்த உணவு வகைகள், தாராளமான இயற்கை, அனுராதபுரம், சிகிரியா உட்பட்ட புராதன நிலையங்கள், கணிசமான விலங்குகள், […]
1987 ஆம் ஆண்டு அமெரிக்காவும், ரஷ்யாவும் செய்துகொண்ட Intermediate Nuclear Forces (INF) இணக்கத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் தெரிவித்து உள்ளார். . றேகனும் (Reagan), கர்பசோவும் (Gorbachev) செய்து கொண்ட இந்த உடன்படிக்கையின்படி அமெரிக்காவோ அல்லது ரஷ்யாவோ 500 km தூரம் முதல் 5,500 km தூரம் வரை பாயக்கூடிய, நிலத்தில் இருந்து ஏவப்படும் நடுத்தர அணு ஏவுகணைகளை தயாரிக்க முடியாது. இந்த உடன்படிக்கை குறிப்பாக ஐரோப்பாவை பாதுகாக்கும் நோக்கிலேயே செய்யப்பட்டது. […]