அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில் தற்போது இடம்பெறும் காட்டு தீக்கு இதுவரை குறைந்தது 44 பேர் பலியாகி உள்ளதாகவும், குறைந்தது 228 பேரின் இருப்பிடம் அறியப்படாது உள்ளதாகவும் கூறப்படுகிறது. Paradise என்ற இடத்து தீக்கு மட்டும் குறைத்து 6,800 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளன. . இம்மாநிலத்தில் இரண்டு இடங்களில் தீ பரவுகின்றன. Paradaise என்ற இடத்தில் பரவும் Camp Fire என்ற பெயர் கொண்ட தீ இதுவரை கலிபோனியாவில் இடம்பெற்ற அனைத்து தீகளிலும் பெரியது […]
துருக்கியில் உள்ள சவுதி தூதுவரகத்தின் உள்ளே வைத்து ஜமால் கசோகி (Jamal Khasoggi) என்பவரை படுகொலை செய்வதற்கு முன்னர், ஈரானிய உயர் அதிகாரிகளையும் படுகொலை செய்து, ஈரானின் பொருளாதாரத்தையும் அழிக்க சவுதி ஆலோசனை செய்திருந்ததாக அமெரிக்காவின் New York Times பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டு உள்ளது. . ஈரானின் Quds Force என்ற படையணியின் தலைவரான மேஜர் ஜெனரல் Qassem Soleimani என்பவரும் இந்த தாக்குதல் திட்டத்தின் குறியாக இருந்துள்ளார். இவரின் கீழான படையணி சிரியாவின் […]
போர்னியோ (Borneo) தீவில் உள்ள குகை ஒன்றுள் சுமார் 40,000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட ஓவியம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது இதுவே அறியப்பட்ட அதி பழைய ஓவியமாகும். . புரூணை (Brunei) என்ற நாட்டையும், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளின் பகுதிகளையும் கொண்ட போர்னியோ என்ற தீவில் உள்ள மலைகளுக்கு கீழான குகை ஒன்றிலேயே இந்த ஓவியம் காணப்பட்டுள்ளது. தென்னாசிய வகை மாடு ஒன்றின் ஓவியமே சுமார் 40,000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்டது என்று […]
அமெரிக்காவில் இன்று இடம்பெற்ற இடைக்கால (Midterm) தேர்தலில் ரம்பின் Republican கட்சி மேலும் 2 Senate ஆசனங்களை பறித்து Senate பெரும்பான்மையை (51/100) மீண்டும் வென்றுள்ளது. அனால் Democratic கட்சி மேலும் 26 House ஆசங்களை பறித்து House (House of Representative) பெரும்பான்மையை (219/435) வென்றுள்ளது. இன்றுவரை Senate, House இரண்டும் ரம்பின் கட்சியிடமே இருந்தன. மொத்தம் 100 ஆசனங்கள் கொண்ட senate மற்றும் 435 ஆசனங்கள் கொண்ட House இரண்டையும் சேர்த்து Congress என்று […]
ஏற்கனவே அறிவித்தபடி இன்று முதல் அமெரிக்கா ஈரான் மீதான முழு அளவிலான பொருளாதார தடையை நடைமுறை செய்துள்ளது. ஆனாலும் 8 நாடுகளுக்கு ஈரானின் எண்ணெய்யை மேலும் 180 நாட்களுக்கு கொள்வனவு செய்ய விதிவிலக்கையும் அளித்துள்ளது அமெரிக்கா. . சீனா, இந்தியா, தாய்வான், ஜப்பான், தென் கொரியா, துருக்கி, கிரேக்கம், இத்தாலி ஆகிய நாடுகளுக்கே மேலும் 180 நாட்களுக்கு ஈரானின் எண்ணெயை கொள்வனவு செய்ய அனுமதித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. . ஆனால் சீனா அவ்வாறான ஒரு விதிவிலக்கை கேட்டிருக்கவில்லை. […]
வரும் செய்வாய்க்கிழமை, நவம்பர் 6 ஆம் திகதி, அமெரிக்காவின் midterm என்ற இடைக்கால தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் ரம்பின் கட்சி சில தோல்விகளை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . அமெரிக்காவில் நாலு வருடங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவது போல், நாலு வருடங்களுக்கு ஒரு தடவை, முன்னைய ஜனாதிபதி தேர்தலில் இருந்து இரண்டு வருடங்களின் பின், midterm என்ற இடைக்கால தேர்தல் இடம்பெறும். இந்த இடைக்கால தேர்தலில் அனைத்து House of Representatives ஆசனங்களும், […]
அமெரிக்காவின் நியூ யார்கில் (New York) நகரில் உள்ள ஆறு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட சவுதி குடியுரிமை கொண்ட இரண்டு சகோதரிகளின் உடல்கள் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன. துருக்கியில் உள்ள சவுதி தூதுவரகத்தில் வைத்து சவுதி பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட இக்காலத்தில், இந்த சகோதரிகளின் மரணங்களும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளன. . அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நியூ யார்க் பகுதில் உள்ள Hudson River என்ற ஆற்றில் இருந்து இரண்டு பெண்களின் உடல்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. […]
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சீனாவின் சொங்சிங் (ChongQing) நகரில், Yangtze ஆற்றுக்கு மேலாக செல்லும் பாலம் சென்றுகொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்று கீழே உள்ள ஆற்றுள் வீந்திருந்தது. பயணி பெண் ஒருவர் சாரதியை தாக்கிய போது, சாரதி கட்டுப்பாட்டை இழக்க, பஸ் 50 மீட்டர் கீழே உள்ள ஆற்றுள் வீழ்ந்துள்ளது. பஸ்சில் இருந்த 15 பெரும் பலியாகி உள்ளனர். . விபத்து இடம்பெற்ற நாட்களில் அதிகாரிகளுக்கு விபத்துக்கான காரணம் என்னவென்று தெரிந்திருக்கவில்லை. காரணம் அறியாத […]
ஆறு மாதங்களின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ரம்பும், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடி உள்ளனர். . சீனா மீது தடைகளை விதித்து, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரி விதித்து ஒரு வர்த்தக யுத்தத்தை ஆரம்பித்து இருந்தார் ரம்ப். சீனா வேறுவழி இன்றி தனது கூற்றுப்படி செயல்படும் என்று கருதியும் இருந்தார் அவர். . ஆனால் சீனா பதிலுக்கு தானும் புதிய இறக்குமதி வரிகளை அமெரிக்க […]
ஆபிரிக்க நாடான மலாவியில் (Malawi) நிறுவப்படும் காந்தி சிலைக்கு கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. அந்நாட்டு குழு ஒன்று (Gandhi Must Fall) கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவ்விடத்து நீதிமன்றம் சிலைக்கான கட்டுமான வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. . சுமார் $10 மில்லியன் செலவில் மாநாட்டு மண்டபம் உட்பட ஒரு தொகுதி கட்டிடங்களை மலாவியின் Blantyre என்ற நகரில் கட்ட இந்தியா இணங்கி இருந்தது. இவ்விடத்தில் ஒரு காந்தி சிலையையும் நிர்மாணிக்க இந்திய நடவடிக்கைகள் எடுத்திருந்தது. . ஆனால் […]