இணக்கம் இன்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெறியேறுமாயின் அது பிரித்தானியாவை பொருளாதார மந்த நிலைக்கு (recession) தள்ளலாம் என்று எச்சரித்துள்ளது பிரித்தானிய மத்திய வங்கி (Bank of England). . இந்த வங்கியின் கணிப்பின்படி இணக்கம் இன்றிய பிரிவு பிரித்தானியாவின் பொருளாதாரத்தை சுமார் 8% ஆல் குறைக்கலாம். அத்துடன் பிரித்தானியாவில் உள்ள வீடுகளின் விலை சுமார் 33% ஆல் குறையலாம் என்றும் கூறியுள்ளது Bank of England. அதேவேளை பிரித்தானியாவின் நாணயமான pound சுமார் 25% […]
தாய்வானில் 24 ஆம் திகதி இடம்பெற்ற கிராம, நகர, மாநகர தேர்தல்களின் முடிவுகள் அங்குள்ள ஆளும் கட்சியான DPP (Democratic Progressive Party) க்கு மட்டுமன்றி அமெரிக்காவுக்கும் பெரும் பாதகமான முடிவாக அமைத்துள்ளது. . 2014 ஆம் ஆண்டு வரை தாய்வானில் ஆட்சியில் இருந்த KMT கட்சி, தாய்வான் சீனாவின் அங்கம் என்பதை ஏற்று, மெதுவாக சீனாவுடன் உறவை புதிப்பித்து வந்திருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்திருந்த DPP கட்சி சீனாவுடனான உறவுகளை முறித்து, […]
ரஷ்யாவுக்கும், யுக்கிரேனுக்கும் இடையில் மீண்டும் முறுகல் நிலை வலுவடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை யுக்கிரேனுக்கு சொந்தமான 3 கப்பல்களை ரஷ்யா தடுத்து வைத்தமை காரணமாகவே முறுகல் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. தமது நீர்பரப்புள் அந்த கப்பல்கள் நுழைந்ததாலேயே தாம் அவற்றை கைப்பாற்றியதாக ரஷ்யா கூறியுள்ளது. . ஞாயிற்றுக்கிழமை யுக்கிரேனின் 3 கப்பல்களும் கருங்கக்கடல் (Black Sea) துறையான Odesa வில் இருந்து Azov கடலில் (Sea of Azov) உள்ள துறையான Mariupol நோக்கி செல்கையிலேயே இந்த முரண்பாடு உருவாகியது. […]
John Allen Chau என்ற 27 வயது அமெரிக்கரை அந்தமான் தீவுகளில் ஒன்றான North Sentinel தீவில் வாழும் ஆதிவாசிகள் அம்புகளால் தாக்கி கொலை செய்துள்ளார். Sentinelese என்று வெளியாரால் அழைக்கப்படும் இந்த ஆதிவாசிகள் வெளியார் அங்கு செல்வதை விரும்பவில்லை. . John Chau மேற்படி தீவை அடைய இந்த மாதம் 14 ஆம் திகதி முனைந்துள்ளார். முயற்சி பலிக்காதவிடத்து, இரு தினங்களின் பின் மீண்டும் அத்தீவு செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போதே இவர் அம்புகளால் கொலை […]
அண்மையில் மரணித்த திமிங்கிலம் ஒன்று இந்தோனேசியா கரையில் ஒதுங்கி உள்ளது. உருக்குலைந்த அந்த திமிங்கிலத்து வயிற்றுள் சிறியனவும், பெரியனவுமாக சுமார் 1000 பிளாஸ்டிக் பொருட்கள் இருந்துள்ளமை அறியப்பட்டுள்ளது. . அந்த திமிங்கிலம் மரணிக்க அது உட்கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள்தான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்படாது இருப்பினும், அந்த அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒரு திமிங்கிலத்துள் இருப்பது மனிதத்தின் வளர்ச்சியால் உருவாகும் பாரதூர பக்கவிளைவுகளை காட்டியுள்ளது. . சுமார் 9.5 மீட்டர் நீளமான இந்த திமிங்கிலத்துள் (sperm whale) இருந்த […]
பிரபல ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான Nissan Motor Corporation தின் CEO மற்றும் Chairman பதவிகளை வகித்த Carlos Ghosn என்பவர் ஜப்பானிய அதிகாரிகளால் இன்று திங்கள் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளன. . பிரெஞ்சு வாகன நிறுவனமான Renault 1999 ஆண்டில் Nissan நிறுவனத்தில் பெரும் முதலீட்டை செய்திருந்தது. Ghosn அப்போதே Nissan நிறுவனத்தின் தலைமை பதவியை அடைந்திருந்தார். 2005 ஆம் ஆண்டில் அவர் Renault […]
நேற்று சனிக்கிழமையும், இன்று ஞாயிற்றுக்கிழமையும் பப்புவா நியூ கினியில் (Papua New Guinea) இடம்பெற்ற APEC (Asia-Pacific Economic Cooperation) அமர்வு இறுதி இணக்கம் இன்றி முடிவடைந்துள்ளது. 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட APEC இந்த வருடமே முதல் முறையாக இறுதி இணக்கம் (joint statement) இன்றி முடிந்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இடம்பெறும் வர்த்தக யுத்தமே இந்த இணக்கம் இன்மைக்கு காரணம். . ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 19 நாடுகளும், தாய்வான், ஹாங் காங் ஆகிய […]
தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவின் நீர்மூழ்கியான ARA San Juan 2017 ஆம் ஆண்டு 15 ஆம் திகதி முதல் தொடர்புகள் எதுவும் இன்றி தொலைந்து இருந்தது. ஒரு வருடத்தின் பின், தற்போது அந்த நீர்மூழ்கியின் இருப்பிடம் அறியப்பட்டுள்ளது. . இந்த நீர்மூழ்கி தொலைந்தவுடன் பல நாடுகள் தமது படைகளை அனுப்பி தேடுதல் பணியில் ஈடுபட்டன. நீர்மூழ்கியுள் ஒரு கிழமைக்கு சுவாசத்துக்கு போதுமான வளி இருக்கும் என்பதால் காப்பாற்றும் முயற்சிகள் இடம்பெற்றன. ஆனால் பல கிழமைகளில் பின், […]
கம்போடியா (Cambodia) என்ற நாட்டுக்கு வரும் உல்லாச பயணிகளுக்கு சிறு பொருட்களை விற்பனை செய்யும் 14 வயதுடைய Thaksin என்ற பையன் 15 மொழிகளில் பேசி உல்லாச பயணிகளை கவர்ந்து வருகிறான். அவனின் 11 வயது சகோதரன் 11 மொழிகளில் உரையாடும் திறமையை பெற்றுள்ளான். இவர்கள் இருவரும் உல்லாச பயணிகளுடன் உரையாடுவதன் மூலமே பிற மொழிகளை கற்றுள்ளனர். . Thaksin தனது தாய் மொழியுடன், மலேய் (மலேசியா), Mandarin (சீனா), ஜேர்மன், பிரென்ச், தாய் (தாய்லாந்து), ஸ்பானிஸ் […]
கடந்த வெள்ளிக்கிழமை வட அத்திலாந்திக் கடலுக்கு மேலாக அடையாளம் காணப்படாத விண்கலம் (UFO) ஒன்று பறந்ததா என்று மீண்டும் கேள்வி எழுந்துள்ளது. அந்த வான்பரப்பில் அப்போது விமானங்களை செலுத்திய விமானிகள் சிலரின் செய்திகளே இந்த வியப்பை மீண்டும் தூண்டி உள்ளது. . கடந்த வெள்ளிக்கிழமை கனடாவின் மொன்றியால் (Montreal) நகரில் இருந்து லண்டன் சென்ற British Airways Flight BA94 இன் விமானி இடைவழியில் ஒரு பிரகாசமான ஒளியை கண்டுள்ளார். அவர் உடனே நில விமான தொடர்பு […]