ஆக்கிரமித்த 3,138 ஏக்கர் நிலத்தை அபகரிக்கிறது இஸ்ரேல்

ஆக்கிரமித்த 3,138 ஏக்கர் நிலத்தை அபகரிக்கிறது இஸ்ரேல்

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனரின் West Bank நிலத்தில் 3,138 ஏக்கரை தனது நிலமாக்க இன்று புதன் நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்ரேல் தனக்கு சாதகமான இருக்கும் வகையில் தானே நடைமுறை செய்த சட்டப்படி ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனரின் தனியார் நிலங்களை இஸ்ரேல் தனது இராணுவத்தின் Civil Administration என்ற பெயரின் கீழ் வகைப்படுத்தினால் அந்த நிலங்களின் பலஸ்தீன உரிமையாளர் தமது உரிமைகளை உடனடியாக இழப்பர். மேற்படி நிலங்களில் இஸ்ரேல் பின்னர் யூதர்களை குடியமர்த்தும். Jericho என்ற பலஸ்தீனர் செறிந்து வாழும் […]

SCO அமைப்பை மெல்ல கைவிடுகிறார் பிரதமர் மோதி?

SCO அமைப்பை மெல்ல கைவிடுகிறார் பிரதமர் மோதி?

Shanghai Cooperation Organization (SCO) அமர்வு இன்று புதன் Kazakhstan நாட்டின் Astana நகரில் ஆரம்பமாகிறது. இதில் ரஷ்யாவின் பூட்டின், சீனாவின் சீ ஆகியோர் நேரடியாக பங்கொண்டாலும் இந்திய பிரதமர் மோதி இந்த அமர்வை தவிர்த்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவே SCO அமர்வை தலைமைதாங்கி செய்திருந்தாலும், அமர்வு இணையம் மூலமே நடைபெற்றது. அதனால் பூட்டின், சீ இந்தியா செல்லவேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. 1996ம் ஆண்டு முதல் ரஷ்யா, சீனா உட்பட 5 நாடுகள் ஆரம்பித்து Shanghai 5 […]

நெரிசல் மரண தொகை 121 ஆக உயர்வு, பாபா தலைமறைவு

நெரிசல் மரண தொகை 121 ஆக உயர்வு, பாபா தலைமறைவு

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள Hathras மாவட்டத்தில் செவ்வாய் இடம்பெற்ற இந்து மத நிகழ்வொன்றில் ஏற்பட்ட நெரிசலுக்கு பலியானோர் தொகை 121 ஆக உயர்ந்துள்ளது.  மரணித்தோரில் 112 பேர் பெண்கள் என்றும், 7 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த பேரழிவின் பின்னர் Bhole Baba என்ற மேற்படி நிகழ்வின் போதகர் தலைமறைவாகி உள்ளார். நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தோர் 80,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று போலீசாருக்கு கூறியிருந்தாலும் நிகழ்வுக்கு சுமார் 250,000 பேர் வந்துள்ளனர். […]

அமெரிக்கா உலகுக்கு சனநாயக, நீதி உபதேசம், தன்னுள் குழப்பம்

அமெரிக்கா உலகுக்கு சனநாயக, நீதி உபதேசம், தன்னுள் குழப்பம்

2021ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதி அமெரிக்க காங்கிரசில் பைடெனின் வெற்றி உறுதி செய்யப்படும் நிகழ்வை பல்லாயிரம் ரம்ப் ஆதரவாளர் வன்முறை மூலம் தடுக்க முனைந்தனர். அங்கே 5 பேர் பலியாகினர். அந்த வன்முறையில் ரம்பின் பங்களிப்புக்கு எதிராகவும் வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. ஆனால் தான் சனாதிபதி ஆகையால் அந்த குற்றச்சாட்டு வழக்குகளில் இருந்து விலக்கு (immunity) உடையவர் என்று வாதாடியுள்ளார். கீழ் நீதிமன்றம் ரம்புக்கு அவ்வாறு விலக்கு (immunity) இல்லை என்று தீர்ப்பு கூறியிருந்தது. ஆனால் […]

பொல்லு கொடுத்து அடி வாங்குகிறார் மக்கிறான்?

பொல்லு கொடுத்து அடி வாங்குகிறார் மக்கிறான்?

அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சியினர் பெருமளவில் தோல்வி அடைந்ததால் விசனம் கொண்ட பிரெஞ்சு சனாதிபதி மக்கிறான் தனது நாட்டுக்கான தேர்தலை உடனே அறிவித்து இருந்தார். நேற்று ஞாயிரு இடம்பெற்ற பிரெஞ்சு தேர்தலில் சனாதிபதி மக்கிறானின் கட்சி தோல்வி அடையும் நிலையில் உள்ளது. Marine Le Pen தலைமயிலான வலதுசாரி National Rally கட்சி முன்னணியில் உள்ளது. நேற்று இடம்பெற்றது தேர்தலின் முதல் சுற்று. முதல் சுற்றில் 50% வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகள் பெறுவோர் […]

கடல் போத்தல் திரவத்தை அருந்திய 3 மீனவர் மரணம்

கடல் போத்தல் திரவத்தை அருந்திய 3 மீனவர் மரணம்

இலங்கையின் தெற்கு கடலில் மிதந்த போத்தல்களில் இருந்த திரவத்தை மதுபானம் என்று கருதி அருந்திய 3 மீனவர் மரணமாகினர். மேலும் 3  பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மாத்தறைக்கு கிழக்கே உள்ள தங்கல்ல (Thangalle) என்ற இடத்தில் இருந்து சென்ற Devon என்ற வள்ளத்தில் சென்றவர்களே மரணித்து உள்ளனர். இவர்கள் கரையில் இருந்து சுமார் 590 km தூரத்தில் நிலைகொண்டுள்ளதால் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமே அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. இவர்கள் சில போத்தல்களை இன்னோர் வள்ளத்தினருக்கும் வழங்கியதால் அவர்களையும் […]

காசா அழிவுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத பட்டியல்

காசா அழிவுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத பட்டியல்

இஸ்ரேல் காசாவில் செய்யும் பாரிய அழிவுகளுக்கு மூல காரணம் அமெரிக்கா வழங்கும் 2,000 இறாத்தல் எடை கொண்ட குருட்டு குண்டுகளே. இஸ்ரேலுக்கு அமெரிக்கா 14,000 இவ்வகை குருட்டு குண்டுகளை (dump bomb) கடந்த 7 மாதங்களில்  வழங்கி உள்ளது என்கிறது Associated Press செய்தி நிறுவனம். காசா யுத்தத்துக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத பட்டியல்:1) 14,000 MK-84 வகை 2,000-இறாத்தல் குருட்டு குண்டுகள் 2) 3,000 Hellfire வகை வானத்தில் இருந்து நிலத்துக்கான ஏவுகணைகள் 3) 6,500 500-இறாத்தல் எடை […]

200,000 இஸ்லாமியரை கொல்வேன் என்கிறார் பா.ஜ. உறுப்பினர்

200,000 இஸ்லாமியரை கொல்வேன் என்கிறார் பா.ஜ. உறுப்பினர்

டெல்லி இந்து கோவில் ஒன்று அருகே மாடு ஒன்றின் துண்டிக்கப்பட்ட தலை வீசப்பட்டு இருந்தது என்ற செய்தியை கேள்வியுற்ற Karnell Singh என்ற பா.ஜ. அதிகாரி 200,000 இஸ்லாமியரை படுகொலை செய்வேன் என்று மிரட்டியுள்ளார். இவருடன் உரையாடிய போலீசாரிடம் 48 மணித்தியால காலத்துள் போலீசார் செய்யவேண்டியதை செய்யவேண்டும் என்றும்  அது தவறினால் தான் அங்கு வாழும் 150,000 அல்லது 200,000 இஸ்லாமியரை படுகொலை செய்வேன் என்று மிரட்டியுள்ளார். இவரின் மிரட்டல் வீடியோ இணையத்தில் உள்ளது. இதுவரை எவரும் […]

வெளிநாட்டு ஊழியத்தால் இந்தியாவுக்கு $120 பில்லியன்

வெளிநாட்டு ஊழியத்தால் இந்தியாவுக்கு $120 பில்லியன்

2023ம் ஆண்டு இந்தியர்கள் மத்தியகிழக்கு போன்ற வெளிநாடுகளுக்கு சென்று ஊழியம் செய்து இந்தியாவுக்கு அனுப்பிய (remittance) பணம் $120 பில்லியன் ஆகியுள்ளது. இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பால் அதிகம் பணம் பெற்ற நாடு இந்தியா என்கிறது உலக வங்கி. இரண்டாம் இடத்தில் $66 பில்லியன் பெற்று மெக்சிக்கோவும், மூன்றாம் இடத்தில் $50 பில்லியன் பெற்ற சீனாவும், நாலாம் இடத்தில் $39 பில்லியன் பெற்ற பிலிப்பீனும், ஐந்தாம் இடத்தில் $27 பில்லியன் பெற்ற பாகிஸ்தானும் உள்ளன. அமெரிக்காவின் சீன விரோத […]

IMF வரிகளால் கென்யாவில் ஆர்ப்பாட்டம், 23 பேர் பலி

IMF வரிகளால் கென்யாவில் ஆர்ப்பாட்டம், 23 பேர் பலி

IMF (International Monitory Fund) ஆபிரிக்க நாடான கென்யா (Kenya) மீது திணிக்கும் புதிய வரிகளை எதிர்த்து மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னால் வேறு அரசியல் கட்சிகள் இருப்பதாக தெரியவில்லை. சுமார் ஒரு கிழமையாக இடம்பெறும் மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு இதுவரை குறைந்தது 23 பேர் பலியாகி உள்ளனர்.  சில ஆர்ப்பாட்டக்காரர் பாராளுமன்றத்துள் நுழைந்து தீயிட்டுள்ளனர். IMF, World Bank ஆகியவற்றின் கென்யா அலுவலகங்களையும் முற்றுகையிட ஆர்ப்பாட்டக்காரர் கேட்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்த பின் பாண், […]

1 21 22 23 24 25 330