சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய தலமான மெக்காவுக்கு ஹஜ் பயணம் செய்தோரில் சில நூறு பயணிகள் அங்கு நிலவும் வெப்ப கொடுமைக்கு பலியாகி உள்ளனர். அங்கு வெப்பநிலை 49 C (அல்லது 120 F) ஆக இருந்துள்ளது. ஹஜ் இஸ்லாமிய (சந்திர) நாட்காட்டியை பயன்படுத்துவதால் சில ஆண்டுகளில் இந்த நிகழ்வு வெப்பமான காலங்களில் இடம்பெறும். இந்தோனேசியா தமது நாட்டவரில் குறைந்தது 165 பேர் பலியாகி உள்ளதாக கூறியுள்ளது. ஜோர்டான் நாட்டவர் 41 பேரும், துனிசியா நாட்டவர் 35 […]
ரஷ்ய சனாதிபதி பூட்டின் (Putin) சுமார் 24 ஆண்டுகளின் பின் வட கொரியாவுக்கு இன்று புதன்கிழமை பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவருக்கு வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் (Kim Jong Un) பெரும் செங்கம்பள வரவேற்பு செய்துள்ளார். இருவரும் இரண்டு மணித்தியாலங்கள் தனியே உரையாடி உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் உரையாடிய விசயங்கள், அவர்களின் இணக்கப்பாடுகள் என்பன பகிரங்கம் செய்யப்படவில்லை. பூட்டின் தனது யூக்கிறேன் யுத்தத்துக்கு தேவையான ஆயுதங்களை பெற முனைந்திருக்கலாம் என்றும், கிம் அணுமின் […]
nVIDIA என்ற பெருமளவில் AI (Artificial Intelligence) தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கணனி chip தயாரிக்கும் நிறுவனம் உலக அளவில் முதலாவது பங்குச்சந்தை (stock) பெறுமதி கொண்ட நிறுவனம் ஆகியுள்ளது. நேற்று செவ்வாய் இதன் பங்குச்சந்தை பெறுமதி $3.334 ட்ரில்லியன் ($3,334 பில்லியன்) ஆகியுள்ளது. இரண்டாம் இடத்தில் $3.317 ட்ரில்லியன் பங்குச்சந்தை பெறுமதி கொண்ட Microsoft நிறுவனமும், மூன்றாம் இடத்தில் $3.286 ட்ரில்லியன் பெறுமதி கொண்ட Apple நிறுவனமும் உள்ளன. நேற்று செவ்வாய் மட்டும் nVIDIA பங்குச்சந்தை பெறுமதி $113 […]
ராஜீவின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி முதல் தடவையாக தேர்தலில் குதிக்கிறார். கேரளா மாநிலத்து Wayanad தேர்தல் தொகுதியிலேயே பிரியங்க போட்டியிட உள்ளார். கடந்த தேர்தலில் சகோதரன் ராகுல் காந்தி கேரளாவின் Wayanad தொகுதியிலும், உத்தர பிரதேசத்து Bareli தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி அடைந்திருந்தார். ஆனால் ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியும். அதனால் ராகுல் Bareli தொகுதியை கைக்கொண்டு, Wayanad தொகுதியை கைவிட அத்தொகுதியில் […]
முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது 2016ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் பரப்புரை காலத்திலும் பின் சனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் கடுமையாக அரபு/இஸ்லாமிய காழ்ப்பை கொட்டியிருந்தார். அப்போது ரம்பின் மருமகன், மகள் Ivanka வின் கணவர், ஒரு யூதர். Jared Kushner என்ற அந்த யூத மருமகன் ரம்பின் ஆட்சியில் வெள்ளைமாளிகை பதவிகளையும் கொண்டிருந்தார். 2022ம் ஆண்டு Tiffany என்ற ரம்பின் இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகள் Michael Boulos என்ற லெபனான் என்ற நாட்டில் […]
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் Li Hongzhi என்பவர் தலைமையிலான Falun Gong என்ற சீன அமைப்பை அமெரிக்கா சீனாவுக்கு எதிராக வளர்க்க ஆரம்பித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான இந்த அமைப்பை பயன்படுத்தி சீன கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற நப்பாசையில் அமெரிக்கா இருந்தது. ஆனால் சீனா வல்லரசு அளவுக்கு வளர Falun Gong தன்னை மட்டும் வளர்க்க ஆரம்பித்தது. இது சீனாவுக்கு எதிரான பரப்புரைக்கு பயன்பட The Epoch Times என்ற செய்தி நிறுவனத்தை […]
யூக்கிறேனுள் நுழைந்து யூக்கிறேன்-ரஷ்ய யுத்தத்தை ஆரம்பித்த ரஷ்யா இன்றி இந்த யுத்தத்தின் சமாதான மாநாடு ஒன்று சுவிட்சலாந்தில் ஜூன் 15ம், 16ம் திகதிகளில் இடம்பெறுகிறது. வழமைபோலவே இந்த மாநாட்டில் மேற்கு நாடுகளும் மேற்கு சார்ந்த நாடுகளும் பங்கு கொள்கின்றன. ரஷ்யா இன்றி மாநாட்டில் அர்த்தமில்லை என்று கூறி சீனா பங்கு கொள்ளவில்லை. இந்தியா இதுவரை தனது முடிவை .அறிவிக்கவில்லை. சுமார் 160 நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் சுமார் 90 நாடுகளே பங்குகொள்ளும். கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, […]
அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்ரகன் கரோனா உக்கிரமாக இருந்த காலத்தில் சீனாவுக்கும், Sinovac என்ற சீன கரோனா தடுப்பு மருந்துக்கும் எதிராக social media பொய் கணக்குகள் மூலம் பரப்புரை செய்துள்ளது என்று Reuters செய்தி நிறுவனம் கண்டறிந்து உள்ளது. உதாரணமாக பிலிப்பீன் நாட்டுக்கு சீனா Sinovac மருந்து ஆகியவற்றை வழங்க இருந்த வேளை பென்ரகன் பிலிப்பீன் நாட்டின் பிரதான மொழியான Tagalog மூலம் சுமார் 300 Twitter பொய் social media கணக்குகளை ஆரம்பித்து பொய் பரப்புரை […]
வாழ்க்கை செலவு மிகையாக அதிகரித்த காரணத்தால் வாழ கட்டுப்படியாகாத முதல் 10 நகரங்கள் அட்டவணை செய்யப்பட்டு உள்ளன. உலகின் முதலாவது வாழ்க்கை செலவு அதிகரித்த நகரமாக ஹாங் காங் உள்ளது. இதில் 5 நகரங்கள் அமெரிக்காவிலும், 3 நகரங்கள் அஸ்ரேலியாவிலும், 2 நகரங்கள் கனடாவிலும் உள்ளன. கலிபோர்னியாவில் உள்ள Center for Demographics and Policy at Chapman University ஆய்வாளர்களும் கனடாவின் Frontier Center for Public ஆய்வாளர்களும் இணைந்து செய்த ஆய்வின்படி வாழ கட்டுப்படியாகாத உலகின் […]
Kazan என்ற ரஷ்யாவின் அணுமின் நீர்மூழ்கி கப்பலும், Admiral Gorshkov என்ற நவீன frigate வகை கப்பலும் உட்பட 4 யுத்த கப்பல்கள் புதன்கிழமை காலை கியூபாவின் தலைநகர் ஹவானா சென்றுள்ளன. இந்த கப்பல்கள் கியூபாவுக்கு 5 தின பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. மேற்படி அணுமின் நீர்மூழ்கியில் அணுவாயுதங்கள் எதுவும் இல்லை என்றே அமெரிக்கா கருதுகிறது. இந்த கப்பல்கள் கியூபா வருமுன் அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஒரு யுத்த பயிற்சியையும் செய்து உள்ளன. இந்த ரஷ்ய கப்பல்களை அமெரிக்காவின் […]