அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்யுமாறு ரம்ப் தரப்பே ஜப்பானிய பிரதமர் அபேயை (Abe) கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. . அதற்கு அமையயவே ஜப்பானிய பிரதமர் அபே ரம்புக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்குமாறு நோபல் அமைப்பை 5-பக்க கடிதம் ஒன்றில் கேட்டுள்ளார். அத்துடன் ரம்பும் அபே நோபல் அமைப்புக்கு வழங்கிய பரிந்துரை கடிதத்தின் பிரதி ஒன்றை தனக்கு வழங்கியதாகவும் கூறியுள்ளார். அதை ரம்ப் “the most beautiful copy” என்று விபரித்து […]
மலேசியாவில் சில தற்போதைய அமைச்சர்கள் பொய்யான பட்டதாரி சான்றிதழ்களை (fake degree) கொண்டுள்ளமை பகிரங்கத்துக்கு வந்துள்ளது. குறைந்தது 6 அமைச்சர்கள் இவ்வாறு இணையத்தில் பணத்துக்கு விற்கப்படும் போலி பட்டதாரி சான்றிதழ்களை பயன்படுத்தி உள்ளனர். . உதவி வெளியுறவு அமைச்சர் Marzuki Yahya தன்னிடம் பிரபல Cambridge University வர்த்தக சான்றிதழ் உள்ளதாக ஆவணப்படுத்தி இருந்தார். ஆனால் அவரிடம் உள்ளது Cambridge International University என்ற பெயரில் இணையத்தில் காசுக்கு விற்கப்பட்ட பொய்யான சான்றிதழ் ஆகும். . வீடமைப்பு […]
இந்தியாவின் கட்டுப்பாட்டுள் உள்ள காஸ்மீர் பகுதில் இடம்பெற்ற கார் குண்டுக்கு குறைந்தது 40 படையினர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி வியாழன் மாலை 3:15 மணியவில் இடம்பெற்று உள்ளது. . சுமார் 78 பாதுகாப்பு படையினரின் வாகனங்கள், 2,500 படையினருடன் ஸ்ரீநகர் (Srinagar) பகுதியில் உள்ள பெரும்தெரு ஒன்றில் பயணிகையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. குண்டை கொண்ட தற்கொலைக்காரரின் வாகனம் படையினரின் பஸ் ஒன்றுடன் மோதி வெடித்துள்ளது. . அமெரிக்கா, ரஷ்யா, […]
சீனாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே அண்மைக்காலமாக அரசியல் மோதல்கள் நிலவி வருகின்றன. இம்மோதல்களுக்கு அமெரிக்காவின் சீனாவுக்கு எதிரான கடும்போக்கே அடிப்படை காரணமாக அமைகிறது. . சீனா நிறுவனமான Huawei யின் 5G தொலைத்தொடர்பு தொழிநுட்பம் உலகம் எங்கும் பரவுவதை அமெரிக்கா அறவே விரும்பவில்லை. தனக்கு நெருக்கமான அனைத்து நாடுகளையும் Huawei யின் 5G தொழிநுட்பத்தை கொள்வனவு செய்யவேண்டாம் என்று கேட்டு வருகிறது அமெரிக்கா. . அமெரிக்காவின் விருப்பத்துக்கு இணங்க நியூசிலாந்து Huawei யின் 5G தொழில்நுட்பத்தை நியூசிலாந்தில் தடை […]
கனடிய பிரதமர் Justin Trudeau தலைமையிலான அரசு SNC-Lavalin என்ற கனடிய நிறுவனம் முற்காலங்களில் செய்த ஊழல்களை மறைக்க முயல்கின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டில் தொடர்பு கொண்டிருந்த முன்னாள் கனடிய நீதி அமைச்சர் Judy Wilson-Raybould பதவி விலகியும் உள்ளார். . SNC-Lavalin என்ற கனடிய நிறுவனம் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளன ஒரு கட்டிட நிர்மாண நிறுவனம். இந்நிறுவனம் அணு உலைகள், நிலக்கீழ் போக்குவரத்துக்கு சுரங்கங்கள் போன்ற பாரிய கட்டிடங்களை நிர்மாணிக்கும் […]
தாவர வளர்ப்பில் சீனாவும், இந்தியாவும் முன்னணியில் உள்ளதாக நாசா (NASA) இன்று திங்கள் கூறியுள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை Terra மற்றும் Aqua செய்மதிகள் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டு உள்ளது. இந்த தாவர வளர்ப்பில் பிரதானமாக காடு வளர்ப்பும், விவசாய பயிர் வளர்ப்பும் அடங்கும். நாசாவின் Nature Sustainability என்ற தலைப்பிலான ஆய்வு பத்திரிகையிலேயே இந்த ஆய்வு வெளிவந்துள்ளது. . சீனா காடு வளர்ப்பு, விவசாய […]
ஐரோப்பிய நாடுகளில் அதிவேகமாக சனத்தொகை குறையும் நாடுகளில் ஒன்று ஹங்கேரி (Hungary). இந்நாட்டின் சனத்தொகை வருடம் ஒன்றில் 32,000 ஆல் குறைந்து வருகிறது. இந்நாட்டில் சனத்தொகையை அதிகரிக்க இந்நாட்டு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றுள் ஒன்றாக இளம் தம்பதிகளுக்கு $36,000 (10 மில்லியன் உள்நாட்டு நாணயம், forint) வட்டியில்லா கடன் வழங்கப்படும். அந்த தம்பதிகள் 3 பிள்ளைகளை பெற்ற பின் அவர்களின் கடன் இரத்து செய்யப்படும். . ஐரோப்பா முழுவதும் பிற நாட்டு அகதிகளும், […]
நேற்று தாய்லாந்தின் முன்னாள் இளவரசி எதிர்கட்சி கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி இருந்தார். இதனால் மிரண்ட இராணுவ சார்பு கட்சி இராணுவ சார்பு அரசரை நாட, அவரும் முன்னாள் இளவரசி தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்துள்ளார். இது தொடர்பாக இளவரசி இதுவரை கருத்து எதையும் கூறவில்லை. . சாதாரண அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்ததால் தாய்லாந்து அரச அதிகாரத்தை இழந்த 67 வயதுடைய முன்னாள் இளவரசி, சாதாரண ஒரு பிரசைக்கு உள்ள உரிமைப்படி தான் தேர்தலில் […]
தாய்லாந்தின் இளவரசி வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்து உள்ளார். 1932 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் நடைமுறையில் உள்ள அரச தலைமை (constitutional monarchy) முறையில் அரச குடும்பத்தினர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் தடவை. இந்த இளவரசியின் சகோதரனே (King Maha Vajiralongkorn) தற்போதைய அரசர் ஆவார். . தாய்லாந்து அரசியல் இராணுவ ஆதரவு தரப்புக்கும், மக்கள் ஆதரவு தரப்புக்கும் இடையில் நீண்ட காலமாக இழுபட்டு வந்துள்ளது. மக்கள் தெரிவு செய்திருந்த […]
இந்திய பிரதமர் மோதியின் ஆட்சி காலத்தில் அங்கு வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்து உள்ளதாக அண்மையில் வெளிவந்த தரவுகள் கூறுகின்றன. இந்த உண்மை வரும் மே மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ள தேர்தலில் மோதியை பெரிதும் பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. . அரச ஆதரவில் இயங்கும் National Statistical Commission தனது கூற்றில், 2017-2018 காலத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பு இன்மை 6.1% என்றும் அது கடந்த 45 வருட காலத்தில் மிக அதிக வேலைவாய்ப்பு இன்மை என்றும் கூறியுள்ளது. . […]