பாகிஸ்தானை தாக்கின இந்திய விமானங்கள்

இந்திய விமானப்படை விமானங்கள் இன்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் உள்ளே பறந்து தாக்குதல்களை செய்துள்ளன. கடந்த கிழமை Pulwama என்ற இடத்தில் இந்திய பாதுகாப்பு போலீசார் மீது தடாத்திய தற்கொலை தாக்குதலுக்கு 40 இந்திய போலீசார் பலியாகி இருந்தனர். . இந்தியாவின் கூற்றுப்படி பாகிஸ்தானை தளமாக கொண்ட Jaish-e-Mohammmed என்ற ஆயுத குழுவே இந்த தாக்குதலை செய்துள்ளது. அத்துடன் பாகிஸ்தானில் உள்ள இந்த குழுவின் முகாம்கள் மீதே இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தியதாக இந்தியா கூறுகின்றது. . […]

கடும் காற்றில் தளம்பிய விமானம்

இன்று பிரித்தானியாவின் லண்டன் நகரில் இருந்து Gibraltar என்ற British Airways விமானம் கடும் காற்று காரணமாக தளம்பி உள்ளது. Gibraltar விமான நிலையத்தில் இறங்க முடியாத நிலையில், இந்த விமானம் இஸ்பெயின் நாட்டின் Malaga விமான நிலையத்தில் இறங்கி உள்ளது. . இன்று லண்டனில் இன்று காலை 8:25 மணிக்கு ஆரம்பித்த Flight BA 492 சேவையின் பயணிகள் காயம் எதுவும் இன்றி தரை இறங்கி உள்ளனர். . . .

இந்து சமுத்திர தீவுகளை பிரித்தானிய கைவிடவேண்டும்

இந்து சமுத்திரத்தில் உள்ள Chagos தீவுகளை பிரித்தானியா மீண்டும் Mauritius நாட்டிடம் கையளிக்க வேண்டும் என்று இன்று திங்கள் கேட்டுள்ளது ஐ.நா. நீதிமன்றம் (International Court of Justice). இந்த தீர்ப்பு சட்டபடியானது அல்ல (non-binding) என்றாலும், Mauritius நாட்டுக்கு இது ஒரு வெற்றியாகவே கருதப்படுகிறது. . இந்த தீவுகளிலேயே அமெரிக்காவின் டியேகோ கார்சியா (Diego Garcia) இராணுவ மற்றும் கடற்படை தளங்கள் உள்ளன. ஆசிய-பசுபிக் பகுதிகளில் அமெரிக்கா கொண்டுள்ள இரண்டு மிக பெரிய படை தளங்களுள் […]

பின்போட்ட அமெரிக்க-சீன வர்த்தக பேச்சு காலக்கெடு

மார்ச் 1 ஆம் திகதிக்கு முன் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் புதிய வர்த்தக இணக்கம் ஏற்படாவிடின் அமெரிக்கா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி அறவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் முன்னர் கூறியிருந்தார். அதன்படி சனிக்கிழமை 2 ஆம் திகதி முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்கா 25% இறக்குமதி வரி அறவிடவேண்டும். . ஆனால் இன்று ரம்ப் தனது கூற்றில் மார்ச் 1ஆம் திகதி ஆக […]

​வெனிசுவேலா எல்லைகளில் கலவரம், 4 பேர் பலி

வெனிசுவேலா எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் வெனிசுவேலாவுக்கு ​எடுத்துவரப்பட்ட உதவி பொருட்கள் வெனிசுவேலாவுள்ளே அனுமதிக்கப்படாதபோது எல்லை நகர்களில் கலவரங்கள் தோன்றி உள்ளன. இந்த கலவரங்களுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. . உதவி பொருட்களை எடுத்து சென்ற வாகனங்கள் சில தீயிடப்பட்டும் உள்ளன. அவற்றில் இருந்த பொருட்களை கூடி நின்ற மக்கள் மீட்டனர். . அமெரிக்காவின் உதவி பொருட்களை தனது நாட்டின் ஊடு எடுத்துவர கொலம்பியா அனுமதித்தால், வெனிசுவேலா அரசு கொலம்பியாவுடனான உறவுகளை துண்டித்தும் […]

கள்ள கசிப்புக்கு மேலும் 78 இந்தியர் பலி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் 78 பேர் கள்ள கசிப்புக்கு பலியாகி உள்ளனர். அத்துடன் 100 பேர் வரை சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மரணித்தோருள் பெண்களும் அடங்குவர். மரணித்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. . இங்கு கள்ள கசிப்பால் பாதிகப்பட்டோர் அனைவரும் Golaghat மற்றும் Jorhat பகுதி தேயிலை தோட்ட ஊழியர்களே. இவர்களுக்கு அண்மையிலேயே ஊதியம் கிடைத்திருந்தது. . Jorhat Mediacl College என்ற வைத்தியசாலையில் மட்டும் 9 பெண்களும், 11 ஆண்களும் சிகிசைகள் […]

வெனிசுவேலா-கொலம்பியா எல்லை மூடல்

உள்ளூர் நேரப்படி இன்று வியாழன் மாலை 8:00 மணியுடன் கொலம்பியா நாட்டுடனான தனது தெற்கு எல்லையை மூடுவதாக வெனிசுவேலா (Venezuela) அறிவித்து உள்ளது. அமெரிக்கா தான் கொலம்பியாவுக்கு (Colombia) எடுத்து சென்ற உதவி பொருட்களை வெனிசுவேலா உள்ளே எடுத்து செல்வதை தடுக்கும் நோக்கமே இந்த மூடலுக்கு காரணம். . அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வராத Maduro தலைமையிலான தற்போதைய அரசை கவிழ்த்து, தமக்கு ஆதரவான Guaido தலைமையிலான எதிர்க்கட்சியை அங்கு பதவியில் அமர்த்துவதே அமெரிக்காவின் நோக்கம். . எதிர்க்கட்சி தலைவர் […]

பங்களாதேஷ் கட்டிட தீக்கு 70 பேர் பலி

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் (Dhaka) இன்று புதன் இரவு ஏற்பட்ட தீக்கு குறைந்தது 70 பேர் பலியாகி உள்ளனர். இறந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. . அத்துடன் மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். கீழே இருந்த உணவு விடுதிகள், கடைகள் போன்றவற்றில் இருந்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். . பல மாடிகளை கொண்ட மக்கள் குடியிருப்பு கட்டிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இரசாயன பொருட்களும் பெருமளவில் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. […]

அமெரிக்காவுக்கு Putin நேரடி எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு ரஷ்ய ஜனாதிபதி Putin இன்று புதன் நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை ஐரோப்பிய தளங்களுக்கு நகர்த்துமாயின் ரஷ்யா மீண்டும் தனது ஏவுகணைகளை அமெரிக்க குறிகளை நோக்க வைக்கும் என்று கூறியுள்ளார் பூட்டின் (Putin). . ரம்ப் தலைமயிலான அமெரிக்கா INF என்ற அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து அண்மையில் வெளியேறியதும், அமெரிக்க அணு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு அண்மையில் நிலைகொள்ள முயல்வதும் தம்மை இந்நிலைக்கு தள்ளி உள்ளதாக பூட்டின் கூறியுள்ளார். . ரஷ்யாவிடம் […]

இந்திய சாகச விமான விபத்து, ஒரு விமானி பலி

. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இன்று செய்வாய் இடம்பெற்ற சாகச விமான பயிற்சி ஒன்றின்போது இரண்டு விமானங்கள் மோதி உள்ளன. இந்த விபத்துக்கு ஒரு இராணுவ விமானி பலியாகி உள்ளார். இரண்டு விமானிகள் காயமடைந்தும் உள்ளனர். அங்கு இடம்பெறவிருந்த Aero India 2019 என்ற விமான காட்சி மற்றும் சாகச நிகழ்வுகளில் கலந்து கொள்ள முன்பயிற்சி செய்த விமானங்களே விபத்துக்கு உள்ளாகின. . பெங்களூர் நகரில் உள்ள Yelahanka என்ற விமான தளத்திலேயே இந்த விபத்து இடம்பெற்று […]