Maoist தாக்குதலுக்கு 15 இந்திய போலீசார் பலி

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதன் இடதுசாரிகளான Maoist குழுவின் குண்டுக்கு பொலிஸாரின் வாகனம் இலக்காகியதில் 15 போலீசாரும் 1 பொதுமகனும் பலியாகி உள்ளனர். இன்னோர் போலீஸ் நிலையத்துக்கு மேலதிக பாதுகாப்பை வழங்க சென்ற போலீஸ் குழு ஒன்றே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியது. . 1960 ஆம் ஆண்டுகளில் உக்கிரமாக சண்டையில் ஈடுபட்டு இருந்த Maoist அல்லது நக்சலைட் பின்னர் சிலகாலம் தமது தாக்குதல்களை குறைத்து இருந்தனர். ஆனால் அவர்களின் தாக்குதல்கள் மீண்டும் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது. […]

ரஷ்யாவிடம் உளவுக்கு வெள்ளை திமிங்கிலம்?

அண்மையில் நோர்வே நாட்டு மீனவர் ஒருவர் வெள்ளை திமிங்கிலம் (Beluga whale) ஒன்று அதன் கழுத்து பகுதியில் பட்டி ஒன்று அணிந்திருப்பதை கண்டுள்ளார். இந்த பட்டியில் வீடியோ பதிவு செய்யும் கருவிகளை இணைக்க வசதியும் இருந்துள்ளது. அதனால் ரஷ்ய இராணுவம் வெள்ளை திமிங்கிலத்தை உளவு வேலைகளுக்கு பயன்படுத்துகிறதா என்ற சந்தேகம் இப்போது தோன்றி உள்ளது. . மேற்படி பட்டியில் “Equipment St. Petersburg” என்ற அடையாளமும் இருந்துள்ளது என்கிறார் நோர்வே நாட்டு மீன்பிடி துறை அதிகாரி Joergen […]

IS அல் பக்டாடி உரையில் இலங்கை தாக்குதல்

மிக நீண்ட காலமாக மறைந்திருந்த IS தலைவர் அல் பக்டாடி (al-Baghdadi) அண்மையில் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்து உள்ளார். . 2014 ஆம் ஆண்டளவில் அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல உலக நாடுகள் IS மீது தாக்குதல்களை ஆரம்பித்த போது அல் பக்டாடி தலைமறைவாகி இருந்தார். IS உறுப்பினர் யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கையிலும் அவர் தொடர்ந்தும் தலைமறைவாக இருந்தார். […]

சீனாவில் நரம்பு மூலம் ஆள் அடையாளம் காணல்

பாதுகாப்பான இடங்களுக்குள் அனுமதி வழங்கல், வங்கிகள் போன்ற இடங்களில் ஆளை அடையாளம் கண்டு சேவை வழங்கல் போன்ற சேவைகளுக்கு முன்னர் password கொண்ட அடையாள அட்டைகள் (ID Card) பயன்படுத்தப்பட்டன. போலி அடையாள அட்டைகள், திருடப்பட்ட அடையாள அட்டைகள் ஆகியவற்றின் பாவனை அடையாள அட்டைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்கியது. அத்துடன் திருட்டுகளை தவிர்க்க வேறு வழிமுறை காணப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டது. . அடையாள அட்டைகள் நம்பகத்தன்மையை இழந்த போது கை ரேகை (fingerprint reader), கண்விழி (iris […]

கல்முனை சுற்றிவளைப்புக்கு 15 பேர் பலி

​சனிக்கிழமை​​ இலங்கையின் கிழக்கே உள்ள கல்முனை பகுதியில் விசேட அதிரடிப்படை​யினர் வீடு ஒன்றை​ சுற்றிவளை​த்த​ போது அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. அதிரடி படையும் திருப்பி தாக்கியது. அப்போது மறைந்திருந்தவர் மத்தியில் குண்டுகளும் வெடித்தன. இறுதியில் ​அந்த வீட்டில் இருந்து ​மொத்தம் 15 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. . சுற்றிவளைப்பில் இருந்த வீட்டுக்குள் இருந்து 3 ஆண் சடலங்களும், 3 பெண் சடலங்களும், 6 சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன. மேலும் 3 தற்கொலைகாரர் என்று சந்தேகிக்கப்படுவோரின் சடலங்கள் […]

​ஈஸ்டர் தாக்குதல் செய்திகளில் தொடர்பில்லா படங்கள் ​

கடந்த ஈஸ்டர் தினத்தன்று ​இலங்கையில் உள்ள 3 கிறீஸ்தவ தேவாலயங்களிலும், 3 ஹோட்டல்களிலும் நடாத்திய தாக்குதல்கள் தொடர்பாக வெளிவந்த பல செய்திகளில் பல பழைய, தாக்குதலுக்கு தொடர்பில்லாத படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க இஸ்லாமிய பெண் ஒருவரின் படத்தையும் இலங்கை அரசு மரணித்த தற்கொலை பெண் என்று தவறாக கூறி, பின் வருத்தத்தையும் தெரிவித்து உள்ளது. . இலங்கையில் இருந்து அமெரிக்கா குடிபெயர்ந்திருந்த பெற்றாகளுக்கு அமெரிக்காவில் உள்ள Baltimore என்ற நகரில் பிறந்த Amara Majeed என்ற பெண்ணின் […]

Putin, Xi யுடன் கிம் நெருக்கம், ரம்புக்கு அழுத்தம்

ரஷ்ய ஜனாதிபதி பூட்டின் (Putin) மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் (Xi JinPing) ஆகியோருடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் வடகொரிய தலைவர் கிம் அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கு அரசியல் அழுத்தம் வழங்கியுள்ளார். . நேற்று வியாழன் கிம் ரஷ்யாவின் தூரக்கிழக்கு நகரான Vladivostok சென்று பூட்டினை சந்தித்து இருந்தார். இரு தரப்பும் பேச்சுக்கள் நலமாக முடிந்தன என்று கூறியிருந்தன. . பின்னர் பெய்ஜிங் சென்ற பூட்டின் சீன ஜனாதிபதி சியை சந்தித்து வடகொரியா தொடர்பாக உரையாடி […]

Raqqa மீட்ப்பில் 1,600 பொதுமக்கள் பலி

IS குழுவிடம் இருந்து ராக்கா (Raqqa) என்ற ஈராக்கிய என்ற நகரை மீட்க அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மேற்கொண்ட விமான மற்றும் எறிகணை தாக்குதல்களுக்கு சுமார் 1,600 பொதுமக்கள் பலியாகி இருந்ததாக Amnesty போன்ற அமைப்புகள் கூறுகின்றன. இந்த அமைப்புகளின் விசாரணை அங்கு இடம்பெற்ற 200 தாக்குதல்களுக்கு குறைந்தது 1,000 பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்கிறது. . ஆனால் அமெரிக்கா தமையிலான இராணுவ அணி தாம் 318 பொதுமக்களை மட்டுமே தவறுதலாக பலியாக்கியதாக கூறியுள்ளது. […]

யுத்த குற்ற மறைப்பில் அமெரிக்க இராணுவ அதிகாரிகள்

அமெரிக்காவின் Navy SEAL என்ற விசேட இராணுவ படைகளின் அதிகாரி (platoon leader) செய்த யுத்த குற்றங்களை (war crimes) இராணுவத்தின் மேல் அதிகாரிகள் மூடிமறைக்க முயன்றுள்ளனர் என்று இன்று வெளியிடப்பட்ட The New York Times பத்திரிகை செய்தி கூறியுள்ளது. இந்த குற்றங்களை கண்ட கீழ்மட்ட SEAL உறுப்பினர்கள் உண்மையை உயர் அதிகாரிகளுக்கு கூறியபோது, உண்மைகளை கூறிய SEAL உறுப்பினர்களே எச்சரிக்கப்பட்டனராம். . Navy SEAL commando படையின் platoon leader Edward Gallagher தம்மால் […]

ஈரான் எண்ணெய் மீதான தடை விதிவிலக்கு இரத்து

ஒபாமா காலத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு இணங்கின. அந்த இணக்கப்படி ஈரான் அணு ஆயுதத்துக்கு பயன்படும் அணு வேலைகளை நிறுத்தியது. பதிலாக ஈரான் மீதான மேற்கு நாடுகளின் தடைகளும் நீக்கப்பட்டன. அப்போது ஈரான் நாள் ஒன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் பரல் எண்ணெய்யை ஒவ்வொரு நாளும் ஏற்றுமதி செய்தது. . ஆனால் பின் பதவிக்கு வந்த ரம்ப் தன்னிசையாக மேற்படி உடன்படிக்கையில் இருந்து வெளியேறி, ஈரானுக்கு எதிராக போர்க்கொடி […]