இலங்கையர் உட்பட 93 நாட்டவர்க்கு தாய்லாந்து விசா இன்றி அனுமதி வழங்கவுள்ளது. ஏற்கனவே 57 நாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த வசதி தற்போது 93 நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. உல்லாச பயணிகளின் வருகையை அதிகரிப்பதே தாய்லாந்தின் நோக்கம். இந்த விசாவை கொண்டிருப்போர் தாய்லாந்தில் 60 தினங்கள் வரை தங்கியிருக்கலாம். இந்த திட்டம் தாய்லாந்து Royal Gazette இல் வெளிவந்த பின் நடைமுறை செய்யப்படும். இதுவரை 19 நாடுகளுக்கு மட்டும் visa-on-arrival வழங்கிய தாய்லாந்து தற்போது 31 நாடுகளுக்கு visa-on-arrival […]
உலக உச்ச சனத்தொகை 10 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கணிப்புகள் கூறியதற்கும் குறைவானதாக இருக்கும் என்றும் அந்த நிலையை விரைவில் அடைந்துவிடும் என்று ஐ.நா. நேற்று வியாழன் கூறியுள்ளது. தற்போது உலக சனத்தொகை 8.2 பில்லியன் என்றும் 2085ம் ஆண்டளவில் சனத்தொகை 10.3 பில்லியன் ஆக உச்சத்தை அடையும் என்கிறது ஐ.நா. அதன் பின் சனத்தொகை குறைந்து 10.2 பில்லியனை அடையும் என்றும் கூறப்படுகிறது. இத்தொகை முன்னர் எதிர்பார்த்த தொகையிலும் 700 மில்லியன் குறைவு. சீனா, ஜெர்மனி, […]
அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற தேர்தல் Conservative கையில் இருந்த ஆட்சியை பறித்து Labour கட்சியிடம் வழங்கியது. இந்த ஆட்சி மாற்றம் $310 மில்லியன் பணத்தை றுவண்டா (Rwanda) என்ற ஆபிரிக்க நாட்டுக்கு ‘சும்மா இருக்க’ வழங்கியுள்ளது. முன்னாள் பிரித்தானிய பிரதமர் சுனக் பிரித்தானியா செல்லும் அகதிகளை றுவண்டா அனுப்பி அங்கு வைத்து அகதி விசாரணைகளை செய்ய திட்டம் ஒன்றை வகுத்தது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆங்கில கால்வாய் ஊடு செல்லும் அகதிகளை குறைக்க முனைந்தது Conservative அரசு. […]
2026ம் ஆண்டு முதல் அமெரிக்கா தனது நீண்டதூரம் பாயும் ஏவுகணைகளை ஜெர்மனியில் மீண்டும் கொண்டிருக்க உள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்காவும், ஜெர்மனியும் புதன்கிழமை தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் SM-6 மற்றும் Tomahawk வகை ஏவுகணைகளே இவ்வாறு ஜெர்மனியில் நிலைகொள்ள உள்ளன. SM-6 கிடையாக 240 km தூரம் (நிலத்தில் இருந்து நிலத்துக்கு) அல்லது மேல் நோக்கி 460 km உயரம் (நிலத்தில் இருந்து வானுக்கு) சென்று தாக்கவல்லது. இதன் அதி உயர் வேகம் மாக் 3.5 (4,287 km/s). […]
தரை வழியாக காசா சென்ற அகதிகளுக்கான உணவு போன்ற பொருட்களை இஸ்ரேல் காசா எல்லைகளில் தடுத்து நிறுத்தியபோது அந்த தடைகளை தகர்க்க வல்லமை கொண்டிருந்த அமெரிக்கா மறைமுகமாக இஸ்ரேலின் தடைகளை ஊக்குவித்தது. ஆனாலும் உலகின் காதில் பூ சுற்ற இரண்டு பக்க நாடகங்களை அமெரிக்கா பெரும் ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்தது. முதலாவது வானத்தில் இருந்து உதவி பொதிகளை வீசுவது. இது Berlin Airlift போன்று முழு மனதுடன் செய்யப்பட்டது அல்ல. அங்கே தினமும் 3,475 தொன் பொருட்களை வீச ஆரம்பித்த திட்டம் […]
ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இடம்பெற்ற இறுதி பொது தேர்தலில் Le Pen தலைமயிலான National Rally என்ற வலதுசாரி கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை தடுக்க ஜூன் 10ம் திகதி இணைந்த 5 இடதுசாரி கட்சிகளின் New Popular Front (NPF) என்ற கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஆனால் எவரும் பெரும்பான்மை பெறவில்லை. அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோல்வி அடைந்ததால் விசனம் கொண்ட சனாதிபதி Macron திடீரென உள்நாட்டு தேர்தலை அறிவித்தார். உள்நாட்டு […]
இந்த கிழமை Kazakhstan நாட்டில் இடம்பெற்ற Shanghai Corporation Organization (SCO) அமர்வுக்கு செல்லாது தவிர்த்த பிரதமர் மோதி ரஷ்ய சனாதிபதி பூட்டினுடன் உரையாட மாஸ்கோ பறக்கிறார். யூக்கிறேன் யுத்தம் தொடர்பாகவும் மோதி பூட்டினுடன் உரையாடலாம் என்றாலும், இந்த விசயம் மோதிக்கு பிரதானமானது அல்ல. மோதிக்கு நெருக்கடி தருவது SCO அமைப்பு தனது பிரதான நாணயமாக சீனாவின் யுவான் நாணயத்தை பயன்படுத்த முனைவதே. மேற்கு நாடுகளின் தடைகள் காரணமாக ரஷ்ய தனது இறக்குமதிகள் அனைத்தையும் சீனா மூலமே […]
பிரித்தானியாவில் நேற்று நடைபெற்ற பொது தேர்தலில் பிரதமர் சுனக்கின் Conservative கட்சி 121 ஆசனங்களை மட்டும் பெற்று தோல்வி அடைய Labor கட்சி 412 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மை ஆட்சிக்கு 326 ஆசனங்கள் மட்டுமே தேவை. Conservative கட்சி கைவசம் இருந்த ஆசனங்களில் 250 ஆசனங்களை இழந்துள்ளது. அதேநேரம் Labor கட்சி மேலதிகமாக 211 ஆசனங்களை வென்றுள்ளது. ஆசன எண்ணிக்கையில் Labor பெருவெற்றி அடைத்தாலும், 1.6% மேலதிக வாக்குகளை மட்டுமே அது இம்முறை பெற்றுள்ளது. அதேவேளை […]
அஸ்ரேலியாவின் Labor கட்சி செனட்டரான (Senator) 29 வயது Fatima Payman இன்று தனது Labor கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சை செனட்டராக அமர்ந்தார். அண்மையில் அஸ்ரேலிய Green கட்சி பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் ஒன்றை சபை வாக்கெடுப்புக்கு எடுத்து இருந்தது. இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்கும் Labor கட்சி இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து. ஆனாலும் Fatima தனது கட்சியை மீறி Green கட்சியின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். Fatima மீது விசனம் […]