காசா அழிவுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத பட்டியல்

காசா அழிவுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத பட்டியல்

இஸ்ரேல் காசாவில் செய்யும் பாரிய அழிவுகளுக்கு மூல காரணம் அமெரிக்கா வழங்கும் 2,000 இறாத்தல் எடை கொண்ட குருட்டு குண்டுகளே. இஸ்ரேலுக்கு அமெரிக்கா 14,000 இவ்வகை குருட்டு குண்டுகளை (dump bomb) கடந்த 7 மாதங்களில்  வழங்கி உள்ளது என்கிறது Associated Press செய்தி நிறுவனம். காசா யுத்தத்துக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத பட்டியல்:1) 14,000 MK-84 வகை 2,000-இறாத்தல் குருட்டு குண்டுகள் 2) 3,000 Hellfire வகை வானத்தில் இருந்து நிலத்துக்கான ஏவுகணைகள் 3) 6,500 500-இறாத்தல் எடை […]

200,000 இஸ்லாமியரை கொல்வேன் என்கிறார் பா.ஜ. உறுப்பினர்

200,000 இஸ்லாமியரை கொல்வேன் என்கிறார் பா.ஜ. உறுப்பினர்

டெல்லி இந்து கோவில் ஒன்று அருகே மாடு ஒன்றின் துண்டிக்கப்பட்ட தலை வீசப்பட்டு இருந்தது என்ற செய்தியை கேள்வியுற்ற Karnell Singh என்ற பா.ஜ. அதிகாரி 200,000 இஸ்லாமியரை படுகொலை செய்வேன் என்று மிரட்டியுள்ளார். இவருடன் உரையாடிய போலீசாரிடம் 48 மணித்தியால காலத்துள் போலீசார் செய்யவேண்டியதை செய்யவேண்டும் என்றும்  அது தவறினால் தான் அங்கு வாழும் 150,000 அல்லது 200,000 இஸ்லாமியரை படுகொலை செய்வேன் என்று மிரட்டியுள்ளார். இவரின் மிரட்டல் வீடியோ இணையத்தில் உள்ளது. இதுவரை எவரும் […]

வெளிநாட்டு ஊழியத்தால் இந்தியாவுக்கு $120 பில்லியன்

வெளிநாட்டு ஊழியத்தால் இந்தியாவுக்கு $120 பில்லியன்

2023ம் ஆண்டு இந்தியர்கள் மத்தியகிழக்கு போன்ற வெளிநாடுகளுக்கு சென்று ஊழியம் செய்து இந்தியாவுக்கு அனுப்பிய (remittance) பணம் $120 பில்லியன் ஆகியுள்ளது. இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பால் அதிகம் பணம் பெற்ற நாடு இந்தியா என்கிறது உலக வங்கி. இரண்டாம் இடத்தில் $66 பில்லியன் பெற்று மெக்சிக்கோவும், மூன்றாம் இடத்தில் $50 பில்லியன் பெற்ற சீனாவும், நாலாம் இடத்தில் $39 பில்லியன் பெற்ற பிலிப்பீனும், ஐந்தாம் இடத்தில் $27 பில்லியன் பெற்ற பாகிஸ்தானும் உள்ளன. அமெரிக்காவின் சீன விரோத […]

IMF வரிகளால் கென்யாவில் ஆர்ப்பாட்டம், 23 பேர் பலி

IMF வரிகளால் கென்யாவில் ஆர்ப்பாட்டம், 23 பேர் பலி

IMF (International Monitory Fund) ஆபிரிக்க நாடான கென்யா (Kenya) மீது திணிக்கும் புதிய வரிகளை எதிர்த்து மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னால் வேறு அரசியல் கட்சிகள் இருப்பதாக தெரியவில்லை. சுமார் ஒரு கிழமையாக இடம்பெறும் மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு இதுவரை குறைந்தது 23 பேர் பலியாகி உள்ளனர்.  சில ஆர்ப்பாட்டக்காரர் பாராளுமன்றத்துள் நுழைந்து தீயிட்டுள்ளனர். IMF, World Bank ஆகியவற்றின் கென்யா அலுவலகங்களையும் முற்றுகையிட ஆர்ப்பாட்டக்காரர் கேட்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்த பின் பாண், […]

இடைத்தேர்தல் முடிவு கனடிய ரூடோ ஆட்சிக்கு ஆபத்து?

இடைத்தேர்தல் முடிவு கனடிய ரூடோ ஆட்சிக்கு ஆபத்து?

Toronto-St. Paul’s என்ற கனேடிய தொகுதியில் முன்னைய பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வு பெற்றதால் இன்று திங்கள் இடைத்தேர்தல் இடம்பெற்றது. Liberal கட்சியின் கோட்டையாக இருந்த இந்த தொகுதியில் இம்முறை Liberal வெல்ல முடியவில்லை. மொத்தம் 192 வாக்கெடுப்பு நிலையங்களில் 188 நிலையங்களின் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையிலும் தேர்தலின் வெற்றியாளரை உறுதி செய்ய முடியாது இருந்தது. அப்போது Liberal (Leslie Church) கட்சி 373 வாக்குகளால் மட்டும் முன் நின்றது. பின்னர் Conservative (Don Stewart) கட்சி 491 […]

வேகமாக வளரும் அமெரிக்கா அழிக்க முனைந்த Huawei

வேகமாக வளரும் அமெரிக்கா அழிக்க முனைந்த Huawei

Huawei என்ற சீன தொழில்நுட்ப நிறுவனம் ஒரு காலத்தில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக வளர்ந்திருந்தது. Huawei நிறுவனத்தின் வளர்ச்சியை ஏற்க மறுத்த அமெரிக்கா பல தடைகள் மூலம் அதை அழிக்க முனைந்தது. Huawei தயாரிப்புகள் (5G உட்பட) அமெரிக்காவில் பயன்படுத்தப்படுவதை அமெரிக்கா தடை செய்தது. தனது நப்பு நாடுகளையும் Huawei தயாரிப்புகளை தவிர்க்க அழுத்தியது அமெரிக்கா. அத்துடன் அமெரிக்காவின் Google நிறுவனம் தனது Android OS ஐ Huawei க்கு வழங்குவதையும் தடுத்தது. அதுவரை […]

தமிழ்நாட்டில் கசிப்புக்கு பலியானோர் தொகை 54 ஆகியது

தமிழ்நாட்டில் கசிப்புக்கு பலியானோர் தொகை 54 ஆகியது

தமிழ்நாட்டில் கள்ள கசிப்பு குடித்தமையால் பலியானோர் தொகை 54 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மேலும் பலர் வைத்தியசாலைகளில் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் மரண தொகை மேலும் அதிகரிக்கலாம். சுமார் $0.50 க்கு விற்பனை செய்யப்பட்ட கசிபுக்கு முதலாவது நபர் புதன்கிழமை பலியாகியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரின் கூற்றுப்படி 98 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கருணாபுரம் என்ற கிராமமே அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகள் என்றும் கூறப்படுகிறது. போலீசார் கசிப்பு காச்சுவோரிடம் இருந்து இலஞ்சம் பெறுவதாக […]

கையை இழந்த இந்திய தொழிலாளி மரணத்தால் ஆர்ப்பாட்டம்

கையை இழந்த இந்திய தொழிலாளி மரணத்தால் ஆர்ப்பாட்டம்

இத்தாலி தோட்டம் ஒன்றில் தொழில் செய்த Satnam Singh என்ற 31 இந்திய தொழிலாளியின் மரணம் இரண்டு நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களை தோற்றுவித்துள்ளது. இந்தியரான இவர் சட்டப்படி பதிவு செய்யாது, இத்தாலியின் வதிவுரிமை பெறாது சுமார் 2 ஆண்டுகளாக தோட்ட வேலைகள் செய்து வந்துள்ளார். கடந்த திங்கள் இவர் இத்தாலியின் Latina பகுதி தோட்டம் ஒன்றில் தொழில் செய்யும் வேளையில் இயந்திரம் ஒன்றுள் அகப்பட்டு வலது கை துண்டாடப்பட்டது. இவருக்கு உடன் மருத்துவம் வழங்காது இவரின் குடியிருப்பு அருகே […]

இந்திய NEET சோதனை குளறுபடியில், NET இடைநிறுத்தம்

இந்திய NEET சோதனை குளறுபடியில், NET இடைநிறுத்தம்

இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் University Grants Commission செய்யும் NEET (National Eligibility and Entrance Test) சோதனை கேள்விகள் சோதனை தினத்துக்கு முன் வெளியாகி ஆர்ப்பாட்டங்களையும், நீதிமன்ற வழக்குகளையும் தோற்றுவித்து உள்ளது. இதில் மொத்தம் 180 வினாக்கள் உண்டு. சரியான பதிலுக்கு 4 புள்ளிகளும், தவறான பதிலுக்கு -1 புள்ளிகளும் வழங்கப்படும். சுமார் 24 இலச்சம் மாணவர் தோற்றிய இது பல்கலைக்கழக நுழைவுக்கு மாணவரை தெரிவு செய்வது. NEET குளறுபடி பகிரங்கத்துக்கு வந்திருந்த காலத்தில் […]

சில நூறு ஹஜ் பயணிகள் வெப்ப கொடுமைக்கு பலி

சில நூறு ஹஜ் பயணிகள் வெப்ப கொடுமைக்கு பலி

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய தலமான மெக்காவுக்கு ஹஜ் பயணம் செய்தோரில் சில நூறு  பயணிகள் அங்கு நிலவும் வெப்ப கொடுமைக்கு பலியாகி உள்ளனர். அங்கு வெப்பநிலை 49 C (அல்லது 120 F) ஆக இருந்துள்ளது. ஹஜ் இஸ்லாமிய (சந்திர) நாட்காட்டியை பயன்படுத்துவதால் சில ஆண்டுகளில் இந்த நிகழ்வு வெப்பமான காலங்களில் இடம்பெறும். இந்தோனேசியா தமது நாட்டவரில் குறைந்தது 165 பேர் பலியாகி உள்ளதாக கூறியுள்ளது. ஜோர்டான் நாட்டவர் 41 பேரும், துனிசியா நாட்டவர் 35 […]

1 20 21 22 23 24 329