கியூபாவில் முதல் முறையாக சீன தயாரிப்பு ரெயில் ஒன்று சீன தயாரிப்பு ரெயில் பெட்டிகளுடன் 915 km தூர பயணத்தை மேற்கொண்டு உள்ளது. சுமார் 40 வருடங்களுக்கு பின் அங்கு சேவையில் ஈடுபடும் புதிய ரெயில் இது. . கியூபாவில் 1830 ஆம் ஆண்டிலேயே ரெயில் சேவை நடைமுறைக்கு வந்திருந்தாலும், Cold War காலத்தில் அமெரிக்காவின் தடை காரணமாக ரெயில்கள், பெட்டிகள், தண்டவாளங்கள் அனைத்தும் பராமரிப்பு அற்று இருந்தன. தற்போது அவற்றை புதுப்பிக்கும் பணிக்கு சீனா அழைக்கப்பட்டு […]
இன்று திங்கள் அதிகாலை இந்தியா தனது Chandrayaan-2 என்ற சந்திரனுக்கான ஆளில்லா பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்த பயணத்தின்போது இந்தியாவின் விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கும். மனித கலம் ஒன்று சந்திரனின் தென் துருவம் போவது இதுவே முதல் தடவை. இங்கே நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. . Geosynchronous Satellite Launch Vehicle Mark III என்ற இந்த ஏவுகலம் (Launch Vehicle) தன்னுள் 2,400 kg எடை கொண்ட orbiter, 1,500 kg எடை […]
அமெரிக்காவுள் நீர்மூழ்கி மூலம் போதை கடத்த முயன்ற நீர்மூழ்கி கப்பல் ஒன்றை அமெரிக்காவின் கரையேற பாதுகாப்பு படை (Coast Guard) பசுபிக் கரையோரம் கைப்பற்றி உள்ளது. இந்த நீர்மூழ்கியில் பல்லாயிரம் தொன் போதை இருந்ததாக கூறப்படுகிறது. . கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட போதைகளின் மொத்த பெறுமதி சுமார் $569 மில்லியன் என்று கூறப்படுகிறது. இக்காலத்தில் சுமார் 39,000 இறாத்தல் cocaine, 933 இறாத்தல் marijuuana என்பன கைப்பற்றப்பட்டு உள்ளன. . இந்த கடத்தல்களில் […]
ஈரானை அண்டிய பாரசீக வளைகுடா பகுதியில் தமது கப்பல்களுக்கு ஆபத்து உச்ச அளவில் உள்ளது (critical) என்கிறது பிரித்தானியா. அதனால் ஈரானின் கடல் பரப்புள் நுழையவேண்டாம் என்று தம்நாட்டு எண்ணெய் கப்பல்களுக்கு பிரித்தானியா கூறியுள்ளது. . நேற்று புதன்கிழமை ஈரானிய கடற்படை கப்பல்கள் பிரித்தானியாவின் British Heritage (274 மீட்டர் நீளம் கொண்டது) என்ற எண்ணெய் கப்பலை தடுக்க முனைந்ததாகவும், பின் பிரித்தானியாவின் HMS Montrose என்ற கடற்படை கப்பல் எண்ணெய் கப்பலை காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. . […]
அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவர் Sir Kim Darroch ரம்ப் அரசை அவமதித்தது பகிரங்கத்துக்கு வந்ததன் காரணமாக பதவி விலகுகிறார். . 2017 ஆம் ஆண்டில் தூதுவர் பிரித்தானியாவுக்கு அனுப்பிய இரகசிய email ஒன்றில் ரம்ப் அரசு ஒழுக்கம் அற்றது என்றும், அறிவற்றது என்றும் (clumsy and inept) குறிப்பிட்டு இருந்தார். அந்த email அண்மையில் சிலரால் பகிரங்கப்படுத்தப்பட்டது. . பகிரங்கத்துக்கு வந்த விசயத்தை அறிந்த ரம்ப் தமது அரசு இனிமேல் பிரித்தானிய தூதுவருடன் இணைந்து செயல்படாது என்று கூறினார். […]
Jet Airways என்ற இந்தியாவின் முன்னாள் விமான சேவை நிறுவனத்தை ஆரம்பித்த Naresh Goyal இந்தியாவிலிருந்து வெறியேற இந்திய நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இவர் மீது இந்திய அரசால் தொடரப்பட்டுள்ள $2.6 பில்லியன் ஊழல் வழக்கு தொடர்பாகவே இவர் இந்தியாவுள் முடக்கப்பட்டு உள்ளார். . இவர் ஆரம்பித்த Jet Airways விமான சேவை நிறுவனம் சிலகாலம் தரமான சேவையை அளித்து வந்தது. ஆனால் கடந்த சிலகாலமாக இந்த நிறுவனம் பெரு நட்டத்தில் செயல்பட ஆரம்பித்தது. இறுதியில் கடன்களை […]
சீனா இலங்கைக்கு வழங்கிய பாவித்த யுத்த கப்பல் (frigate) இன்று இலங்கை வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் சீனாவின் கடல் படையால் பயன்படுத்தப்பட்ட Tongling என்ற யுத்த கப்பல் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. . இந்த கப்பல் இலங்கைக்கு கடந்த மாதம் ஷாங்காய் நகரில் கையளிக்கப்பட்டது. இந்த கப்பலை செலுத்தும் செயல்பாடுகளை அறிய 18 இலங்கை கடற்படை அதிகாரிகளும், 92 கடற்படையினரும் சீனா சென்றிருந்தனர். . சுமார் 2,300 தொன் எடை கொண்ட இந்த […]
2019 ஆம் ஆண்டின் பெண்களுக்கான FIFA (Federation Internationale de Football Association கேடயத்தை வென்றது அமெரிக்கா. நெதர்லாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இன்று பிரான்சின் Lyon நகரில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா 2 goal களையும் , நெதர்லாந்து 0 goal களையும் பெற்றுள்ளன. . 2019 ஆம் ஆண்டின் வெற்றியும், 2015 ஆம் ஆண்டின் வெற்றியும் அமெரிக்க பெண்கள் FIFA அணிக்கு அடுத்தடுத்தான (back-to-back) வெற்றியை வழங்கி உள்ளது. இன்றைய வெற்றியுடன் அமெரிக்க பெண்கள் […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், Las Angeles நகருக்கு வடகிழக்கே சுமார் 240 km தூரத்தில் உள்ள Ridgecrest என்ற சிறு நகரில் இன்று 7.1 அளவிலான (magnitude) நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. இதே இடத்தில் 4 ஆம் திகதியும் 6.4 அளவிலான நிலநடுக்கம் நிகழ்துள்ளது. . வழமையாக 7.1 அளவிலான நிலநடுக்கம் பாரதூரமானது என்று கருதப்பட்டாலும், இன்றைய நிலநடுக்கம் Las Angeles நகருக்கு தொலைவில் இடம்பெறத்தால் பாதிப்புகள் மிக குறைவானவையே. . இன்றைய நடுக்கத்தின் காரணமாக பெரும் கல் […]
எப்போதுமே உண்மைக்கு புறம்பான விசயங்களை தன் வாய்க்கு வந்தபடி கூறி, பின் அந்த தவறுகளையும் அலாட்டி மறுக்கும் பண்பு கொண்டவர் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப். நேற்று ஜூலை 4 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலும் ரம்ப் இவ்வாறு ஒரு பெரிய தவறை கூறி, பின் முழு பூசணிக்காயை சோற்றுள் மறைப்பது போல் மறைக்கவும் முயன்றுள்ளார் ரம்ப். . ரம்ப் மேடையில் ஆற்றிய தனது உரையில் அமெரிக்க புரட்சியாளர் 1770 ஆம் ஆண்டுகளில் விமான நிலையங்களை கைப்பற்றினர் […]