பிரித்தானியாவின் புதிய பிரதமராக Boris Johnson இன்று தெரிவு செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய பிரதமர் Theresay May பதவி விலகுவதால், Conservative கட்சிக்குள் இடம்பெற்ற உட்கட்சி போட்டியில் Johnson 92,153 வாக்குகளையும், இரண்டாம் இடத்தில் உள்ள Jeremy Hunt 46,656 வாக்குகளையும் பெற்றுள்ளனர். . Johnson புதன்கிழமை தனது பதவியை ஏற்பார் என்று கூறப்படுகிறது. . Brexit விவகாரத்தால் குழம்பி உள்ள பிரித்தானியா திடமான ஆட்சி ஒன்றை அமைக்க முடியாது உள்ளது. Brexit விவகாரத்தை கையாள முடியாத […]
இந்தியாவினால் ஒரு கிழமைக்கு முன்னர் சந்திரனுக்கு ஏவப்பட இருந்த Chandrayaan-2 என்ற விண்கலம் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன் முதல் ஏவல் முயற்சி கோளாறு காரணமாக இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டது. . Indian Space Research Organization (ISRO) இன்று திங்கள் அதிகாலை 2:43 மணிக்கு இந்த கலத்தை Satish Dhawan Space Center என்ற தளத்தில் இருந்து ஏவி உள்ளது. . வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி இறங்கு கலம் சந்திரனின் தென்துருவ பகுதியில் […]
ஆந்திர பிரதேசம், கர்நாடக, தமிழ்நாடு, கேரள ஆகிய நான்கு தென் மாநிலங்களும் இணைந்து 1997 ஆம் ஆண்டில் திராவிட மொழிகளை செம்மைப்படுத்த பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பித்தன. குப்பம் நகரில் அமைத்துள்ள இந்த Dravidian University 2005 ஆம் ஆண்டில் தமிழ் Department ஒன்றை மொத்தம் நான்கு Faculty களுடன் ஆரம்பித்து இருந்தது. . இந்த வருடம் இங்கு தமிழில் MA பயில 20 மாணவர்களை உள்வாங்க பீடம் தீர்மானித்து இருந்தது. ஆனால் அங்கு MA பயில எவரும் […]
இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் வழங்கி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இலங்கைக்கான தூதுவர் Alaina Teplitz ஒரு நேர்முகத்தை ரூபவாகினிக்கு வழங்கி உள்ளார். . Status of Forces Agreement (SoFA), Visiting Forces Agreement (VFA) ஆகிய இரண்டு உடன்படிக்கைகளுக்கே அமெரிக்கா அழுத்தம் வழங்கி வருகிறது. இந்த இரண்டு உடன்படிக்கைகளும், நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க படைகள் இலகுவில் இலங்கைக்கு நுழைய வழிவகுக்கும். . மேற்படி உடன்படிக்கைகைகள் […]
இரண்டு பிரித்தானிய கொடி கொண்ட எண்ணெய் கப்பல்களை (tanker) ஈரான் கைப்பற்றி உள்ளதாக பிரித்தானியா கூறியுள்ளது. Stena Impero என்ற எண்ணெய் காவும் கப்பலும் MV Mesdar என்ற எண்ணெய் காவும் கப்பலும் ஈரானால் கைப்பற்றப்பட்டு உள்ளன. . வெள்ளிக்கிழமை ஈரானின் 4 யுத்த கப்பல்களும், 1 ஹெலியும் முதலில் Stena Impero என்ற கப்பலை சுற்றி வளைத்துள்ளன. பின்னர் இந்த எண்ணெய் கப்பல் ஈரானின் துறைமுகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. . இந்த விசயம் தொடர்பாக கருத்து […]
சுமார் 100 வருடங்களின் பின் முதல் முறையாக மகோ ரெயில் நிலையம் முதல் ஓமந்தை ரெயில் நிலையம் வரையான தண்டவாளம் இந்தியாவின் உதவியுடன் $91.26 மில்லியன் செலவில் புதிப்பிக்கப்படவுள்ளது. சுமார் 130 km நீள மேற்படி பாதையில் தற்போது 60 km/p வேகத்தில் செல்லும் வண்டிகள் புதிய பாதையில் 120 km/h வேகத்தில் செல்லக்கூடுயதாக இருக்கும். . இந்த உடன்படிக்கை நேற்று ஜூலை 18 ஆம் திகதி இலங்கை அரசுக்கும், இந்தியாவின் IRCOM International Ltd நிறுவனத்துக்கும் […]
தென்னிந்தியாவை தளமாக கொண்ட ஆனந்தபவான் என்ற உணவாகத்தை ஆரம்பித்த ராஜகோபாலன் தனது 71 ஆவது வயதில் மரணமாகியதாக அவரின் சட்டத்தரணி கூறி உள்ளார். இந்த மாதம் 9ஆம் திகதியே இவருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. . 2001 ஆம் ஆண்டில் இவரின் ஊழியர் ஒருவர் காணாமல்போயிருந்தார். தொலைந்தவரின் மனைவி ராஜகோபாலனே காரணம் என்று போலீசாரிடம் கூறி இருந்தார். சில நாட்களின் பின் ஊழியரின் சடலம் காடு ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது. ஊழியர் கழுத்து […]
அமெரிக்காவின் மிக புதிய யுத்த விமானமான F-35 தயாரிப்பில் இருந்து துருக்கியை நீக்கி உள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி துருக்கி S-400 என்ற வல்லமை மிக்க ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்ததே அமெரிக்காவின் சீற்றத்துக்கு காரணம். . முன்னர் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்படி கடந்த கிழமை ரஷ்யாவில் இருந்து சிறுதொகுதி S-400 ஏவுகணைகள் துருக்கி வந்துள்ளன. . துருக்கி NATO அமைப்புள் இரண்டாவது பெரிய இராணுவத்தை கொண்ட நாடு. அத்துடன் NATO வின் முதல் எதிரி […]
திங்கள் கிழமை, ஜூலை 16 ஆம் திகதி, அதிகாலை 2:51 மணிக்கு சந்திரனை நோக்கி விண்கலம் ஒன்று இந்தியாவால் ஏவப்பட்டு இருந்தமை இயந்திர கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்த கலம் இன்னோர் நாளில் ஏவப்படும் என்று கூறப்படாலும், அதற்கான நாளை இந்தியா இதுவரை அறிவிக்கவில்லை. . Chandrayaan-2 என்ற இந்த கலம் ஏவப்பட 56 நிமிடங்கள், 24 செக்கன்கள் இருக்கையிலேயே இயந்திர கோளாறு அறியப்பட்டு, ஏவல் இடைநிறுத்தப்பட்டது. . இந்த விண்கலத்தின் மொத்த நீளம் 44 […]
சீனாவின் SINOPEC (China Petrolium and Chemical Corporation) என்ற எண்ணெய் நிறுவனம் தனது கிளையை இலங்கையில் ஆரம்பித்து உள்ளது. இந்த கிளை நிறுவனம் Fuel Oil Sri Lanka Company Ltd என இலங்கையில் பதியப்பட்டு உள்ளது. . அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தளம் கொண்ட இந்த நிறுவனம் அவ்வழியால் செல்லும் கப்பல்களுக்கு fuel oil வகை எண்ணெய் வழங்கும். . SINOPEC GROUP உலகத்திலேயே மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகும். இதன் வருட வருமானம் […]